விரைவில் 46 தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுதலை
46 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சரும், ஜனாதிபதியின் சட்டத்தரணியுமான விஜேதாச ராஜபக்ஷ தன்னிடம் உறுதியளித்ததாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து கூறுகையில்,
சிறு குற்றங்களுக்காக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 46 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
விரைவில் 46 தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுதலை | Soon46 Tamil Political Prisoners Will Be Released
குறித்த கைதிகள் தொடர்பாக முன்னாள் பிரதம நீதியரசர் அசோக டி சில்வாவின் அறிக்கைகளுக்காக காத்திருப்பதாக நீதியமைச்சர் என்னிடம் தெரிவித்தார்.
அண்மையில் இடம்பெற்ற நாடாளுமன்ற ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இதன்போது தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், வடக்கு கிழக்கு மாகாணங்களில் நில ஆக்கிரமிப்புகளை உடனடியாக நிறுத்துதல் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு தொடர்பில் எங்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக ஜனாதிபதி இணக்கம் தெரிவித்தார்.
விரைவில் 46 தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுதலை | Soon46 Tamil Political Prisoners Will Be Released
இந்நிலையில், எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை மிகவும் பாரதூரமான ஒன்றாக இருக்கும்.
எனவே அதற்கமைவாக குறித்த அறிக்கைக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்ததாக சீ.வி. விக்னேஸ்வரன் மேலும் குறிப்பிட்டார்.
போர் விமானத்தை சுட்டுவீழ்த்த முயன்ற சீன கப்பல்! (Photo) சீன போர்க்கப்பல் அவுஸ்ரேலியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தும் நோக்கில் அந்த விமானத்தின் மீது லேசர் ஒளியை பாய்ச்சியதாக அவுஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியது. வடக்கு அவுஸ்ரேலியாவின் அரபுரா கடலில் சீன கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இது போர் விமானத்தில் இருந்த வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும் அவுஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக சீனா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் அவுஸ்ரேலிய போர் விமானம் மீது லேசர் ஒளியை பாய்ச்சியது சீனாவின் மிரட்டல் நடவடிக்கை என கூறி அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாத்தியம் உள்ளது. இது ஒரு மிரட்டல் செயலே தவிர வேறு ஒன்றுமில்லை. இதுபோன்ற மிரட்டல் செயல்களை அவுஸ்ரேலியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது’’ என்று கூறினார்.
கருத்துகள்