முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

c 826 விரைவில் 46 தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுதலை

விரைவில் 46 தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுதலை 46 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சரும், ஜனாதிபதியின் சட்டத்தரணியுமான விஜேதாச ராஜபக்ஷ தன்னிடம் உறுதியளித்ததாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கருத்து கூறுகையில், சிறு குற்றங்களுக்காக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 46 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. விரைவில் 46 தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுதலை | Soon46 Tamil Political Prisoners Will Be Released குறித்த கைதிகள் தொடர்பாக முன்னாள் பிரதம நீதியரசர் அசோக டி சில்வாவின் அறிக்கைகளுக்காக காத்திருப்பதாக நீதியமைச்சர் என்னிடம் தெரிவித்தார். அண்மையில் இடம்பெற்ற நாடாளுமன்ற ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்போது தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், வடக்கு கிழக்கு மாகாணங்களில் நில ஆக்கிரமிப்புகளை உடனடியாக நிறுத்துதல் மற்றும் பயங்கரவா

c 825 சிறிலங்காவின் புலம்பெயர் அமைப்புகளின் தடைநீக்கம்

புலம்பெயர் அமைப்புகளின் தடைநீக்கம் சிறிலங்காவின் சுயநலம் சார்ந்தது என உலகத்தமிழர் பேரவை விமர்சனம் வெளியிட்டுள்ளது. உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் மீதான தடை தற்போது நீக்கப்பட்டுள்ள நிலையில் இந்தத் தடைநீக்கம் குறித்து அவரிடமே எமது செய்திப்பிரிவு வினவியிருந்த போது, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சிறிலங்கா அரசாங்கம் சில புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடையை நீக்கியுள்ளது. சிறிலங்காவின் புலம்பெயர் அமைப்புகளின் தடைநீக்கம் - உலகத் தமிழர் பேரவை வெளியிட்ட தகவல் | Unbanning Tamil Diaspora Organizations Sri Lanka பாதுகாப்பு அமைச்சின் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் உலகத் தமிழர் பேரவை மற்றும் கனேடிய தமிழ் கொங்கிரஸ் உட்பட்ட அமைப்புகள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமைப் பேரவையின் எதிர்வரும் செப்டம்பர் மாத அமர்வில் சிறிலங்கா குறித்து முக்கிய நிகழ்ச்சி நிரல் உள்ள நிலையில், அந்த அமர்வை சமாளிப்பதற்காகவும் அதேபோல அனைத்துலக அழுத்தங்களை எதிர்கொள்வதற்கான நகர்வுகளின் அடிப்படையிலும் புலம்பெயர் அமைப்புகள் மற்றும் புலம் பெயர் அமைப்புகளின் முக

c824 யாழில்தொடரும் இன வண்முறை சிங்கள புலநாய்களின் அட்டகாசம்

யாழில் தொலைபேசி விற்பனை நிலைய உரிமையாளர் மீது வாள் வெட்டுத்தாக்குதல் யாழ்ப்பாணம் நகர் பகுதியில் தொலைபேசி விற்பனை நிலையம் நடாத்தும் உரிமையாளர் மீது இன்றிரவு வாள் வெட்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தொல்புரம் மேற்கு சுழிபுரம் பகுதியை சேர்ந்த 34 வயதுடைய ஒருவர் மீதே இவ்வாறு வாள் வெட்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த நபர் தனது கடையை மூடிய பின்னர் காங்கேசன்துறை வீதி ஊடாக வீடு நோக்கி சென்று கொண்டிருந்த போது மனோரா திரையரங்குக்கு அருகில் வைத்து வாள் வெட்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆரம்பகட்ட விசாரணைகளில் வெளியான தகவல் இந்த சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதுடன்,முன்பகை காரணமாகவே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.

c 823 நீரும் வாழ்ந்து உனது சமுகத்தையும் வாழவை.

கனடாவில் பலரின் பாராட்டைப்பெற்ற ஈழத்து இரட்டைச் சகோதரிகள்! கனடாவில் இலங்கைத் தமிழ் வம்சாவளி சகோதரிகள் குழந்தைகளுக்கான மருத்துவ அறிவியல் புத்தகங்களை எழுதிவருகின்ற நிலையில் குறித்த சகோதரிகளுக்கு பலரும் பாராட்டுக்களை கூறிவருகின்றனர். கனடா வாழ் இரட்டைச் சகோதரிகள் குழந்தைகளுக்கான மருத்துவ அறிவியல் புத்தகங்களை எழுதும் அசாதாரணமான வேலையை செய்து வருகின்றனர். அவர்கள் இப்போது புதிதாக தடுப்பூசிகள், உடல்நலம் மற்றும் பன்முகத்தன்மை பற்றிய குழந்தைகளுக்கான புத்தகங்களை எழுதுகின்றனர். கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் பிராம்ப்டன் பகுதியில் வசிக்கும் இலங்கை வம்சாவளி தமிழர்களான சுரபி மற்றும் ஸ்வாதி அன்பழகன். கனடாவில் பலரின் பாராட்டைப்பெற்ற ஈழத்து இரட்டைச் சகோதரிகள்! | Elam Twins Who Are Admired By Many In Canada 19 வயதாகும் இவர்கள், இந்த இலையுதிர்காலத்தில் வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் மருத்துவ அறிவியல் படிப்பதற்காக இரண்டாம் ஆண்டில் நுழைகின்றனர். அவர்கள் தங்கள் ஓய்வு நேரத்தில் புத்தகங்களை எழுதுகிறார்கள். எழுத்து மற்றும் மருத்துவ அறிவியல் இரண்டின் மீதான தங்கள் காதலை குழந்தைகளுக்கான புத்தகங்கள் மூலமாக

c 822 அலக்ஸ்சிய போக்கால் தனது சமுகத்தை நடுத்தெரிருவில் விட்டு சென்ற தமிழன்

வெளிநாடொன்றில் நீராட சென்ற யாழ் குடும்பத்தினருக்கு நேர்ந்த சோகம்! பெல்ஜியம் நாட்டில் ஈழதமிழர் ஒருவர் குடும்பமாக ஆற்றில் நீராட சென்ற இடத்தில் நீரில் முழ்கி பலியாகியுள்ள தகவல் வெளியாகியுள்ளது. யாழ். நாவற்குழியை பிறப்பிடமாகவும் பெல்ஜியம் நாட்டில் வசித்தவருமான ரவி எனும் வல்லிபுரம் ரவிந்திராச எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையே மரணமாகியுள்ளார். மேலும் இச்சம்பவம் தொடர்பில் பெல்ஜியம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களின் சாவு முதலில் அவரின் குடும்பம் மற்றும் குடும்ப உறவுகளை பாதிக்கின்றது. இரண்டாவது அவர் சாந்த சமுகத்தைப்பாதிக்கின்றது சமுகம் என்பது வட கிழக்கில் வாழும் தமிழ்களைக் குறிக்கின்றது எதோ ஒரு குடும்பம் புலம்பெயர் நாடுகளின் உதவியை எதிர்பார்த்து கார்த்துஇருந்துயிருக்கும் என்பதை எம்மால் தட்டிக் களிக்க முடியாது. எனவே உங்களுடைய உயிர் பெறுமதியானது என்பதை விளங்கி செயல்படுங்கள். உங்களிற்காக நீங்கள் வாழ விட்டாலும் நீங்கள் சார்ந்த சமுகத்திற்காக வாழ வேண்டிய கடமை உங்களிற்கு இருக்கின்றது என்பதை மறந்து விடாதீர்கள்.

c 821 மூதாட்டி சடலமாக மீட்பு..!

யாழில் தனிமையில் வசித்த மூதாட்டி சடலமாக மீட்பு..! யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் வீடொன்றில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி நேற்றைய தினம் (வெள்ளிக் கிழமை) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இணுவில் மஞ்சத்தடி கொட்டம்பனை பகுதியை சேர்ந்த தெய்வேந்திரம் வசந்தி (வயது 62) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது இரண்டு பிள்ளைகள் வெளிநாட்டில் வசித்து வருவதுடன் , ஒரு பிள்ளை வெளியூரில் வசித்து வருகின்றார். அந்நிலையில் வயோதிப பெண் தனது வீட்டில் தனியே வாழ்ந்து வந்துள்ளார். இவரது வீட்டுக்கு அருகில் வசிக்கும் இவரது சகோதரன் வழமை போன்று இன்றைய தினம் உணவு கொடுக்க சென்ற நிலையில் சகோதரி உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இதனையடுத்து கோப்பாய் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து காவல்துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

c 820 கோட்டாபயவுக்கு நிபந்தனை விதித்த தாய்லாந்து

வெளியே தலைகாட்டக் கூடாது! கோட்டாபயவுக்கு நிபந்தனை விதித்த தாய்லாந்து முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்தின் தலைநகரின் மையப்பகுதியில் உள்ள பாங்கொக்கில் உள்ள விடுதியில் தங்கியுள்ள நிலையில், எக்காரணம் கொண்டும் விடுதியை விட்டு வெளியே வரவேண்டாம் என அவரிடம் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் ஏற்பட்ட மக்கள் புரட்சி காரணமாக கோட்டாபய ராஜபக்ச கடந்த மாதம் 13 ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறி, மாலைதீவு சென்ற அவருக்கு எதிர்ப்பு ஏற்பட்டதால் சிங்கப்பூருக்கு பறந்தார். அங்கிருந்தபடியே அதிபர் பதவியை அவர் இராஜினாமா செய்தார். இதையடுத்து இலங்கை அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றார். சிங்கப்பூரில் அவருக்கு முதலில் 14 நாட்கள் தங்க அனுமதிக்கப்பட்டது. இதன் பின்னர் கடந்த 11ஆம் திகதி வரை அவருக்கு சிங்கப்பூரில் தங்க அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்றுடன் அவருக்கு சிங்கப்பூரில் விசா முடிந்தது. இதனால் அவர் சிங்கப்பூரில் இருந்து வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். பின் சிங்கப்பூரில் இருந்து நேற்று இராணுவ விமானம் மூலம் தாய்லாந்துக்கு புறப்பட்டார். அங்கு சென