தொடர்ந்துகொலை செய்யப்படும் மனித உயிர்கள் இலங்கை ஒரு பாதுகாப்பற்ற நாடு தேவையில்லாத பயணங்களைத்தவிர்க்கவும் உங்களிற்கும் இந்த நிலைவரலாம்,
பாரிய குழு மோதல் - எஸ்.ரி.எப் அதிகாரி உட்பட இருவர் வெட்டிப் படுகொலை..!
இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் காவல்துறை விசேட அதிரடிப் படை அதிகாரி ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
தனிப்பட்ட தகராறு காரணமாக இடம்பெற்ற இந்தக் குழு மோதலில் இருவரும் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கிரியுல்ல பிரதேசத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
பாரிய குழு மோதல் - எஸ்.ரி.எப் அதிகாரி உட்பட இருவர் வெட்டிப் படுகொலை..! | A Police Officer Was Killed
சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளைக் கிரியுல்ல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
போர் விமானத்தை சுட்டுவீழ்த்த முயன்ற சீன கப்பல்! (Photo) சீன போர்க்கப்பல் அவுஸ்ரேலியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தும் நோக்கில் அந்த விமானத்தின் மீது லேசர் ஒளியை பாய்ச்சியதாக அவுஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியது. வடக்கு அவுஸ்ரேலியாவின் அரபுரா கடலில் சீன கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இது போர் விமானத்தில் இருந்த வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும் அவுஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக சீனா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் அவுஸ்ரேலிய போர் விமானம் மீது லேசர் ஒளியை பாய்ச்சியது சீனாவின் மிரட்டல் நடவடிக்கை என கூறி அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாத்தியம் உள்ளது. இது ஒரு மிரட்டல் செயலே தவிர வேறு ஒன்றுமில்லை. இதுபோன்ற மிரட்டல் செயல்களை அவுஸ்ரேலியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது’’ என்று கூறினார்.
கருத்துகள்