முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 422 பொலி கதைகளை நம்பி தயவு செய்து எவரும் பணங்களைக்கொடுக்க வேண்டாம்

எமதுதலைவர் உயிருனும் மேலாக நேசித்த தமிழக்கொள்ளைக்காகப்போராடி தனது குடும்பத்தோடு தன்னை அற்பணித்து விட்டார் என்பதை அனைத்து மக்களிற்கும் தெரியப்படுத்துகின்றேன்,
தலைவர் உயிரோடு உள்ளார் என்று பணம் பறிப்பவர்கள் இந்தியாவில் தான் முதலில் அதிகம் இருந்தார்கள், ஆனால் இப்பொழுது வெளிநாடுகளிலும் இப்படியான பிரச்சாரங்கள் தீவிரமாக நடைபெறுகின்றது, எவரும் ஏமாந்து பணங்களைக்கொடுக்க வேண்டாம், இரண்டு வருடங்களிற்கு முன்னர் இந்தியாவில் இருந்து ஒருதர் என்னை தொடர்வு கொண்டார் தலைவரை தான்தான் வைத்து பாதுகாப்பதாகவும் தனது தாலிக்கொடியெல்லாம் அடகில் இருப்பதாகவும் பணம் அனுப்புமாறும் ஐந்து நாட்களில் அவரின் நேரடி உரையை வெளியிடப்போவதாகவும் என்னிடம் குறிப்பட்டார், அதற்கு நான் அவர் எனக்கு ஒரு பெயர் வைத்தவர் அதை நான் சொல்லுகின்றேன் அவரிடம் கேளுங்கள் இவரை உங்களிற்கு தெரியுமா? என்று அதற்குப் பின் எவளவு பணம் என்றாலும் நான் தருகிறேன் என குறிப்பட்டேன், அதற்கு அவர் தலைவர் மனநிலை பாதிக்கப்பட்டுயிருக்கின்றார் அவர் கதைக்கக்கூடிய நிலையில் இல்லை என்று என்னிடம் சொல்லி போனை கட்பண்ணி விட்டார்,தலைவர் இருக்கிறார் காசு குடுங்கோ!! புலம்பெயர் அலப்பறைகளின் அடுத்த கூத்து 'தலைவர் உயிரோடு இருக்கிறார்... துனைவியார் மற்றும் மகளும் இருக்கிறார்கள்... நெத்தியில பொட்டுவைத்தவரும் இருக்கிறார்..' 12.11.2022 அன்று சுவிட்சலாந்தில் இரகசியமாக நடைந்த கூட்டமொன்றில் வைத்து சில வர்த்தகர்களிடம் இந்த கதை அவிழ்க்கப்பட்டது. கதையை அவிழ்த்துவிட்டவர்: சுவிஸ்கிளையின் முன்நாள் நிதிப்பொறுப்பாளர். 'தலைவருக்கு சுகமில்லை. அவருக்கு மருத்துவம் செய்யக் காசு வேனும். அவரது குடும்பத்தை பாதுகாப்பான ஒரு இடத்துக்கு நகர்த்தவேணும். உதவுங்கள்..' இதுதான் கதையின் கிளைமாக்ஸ். கதையைக் கேட்டு விறைத்துநின்றவர்களுக்கு..' நீங்கள் விரும்பினால் அவர்களுடன் பேசலாம். கூட்டிப்போயும் காட்டுறம். அதுக்குப் பிறகாவது நம்புங்கள்..' என்று நம்பிக்கையூட்டப்பட்டது. தொடர்ந்தும் யோசித்துக்கொண்டிருந்த ஒருசிலர் ஒரு விட்டுக்கு அழைத்துச்செல்லப்பட்டார்கள். அங்கு முகமூடியணிந்த இரண்டு பெண்கள் காண்பிக்கப்பட்டார்கள். போன வர்த்தகர்கள் யாருமே குறிப்பிடப்பட்ட அந்த இரண்டு நபர்களையும் முன்னப்பின்னப் பார்த்ததும் இல்லை. தொலைபேசியில் கூட பேசியதும் இல்லை. ஆர்வக்கோளாரினால் பெருமளவு பணம் வழங்கியிருக்கின்றார்கள். பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகளிலுள்ள தமிழ் வர்த்தகர்களுக்கும் இந்த கதை அவிழ்க்கப்பட்டுவருகின்றது. வீட்டை விற்று, தமது வியாபாராத்தை விற்று நிதி வழங்கிய சம்பவங்கள் எல்லாம் நடந்திருக்கு. இந்தக் கதை சொஞ்சம் கொஞ்சமாக வெளியே பரவி, தலைவரின் மெய்பாதுகாவலர்களாகக் கடமையாற்றிய போராளிகள் சிலரது காதுகளுக்குச் சென்று, அவர்கள் அதனை உறுதிப்படுத்த விரைந்த போது அவர்களுக்குப் பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டது. அதாவது தலைவரை நன்கு தெரிந்தவர்கள் யாருக்குமே இந்தக் கதை அவிழ்த்துவிடப்படவில்லை. கொஞ்சம் தள்ளி நிற்கிற ஆர்வக்கோளாறுகளுக்கு மாத்திரம்தான் கதை பரிமாறப்படுகின்றது. புலம்பெயர் மண்ணில் இன்றைக்கு பெரிய பேசுபொருள் இதுதான். பணப்பறிப்பு. புலம்பெயர் தமிழர்களின் நிதியை முடக்குவது போன்றனவற்றைக் கடந்து, இந்த நாடகத்திற்கு வேறு சில முக்கிய காரணங்களும் இருப்பதாக எச்சரிக்கின்றார்கள் சில முன்நாள் போராளிகள். ஒரு உயரிய தியாகத்தை கொச்சைப்படுத்துவது. ஒரு வீர வரலாற்றை மாற்றி எழுதுவது. தமிழ் மக்கள் நினைவுகூறக்கூடிய திகதிகளை குழப்புவது. தமிழ் மக்களை தொடர்ந்து குழப்பநிலையிலேயே வைத்திருப்பது. கட்டமைப்புக்களிடையே பிளவுகளை ஏற்படுத்துவது தமிழ் இனத்தைக் குறிவைத்து தமிழ் மக்களின் எதிரி மேற்கொள்ளுகின்ற திட்டமிட்ட ஒரு புலனாய்வுச் செயற்பாடு என்று இந்தச் செயற்பாடு பற்றி உறுதியாகக் கூறுகின்றார்கள் சில முன்நாள் போராளிகள். எனவே அனைவரும் இவ்விடடத்தில் தெளிவாகயிருக்கவும்,

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?