முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 553 வாமன் கடசியாகப்பார்க்க விரும்பியது என்ன?

 

வாமன் கடசியாகப்பார்க்க விரும்பியது என்ன?


அப்பொழுது கப்டன் வாமன் தேசியத் தலைவரின் பாதுகாவலனாக 95 என்ற கொக்குவில் முகாமில் நின்றான், அப்பொழுது எலும்பு உருக்கி நோய் என்ற கொடிய நோய்யில் அவன் பீடிக்கப்பட்டு மிகவும் கவலையில் இருந்த காலம் அது, திடீரேன ஒரு நாள் காலை தான் கோப்பாய்யில் இருக்கும் தனது தாய்மாமனின் வீட்டிற்குப்போக விரும்புவதாக என்னிடம் குறிப்பிட்டான், அதற்கு நான் நீர் சொர்ணம் அண்ணையிடம் கேட்த்து போகலாம் என்றேன்,


ஆனால் சொர்ணம் அண்ணையிடம் கேட்பதற்கு அவனிற்கு சிறிது பயமாகயிருந்தது, அதனால் இருவரும் போவோம் நான் பக்கத்தில் நிக்கின்றேன் நீரே அனுமதியைக் கேட்குமாறு என்னிடம் சொன்னான், நானும் அதை ஏற்ருக்கொண்டேன்,



நாங்கள் இருவரும் செல்லும்போது சொர்ணம் அண்ணை பேப்பர் படித்துக்கொண்டுயிருக்கின்றார், என்னைக்கண்டதும், என்ன பிரச்சனை சொல்லுங்கோ எலி டொட்டர் என்றார் என்னைப்பார்த்து, அதற்கு நான்அண்ணே வாமன் தனது தாய்மாமனைப்பார்க்க விரும்புகின்றான் என்றேன், அவர் வாமனைப்பார்த்து ஒரு மாதிரி சிரித்துவிட்டு, அதற்கு என்ன ஒரு சைக்கலை எடுத்துக்கொண்டு வாமனைஏத்திக்கொண்டுபோய் அவனின் தாய்மாமனைக் காட்டித்து வேளைக்குவா என பதில் அழித்தார்,


வாமன் மிக்க மிகிழ்ச்சி அடைந்தான், அவனை முன்னால் ஏற்றிக்கொண்டு கோப்பாய் றோட்டால்போய்க்கொண்டுயிருந்தேன், ஒரு இடத்தில் சைக்கிலை நிறுத்தி அந்தப் பேரைச் சொல்லி இவரைத் தெரியுமா? என கேட்டேன் இப்படிச் சொன்னால் எவருக்கும் தெரியாது, மட்டக்களப்பார் என்று கேட்டால் எல்லோருக்கும் தெரியும் என பதில் அழித்தார்,


சரியென கேட்டுவிட்டு மெது மெதுவாகப்போய் ஒருதரிடம் மட்டக்களப்பாரை தெரியுமா என கேட்டேன் அவர் அதுதான்வீடு என காட்டினார், அங்கே போனதும் சிரித்த முகத்துடன் வரவேற்றார், 20 வருடம் முன்னர் அங்கே வந்து அதே இடத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து இரண்டு குழந்தைகளோடு அங்கே அவர் வாழ்ந்துகொண்டுயிருந்தார், சிறு வாழைத்தோட்டம் ஒன்று வைத்துயிருந்தார், அது தான் அவரின் வாழ்வாதாரத்தை ஓட்டிக்கொண்டுயிருந்தது, எங்களைக்கண்டதும் ஓடோடி கறிகள் வேண்டி சமைத்து உணவு தந்தார், நாங்கள் பசி ஆறிவிட்டு மீண்டும் முகாமிற்குபோகவெளிக்கிட ஒரு கப்பல் வாழைக்குலையும் தந்தார், அதையும் எடுத்துக்கொண்டுமீண்டும் நாங்கள் முகாமிற்கு வந்து சொர்ணம் அண்ணையிடம் சென்று அங்கே நடந்த பிரச்சனையை அவரிடம் சொல்லி அந்த வாழைக்குலையையும் அவரிடம் வாமன் கொடுத்தான். சிரித்த முகத்துடன் வேண்டிய சொர்ணம் அண்ணை ஒரு சீப்பை வெட்டி எடுத்து விட்டு மிகுதியை அனைவருக்கும் கொடுக்குமாறு கட்டளை வழங்கினார்,



அப்பொழுது நான் வாமனிடம் சொன்னேன் இங்கே 70 பேருக்கு மேல் உள்ளோம், இதைப்பகிருவது எமக்குக் கடினமாகயிருக்கும், அதனால் இதைச் தேசியத்தலைவருக்கே கொடுப்போம் என ஆலோசனை வழங்கினேன்,, அங்கே சென்று தலைவரின் சமையல் ஆழராகயிருந்த கப்டன்தாயா அண்ணையிடம் கொடுக்க அத்தகவல் தலைவருக்குப்பறந்தது, அதைக் கேட்ட தலைவர் அதைமீண்டும் கிச்சினுக்குக்கொண்டுகொண்டுகொடுக்குமாறும் அதைப்பாதிப்பாதியாகவெட்டி அனைவருக்கும் பகிருமாறு தலைவர் கட்டளை வழங்கினார், 

அன்று அனைவருக்கும் பாதி கப்பல் பழம் போனது, சொர்ணம் அண்ணைக்கும் பாதிப்பழம் போனது, அதைப்பார்த்தும் தன்னிடம் ஒரு சீப்பு பழம் உள்ளதே என்பதை உணர்ந்த சொர்ணம் அண்ணை, அந்தப் சீப்புப்பழத்தை என்னிடம்ந்து அதை மானுக்கும் மரைக்கும் கொடுக்குமாறுகட்டளை வழங்கினார்?


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?