மனைவியின் 12 வயது சகோதரியை கர்ப்பமாக்கிய கணவருக்கு 39 வருட கடூழிய சிறை
மனைவியின் 12 வயது சகோதரியான சிறுமியை கர்ப்பமாக்கிய கணவருக்கு 39 வருட கடூழிய சிறைத் தண்டனையும், 30,000 ரூபா அபராதமும், இரண்டரை இலட்சம் ரூபா நட்ட ஈடும் வழங்குமாறு ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
திஸ்ஸமஹாராம காவல்துறை எல்லையில் வசிக்கும் 36 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவரின் மனைவி 14 வருடங்களுக்கு முன்னர் அதாவது 2009 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி சத்திர சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, இரண்டரை வயது குழந்தையை அவரது 12 வயது சகோதரி கவனித்துக் கொண்டிருந்தார்.
கடுமையான பாலியல் துஷ்பிரயோகம்
மனைவியின் 12 வயது சகோதரியை கர்ப்பமாக்கிய கணவருக்கு 39 வருட கடூழிய சிறை | Man Raped Wifes Sister Sentenced To Prison
மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல், சம்பந்தப்பட்ட நபர் பல சந்தர்ப்பங்களில் மனைவியின் சகோதரியை கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
பின்னர் சம்பவம் தொடர்பில் திஸ்ஸமஹாராம காவல்துறைக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு சந்தேகநபர் கைது செய்யப்பட்டு திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
3 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தாக்கல்
மனைவியின் 12 வயது சகோதரியை கர்ப்பமாக்கிய கணவருக்கு 39 வருட கடூழிய சிறை | Man Raped Wifes Sister Sentenced To Prison
அவருக்கு எதிரான பூர்வாங்க விசாரணையின் பின்னர், சட்டமா அதிபர் 15.02.2013 அன்று ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றில் 3 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தாக்கல் செய்தார்.
அதன்படி, நேற்று (ஜன. 18) மாலை, வழக்கு முதலில் விசாரணைக்கு வந்தபோது, சந்தேக நபர் உரிய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்ற நீதிபதி, சந்தேகநபருக்கு ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் 13 வருடங்கள் வீதம் 3 குற்றச்சாட்டுகளுக்கு 39 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்தார்.
போர் விமானத்தை சுட்டுவீழ்த்த முயன்ற சீன கப்பல்! (Photo) சீன போர்க்கப்பல் அவுஸ்ரேலியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தும் நோக்கில் அந்த விமானத்தின் மீது லேசர் ஒளியை பாய்ச்சியதாக அவுஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியது. வடக்கு அவுஸ்ரேலியாவின் அரபுரா கடலில் சீன கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இது போர் விமானத்தில் இருந்த வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும் அவுஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக சீனா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் அவுஸ்ரேலிய போர் விமானம் மீது லேசர் ஒளியை பாய்ச்சியது சீனாவின் மிரட்டல் நடவடிக்கை என கூறி அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாத்தியம் உள்ளது. இது ஒரு மிரட்டல் செயலே தவிர வேறு ஒன்றுமில்லை. இதுபோன்ற மிரட்டல் செயல்களை அவுஸ்ரேலியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது’’ என்று கூறினார்.
கருத்துகள்