முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 373 சொல்லில் ஒன்று செயலில் ஒன்று தொடர்ந்து உயிர்வாழும் மந்திரி?

அரசியலமைப்பின் வார்த்தைப் பிரயோகங்கள் திருத்தப்படும் வரையில் 13 ஆவது திருத்தம் சாத்தியமில்லை-டக்லஸ்
அரசியலமைப்பின் தெளிவற்ற வார்த்தைப் பிரயோகங்கள் திருத்தப்படும் வரையில் முழுமையான 13 ஆவது திருத்தம் சாத்தியமில்லை – அமைச்சர் டக்லஸின் எழுத்துமூல ஆவணத்தில் சுட்டிக்காட்டு ~~~ அரசியலமைப்பில் காணப்படுகின்ற தெளிவற்ற வார்த்தைப் பிரயோகங்களினால் உருவாகின்ற தடைகள் நீக்கப்படாவிட்டால், 13 வது திருத்தச் சட்டத்தினை திறம்பட அமுல்படுத்துவது சாத்தியமில்லை என்பதே கடந்த 30 வருடங்களுக்கும் மேலான மாகாணசபை முறைமையின் அனுபவமாக இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், மூன்று கட்டங்களாக 13 ஆவது திருத்தச் சட்டத்தினை பூரணமாக அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது நடைமுறைச் சாத்தியமானதாக இருக்கும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் உருவாக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழுவில் அங்கம் வகிப்பதுடன், குறித்த விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி மேற்கொண்டு வருகின்ற கலந்துரையாடல்களிலும் தொடர்ச்சியாக கலந்து கொண்டு வருகின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்துள்ள எழுத்துமூல ஆவணத்திலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதாவது, ஜனாதிபதிக்கு இருக்கின்ற நிறைவேற்று அதிகாரத்தின் மூலமாகவும் நிர்வாக அதிகாரங்களுக்கு ஊடாகவும் மத்திய அரசாங்கத்திற்கு எடுக்கப்பட்ட அதிகாரங்களை மீளவும் மாகாண அரசாங்கங்களிடம் கையளிப்பது முதலாவது கட்டம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேபோன்று, 13 ஆவது திருத்தச் சட்டம் உருவாக்கப்படுவதற்கு முன்னர் உருவாக்கப்பட்ட சட்டங்களுள், 13 ஆவது திருத்தச் சட்டத்தினை அமுல்படுத்துவதற்கு இடையூறாக இருக்கின்றவற்றை ஆராய்ந்து, அவை 13 ஆவது திருத்தச் சட்டத்துடன் பொருந்தும் வகையில் சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளுதல் இரண்டாவது கட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது கட்டமாக, 13 வது திருத்தத்தின் சில விதிகளில் உள்ள தெளிவின்மையை நீக்குவதற்கும், தெளிவான முறையில் அதிகாரங்களை வரையறை செய்வதற்கும் மற்றும் ஒதுக்கீடு செய்வதற்கும், அத்தோடு சட்டமியற்றுதல், நிர்வாக, நீதித்துறை மற்றும் நிதி அதிகாரங்களை அரசாங்கத்தின் பல்வேறு அடுக்குகள் மூலம் பயன்படுத்துவதற்கான வரையறைகளை உருவாக்குவதற்குத் தேவையான அரசியலமைப்பு திருத்தம் மேற்கொள்ளுதல், போன்ற செயற்பாடுகளின் மூலம் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ’13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதில் இருந்து ஆரம்பித்து முன்னோக்கி நகர்வதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைத் தீர்க்க முடியும் என்பதை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) மீண்டும் மீண்டும் கூறி வருகிறோம். இந்த நிலைப்பாட்டில் நாங்கள் நீண்ட காலமாக நிலையாக இருந்து வருகிறோம். சில அரசியல் கட்சிகள் தமது குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக, 13வது திருத்தம் தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றவில்லை என்று கூறினாலும்; 1988ஆம் ஆண்டு இணைக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணத்திற்கு முதன்முறையாக நடைபெற்ற தேர்தல்களைத் தவிர, கிழக்கு மாகாணத்தில் இரண்டு தடவைகளும் வடமாகாணத்தில் ஒரு முறையும் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் பெரும்பாலான அரசியல் கட்சிகளும் கலந்து கொண்டதுடன் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். இது மாகாண சபை அமைப்பை ஏற்றுக்கொள்ளும் அனைவரினதும் விருப்பத்தை வெளிப்படுத்துகின்றது. மற்ற மாகாணங்களிலும் மக்கள் இப்போது இந்த முறைக்கு பழகிவிட்டனர், அதைத் தொடர்வதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை. 13 வது திருத்தத்தின் ஊடான அதிகாரப் பகிர்வை சரியான முறையில் வரையறைப்படுத்தி அர்த்தமுள்ள முறையில் செயல்படுத்துவது ஒரு ஐக்கிய நாட்டிற்குள் பன்முகத்தன்மையையும் மற்றும் பன்மைத்தன்மையைக் கையாள்வதற்கான வழிமுறையையும் வலுப்படுத்தும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?