முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 385 சுமந்திரனையும் சம்மந்தனையும் தமிழர்கள் ஒருபோதும் நம்பக்கூடாது,

இனப்படுகொலை என்ற உன்மையான வளியில் சென்று நீதி கோராமல் மாறாக அது நடக்கவில்லையென்று சிங்களவர்களை பாதுகாற்ற பச்சோந்திகள்,
யார் தமிழ்க் கூட்டமைப்பினர்? தமிழ் மக்களே தீர்மானிப்பர்!!! சுமந்திரன் எம்.பி. திட்டவட்டம். January 15th, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டது. யார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் என்பதை தமிழ் மக்களே தீர்மானிப்பர். அதற்கு நீண்ட காலம் காத்திருக்கத் தேவையில்லை. இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலிலேயே அது தெரியும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார். ரெலோ, புளொட் கட்சிகள் மேலும் மூன்று கட்சிகளைச் சேர்த்துக்கொண்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றும், இலங்கைத் தமிழரசுக் கட்சி தன்பாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிவிட்டது என்றும் ஒருதலைப்பட்சமாக அறிவித்திருக்கின்றமை குறித்து கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். கடைசியாகக் கொழும்பில் சம்பந்தன் ஐயாவின் இல்லத்தில் நடைபெற்ற கூட்டமைப்பின் பங்காளி கட்சி கூட்டத்தில் வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை மூன்று கட்சிகளும் தத்தம் விருப்பப்படி தனித்தனியாகவோ, தமக்குள் கூட்டாகவோ எதிர்கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது. எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரை ஒரு கட்சியும் பயன்படுத்தக் கூடாது என சம்பந்தன் ஐயாவிடம் ஓர் உறுதிமொழி வழங்கப்பட்டது. அதனை ரெலோ, புளொட் கட்சிகள் இப்போது மீறி உள்ளன. அதற்காக நாம் அவர்களுடன் மோதுவதோ, அவ்விடயத்தை சவாலுக்கு உள்ளாக்கவோ போவதில்லை. நன்றாக அந்தப் பெயர்களைப் பயன்படுத்தட்டும். இப்படித்தான் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயரையும், சின்னத்தையும் முடக்கி ஆனந்தசங்கரி கொண்டு போன போது, அதனை அப்படியே சும்மா விட்டு விடுங்கள், சட்டச்சவாலுக்குக் கூட உட்படுத்த வேண்டாம் என்று உறுதியாக கூறினார் சம்பந்தன். சும்மா விடுங்கள் என்றார் சம்பந்தன். சங்கரியையும் அவரது கட்சியையும் மக்கள் சும்மா விட்டு விட்டார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெயர் விடயத்திலும் சும்மா விட வேண்டியதுதான். தமிழ் மக்கள் பார்த்துக் கொள்வார்கள்” – என்றார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?