விடுதலைப் புலிகள், கூட்டமைப்பு பிளவு - கருணா தரப்பு அம்பலப்படுத்திய விடயம்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை எவ்வாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க பிளவுபடுத்தினாரோ அதேபோன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் பிரித்துள்ளதாக கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உப தலைவர் ஜெயா சரவணன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைக் கூறிய அவர், நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியும் போட்டியிடவுள்ளதாக தெரிவித்தார்.
தமிழ் கட்சிகள் பிரிவு
விடுதலைப் புலிகள், கூட்டமைப்பு பிளவு - கருணா தரப்பு அம்பலப்படுத்திய விடயம் | Ltte Tna Split Ranils Plan Karuna Side Opinion
மேலும் கருத்து வெளியிட்ட அவர், “ தற்போது தமிழ் கட்சிகள் பிரிந்துவிட்டால் எங்களுடைய வாழ்க்கை இழந்து போய்விட்டதாக பேசுகின்றார்கள்.
ஒன்றாக இருந்து தங்கள் தங்களுடைய குடும்பங்களையும், சொந்த பந்தங்களையும் வளர்த்ததைத் தவிர தமிழ் மக்களுக்கோ தமிழர்களுடைய பிரச்சினைகளுக்கோ என்ன நடைபெற்றுள்ளது.
மாவீரர்தினம் வந்ததும் மண்வெட்டியை தூக்கி வைத்துக்கொண்டு வெளிநாடுகளிலிருந்து பணம் பெற்றுக்கொள்வதைத் தவிர வேறு என்னத்தை செய்தார்கள், இனியும் ஒன்றும் நடைபெறப்போவதில்லை.
பிரிந்து செல்வது நல்லது. பிரிவதால் எமக்கு ஒரு கவலையும் இல்லை.
ஏனைய கட்சிகள் எங்களுக்கு அழைப்பு விட முடியாது. ஏனென்றால் நாங்கள் தனித்துவமாக போய் கொண்டு இருக்கின்றோம். அழைப்புக்கள் தலைமைக்கு வந்த வண்ணம் தான் உள்ளது.
ஆனால் எங்களுடன் இணைந்து செயற்பட விரும்பினால் லஞ்சம், ஊழல் தவிர்த்து வேலை செய்ய விரும்பினால் யாராக வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம்.
ரணில் தந்திரம் மிக்கவர்
விடுதலைப் புலிகள், கூட்டமைப்பு பிளவு - கருணா தரப்பு அம்பலப்படுத்திய விடயம் | Ltte Tna Split Ranils Plan Karuna Side Opinion
அதிபர் ரணில் விக்ரமசிங்க தந்திரம் மிக்கவுள்ள ஒருவர். 70 வருட பிரச்சினையை 4 ஆம் திகதிக்குள் தீர்வு தருவதாக அறிவித்துவிட்டார்.
பின்னர் தமிழ் கட்சிகள் அனைத்தும் சேர்ந்திருந்தால் தான் தீர்வை கொடுக்க முடியும் என்பதை அறிவிப்பார். அதற்காக தான் தமிழ் கட்சிகள் உடைக்கப்பட்டுள்ளது.
முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உடைத்தார். இப்போது கூட்டமைப்பை உடைத்தார் அவ்வளவே” - என்றார்.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்