யாழில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்! ஆனையிறவில் மடக்கிய பொலிஸார்
யாழ்ப்பாணத்திலிருந்து பளை நோக்கி சென்று கொண்டிருந்த கப் வாகனத்தை வழிமறித்து வாகனத்தை கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
யாழில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்! ஆனையிறவில் மடக்கிய பொலிஸார் | Cup Vechile Hijacking Incident Jaffna
வாகனத்தில் இருந்தவர்கள் மீது தாக்குதல்
யாழ்ப்பாணத்திலிருந்து பளை வைத்தியசாலைக்கு பயணித்துக்கொண்டிருந்த கப் வாகனத்தை பெரிய பளை சந்திக்கு அருகில் மூவர் வீதியை மறித்து, வாகனத்தில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு வாகனத்தை கடத்திச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் ஆனையிறவுச் சந்தியில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அதை தொடர்ந்து, வாகனததை கடத்திய கொள்ளையர்களை தடுத்து நிறுத்த பொலிஸார் முயன்றுள்ளனர். எனினும், சந்தேக நபர்கள் பொலிஸாரின் உத்தரவை மீறி வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் வாகனங்களை துரத்திச் சென்று வாகனத்தை கைப்பற்றியதுடன், 3 சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் 24, 30 மற்றும் 34 வயதுடையவர்கள் என்பதுடன் மாங்குளம், பூவரசங்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
போர் விமானத்தை சுட்டுவீழ்த்த முயன்ற சீன கப்பல்! (Photo) சீன போர்க்கப்பல் அவுஸ்ரேலியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தும் நோக்கில் அந்த விமானத்தின் மீது லேசர் ஒளியை பாய்ச்சியதாக அவுஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியது. வடக்கு அவுஸ்ரேலியாவின் அரபுரா கடலில் சீன கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இது போர் விமானத்தில் இருந்த வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும் அவுஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக சீனா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் அவுஸ்ரேலிய போர் விமானம் மீது லேசர் ஒளியை பாய்ச்சியது சீனாவின் மிரட்டல் நடவடிக்கை என கூறி அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாத்தியம் உள்ளது. இது ஒரு மிரட்டல் செயலே தவிர வேறு ஒன்றுமில்லை. இதுபோன்ற மிரட்டல் செயல்களை அவுஸ்ரேலியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது’’ என்று கூறினார்.
கருத்துகள்