தனித்து போட்டியிடுவது மாவீரர்களுக்கு இழைக்கின்ற துரோகம் என்கிறார் நாவலன் .
எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவது என்று இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானம் தவறானது மாத்திரமல்ல அத் தீர்மானம் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக தமது இன்னுயிரை துறந்த மாவீரர்களுக்கும் தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரனின் விருப்பத்திற்கும் துரோகம் இழைக்கின்ற செயற்பாடாகவே நாங்கள் கருதுகின்றோம் . அனைத்து தமிழ்த்தேசிய கட்சிகளும் எதிர்வருகின்ற அனைத்து தேர்தல்களிலும் இணைந்து போட்டியிட்டு எமது உரிமைகளை வென்றெடுக்கவேண்டும் என்று இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஊர்காவற்துறை தொகுதி கிளை செயலாளரும் வேலணை பிரதேச சபை உறுப்பினருமான கருணாகரன் நாவலன் வேண்டுகோள் விடுத்துள்ளார் .
மேலும் அவரது அறிக்கையில் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டத்தினை சாணக்கியன் ராகுல புத்திரவின் இல்லத்தில் நடாத்தியது பாரிய தவறென்றும் நல்லையா வீதி மட்டக்களப்பு நகரிலேயே கட்சியின் பிரதான அலுவலகம் நீண்டகாலமாக இயங்கிவருகின்ற நிலையில் தனிப்பட்ட ஒரு நபரின் இல்லத்தில் மேற்படி முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தினை நடாத்துவதற்கு அனுமதியளித்திருக்கக்கூடாதென்றும் தெரிவித்துள்ளார் . இதே சாணக்கிய ராகுல புத்திர கடந்த காலங்களில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினையும் , இலங்கை தமிழ் அரசுக் கட்சியையும் மிக மோசமாக விமர்சித்ததையும் தமிழ் அரசுக் கட்சியின் விசுவாசிகள் மறந்துவிடவில்லையென்றும் குறிப்பிட்டுள்ளார்
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்