திணறும் அரசாங்கம்! அமைச்சர் பந்துல வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
நாட்டில் கொள்கை ரீதியாக தற்போது பணம் அச்சிடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardena) தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (17-01-2023) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
திணறும் அரசாங்கம்! அமைச்சர் பந்துல வெளியிட்ட அதிர்ச்சி தகவல் | Stop Printing Money Sri Lanka Government Bandula
“எமது வெளிநாட்டுக் கடனை செலுத்த முடியாது என்பதையும், அந்தக் கடன்களை மறுசீரமைக்க வேண்டும் என்பதையும் உலகிற்கு மிகத் தெளிவாக எடுத்துரைத்துள்ளதால், இந்த நேரத்தில், நாங்கள் கடன்களைப் பெற முடியாது.
பணத்தை அச்சிடவும் முடியாது. பணத்தினை அச்சிட போனால் எதிர்காலத்தில் கடன் கிடைக்காது. ஒரு கொள்கையாக, பணம் செலுத்தாததற்காக பணம் அச்சிடுவதை அரசாங்கம் நிறுத்திவிட்டது.
திணறும் அரசாங்கம்! அமைச்சர் பந்துல வெளியிட்ட அதிர்ச்சி தகவல் | Stop Printing Money Sri Lanka Government Bandula
இதனால் அன்றாட செலவுகளை சமாளிக்க முடியாமல் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றோம்.
டிசம்பர் மாதம் எவ்வாறு செலவுகள் மேற்கொள்ளப்பட்டன என்பது குறித்த புள்ளிவிபரங்களை வழங்குமாறு நிதி அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதன்படி, இலங்கை திறைசேரிக்கு 141 பில்லியன் வரி மற்றும் வரி அல்லாத படிவங்களைப் பெற்றுள்ளது.
திணறும் அரசாங்கம்! அமைச்சர் பந்துல வெளியிட்ட அதிர்ச்சி தகவல் | Stop Printing Money Sri Lanka Government Bandula
சம்பளம் வழங்க 88 பில்லியன் செலவிடப்பட்டுள்ளது. ஓய்வூதியத்திற்காக 30 பில்லியன். உரங்களைப் பெற 6.5 பில்லியன். சுகாதார அமைச்சிற்கு தேவையான மருந்துகளுக்கு 8.7 பில்லியன். மற்ற தினசரி பயணச் செலவுகள் போன்ற நிர்வாகச் செலவுகள் 154 பில்லியன்.
அப்படியென்றால் 141ல் 154ஐ எப்படிப் பெறுவது? மாற்று வழி கண்டுபிடிக்க முடியவில்லை. இதனை நிர்வகிப்பது சாத்தியமற்றதாகிவிட்டது.” எனத் தெரிவித்திருந்தார்
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்