முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 367 விடுதலைப் புலிகளை அழித்ததை எண்ணி தொடர்ந்து கவலைப்படும் சிங்களத் தலைவர்கள்,

மத்திய வங்கி மீது விடுதலைபுலிகள் தாக்கியபோதும் நாடு ஸ்தம்பிதமடையவில்லை - சந்திரிக்கா
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துக்கு முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன பொறுப்புக் கூற வேண்டும். இதுபற்றி, நான் அறியவில்லை, எனக்கு கூறவில்லையென மைத்திரி குறிப்பிடக் கூடாதென முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். முன்னாள் பிரதமர் அமரர் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண் டாரநாயக்கவின் 124 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு காலமுகத்திடலில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அவரது உருவச் சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை (08) மலரஞ்சலி செலுத்தி,மத வழிபாட்டில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்ட வாறு குறிப்பிட்டார். இந்நிகழ்வில் பிரதமர் தினேஷ் குணவர்த்தன, அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா,மஹிந்த அமரவீர மற்றும் இராஜாங்க அமைச் சர் ரஞ்சித் சியம்பலாபிடிய,மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான குமாரவெல்கம,பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்,துமிந்த திஸாநாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க மேலும் குறிப்பிட்டதாவது,
ஆட்சியிலிருக்கும் போது தவறிழைக்காமல் சிறந்த முறையில் செயல்பட்டால், பதவி விலகிய பின்னரும் மக்களின் ஆதரவு கிடைக்கும். இல்லாவிட்டால் காலி முகத்திடலில் தாக்குதலை எதிர்கொள்ள நேரிடும்.மக்கள் மத்தியில் செல்வதற்கு எனக்கு எவ்வித அச்சமும் கிடையாது. மிகமோசமான பொருளாதார நெருக்கடியில் மக்கள் மத்திய வங்கி மீது விடுதலைபுலிகள் தாக்கியபோதும் நாடு ஸ்தம்பிதமடையவில்லை - சந்திரிக்கா | Ltte Attacked The Central Bank தற்போது,நாட்டு மக்கள் மிகமோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.அரசியல் செய்வதை விடுத்து மக்களுக்கு உணவு வழங்கும் நடவடிக்கையில் தற்போது ஈடுபட்டுள்ளேன், இதில் எவ்வித அரசியல் நோக்கமும் கிடையாது. ஸ்ரீ லங்கா சுதந்திர கட் சியின் மூத்த உறுப்பினரான அலவி மௌலானா, சுதந்திர கட்சியின் ஸ்தாபகர் பண்டாரநாயக்கவின் பிறந்த தினத்தை விமர்சையாக கொண்டாடுவார். சுதந்திர கட்சியை ராஜபக்சாக்கள் பொறுப்பேற்றதன் பின்னர், ஓரிரு தடவைகள் இந்த நிகழ்வு கொண்டாடப்பட்டது.ஆனால் சுதந்திர கட்சியின் பொறுப்பை மைத்திரிபால பொறுப்பேற்றதன் பின்னர் இந்த நிகழ்வு மறக்கடிக்கப்பட்டது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு மைத்திரியே பொறுப்பு மத்திய வங்கி மீது விடுதலைபுலிகள் தாக்கியபோதும் நாடு ஸ்தம்பிதமடையவில்லை - சந்திரிக்கா | Ltte Attacked The Central Bank எனது ஆட்சியில், தேசிய பாதுகாப்பை நான் பொறுப்பேற்றேன். தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என சிறு சந்தேகம் எழும்போது உடனே பாதுகாப்பு சபையை கூட்டி அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்தேன். விடுதலை புலிகள், மத்திய வங்கியில் குண்டுத்தாக்குதலை மேற்கொண்டபின்னரும் நாட்டின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடையவில்லை.24 மணி நேரத்துக்குள் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தேன். அரச தலைவருக்கு நாட்டின் பாதுகாப்பு பொறுப்பாக்கப்பட்டுள்ளது, ஆகவே 2019 ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன பொறுப்புக் கூற வேண்டும்.தாக்குதல் தொடர்பில் அவர்கள் எனக்கு
குறிப்பிடவில்லை,நான் அறியவில்லை என பொறுப்பற்ற வகையில் அவர், குறிப்பிடக் கூடாது என்றார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

TAMIL Eelam news 454

 “இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.   சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள

TAMIL Eelam news b890

போர் விமானத்தை சுட்டுவீழ்த்த முயன்ற சீன கப்பல்! (Photo) சீன போர்க்கப்பல் அவுஸ்ரேலியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தும் நோக்கில் அந்த விமானத்தின் மீது லேசர் ஒளியை பாய்ச்சியதாக அவுஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியது. வடக்கு அவுஸ்ரேலியாவின் அரபுரா கடலில் ​சீன கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இது போர் விமானத்தில் இருந்த வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும் அவுஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக சீனா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் அவுஸ்ரேலிய போர் விமானம் மீது லேசர் ஒளியை பாய்ச்சியது சீனாவின் மிரட்டல் நடவடிக்கை என கூறி அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாத்தியம் உள்ளது. இது ஒரு மிரட்டல் செயலே தவிர வேறு ஒன்றுமில்லை. இதுபோன்ற மிரட்டல் செயல்களை அவுஸ்ரேலியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது’’ என்று கூறினார்.

TAMIL Eelam news 345

 பிறந்தநாள் நிகழ்வில் சிறுவர்களால் கத்திக்குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி – வட்டக்கச்சியில் சம்பவம் கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான குடும்பஸ்த்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கின்றார்.குறித்த சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பிறந்தநாளான நேற்று வீட்டில் நின்ற அவரை வீட்டு வாசலில் வைத்து 18 வயது பூர்த்தி அடையாத இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.   குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.உயிரிழந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதான அருளம்பலம் துசியந்தன் 2 பிள்ளைகளின் தந்தை என பொலிசார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.