முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

c 819 அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியினர் நிதியுதவி-!

கோட்டாவால் வந்த அவல நிலை : இலங்கைக்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியினர் நிதியுதவி-! இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியினர், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு நிதியுதவி ஒன்றை வழங்கியுள்ளனர். இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அதன் மூலம் பெற்ற வெற்றிப் பணத்தில் 45,000 அவுஸ்திரேலிய டொலர்களை அவர்கள் நிதியுதவியாக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில் உள்ள குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக யுனிசெஃப் மூலம் குறித்த தொகையை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

c 818 ஆப்கானிஸ்தானில் குண்டு தாக்குதலில் மதகுரு கொல்லப்பட்டார்

ஆப்கானிஸ்தானில் குண்டு தாக்குதலில் மதகுரு கொல்லப்பட்டார் தலிபான்களுக்கு ஆதரவு தெரிவித்து வந்த அதேநேரம், பெண் கல்விக்கு ஆதரவாக செயல்பட்ட முக்கிய ஆப்கானிஸ்தான் மதகுரு கொல்லப்பட்டார். ஷேக் ரஹிமுல்லா ஹக்கானி என்பவரே காபூலில் தற்கொலை குண்டுவெடிப்பில் இறந்து விட்டதாக கூறப்படுகிறது. குறித்த மதத் தலைவரை குறிவைத்து ஒரு செயற்கை பிளாஸ்டிக் கால் ஒன்றுக்குள் மறைத்து வைத்திருந்த வெடிபொருட்களை வெடிக்கச் செய்ததாக தெரிவிக்கப்படுள்ளது. இந்த தாக்குதலுக்கு, இஸ்லாமிய அரசு (ஐஎஸ்ஐஎஸ்) குழு,பொறுப்பேற்றது. ஆப்கானிஸ்தானில் குண்டு தாக்குதலில் மதகுரு கொல்லப்பட்டார் | Afghan Cleric Killed By Bomb ஷேக் ஹக்கானி ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கத்தின் ஆதரவாளராகவும், ஆப்கானிஸ்தானில் செயல்படும் மற்றும் தலிபான்களின் ஆட்சியை எதிர்க்கும் ஐஎஸ்ஐஎஸ் இன் பிராந்திய துணை அமைப்பான, கோஹ்ராசன ஜிஹாதிஸ்ட் போராளிக் குழுவின் முக்கிய விமர்சகராகவும் இருந்தார். கடந்த ஆண்டு தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்து நாட்டில் கொல்லப்பட்ட மிக முக்கியமானவர்களில் இவரும் ஒருவராவார். இது ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய இராட்சியத்துக்கு மிகப்பெ

c 817 தாய்லாந்தில் தரையிறங்கினார் கோட்டாபய ராஜபக்ஷ!

தாய்லாந்தில் தரையிறங்கினார் கோட்டாபய ராஜபக்ஷ! முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) சிங்கப்பூரில் இருந்து வெளியேறி தாய்லாந்தை சென்றடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சிங்கப்பூரில் சுமார் ஒரு மாத காலம் வரை தங்கியிருந்த அவர் இன்று மாலை (11-08-2022) சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டு தாய்லாந்து நேரப்படி இன்று மாலை எட்டு மணியளவில் அவர் அங்கு சென்றடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. தாய்லாந்தில் தரையிறங்கினார் கோட்டாபய ராஜபக்ஷ! | Gotabaya Rajapaksa Just Landed In Thailand சிங்கப்பூர் சட்டமா அதிபர் அவருக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டு தொடர்பாக நடவடிக்கை எடுக்கவிருந்த நிலையில் அவர் அங்கிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது. தாய்லாந்தின் பாங்கொக் நகரில் அவர் தங்கியிருப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், ராஜதந்திர கடவுச்சீட்டு அடிப்படையில் 90 நாட்கள் அந்நாட்டில் தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிங்கப்பூருக்கான குறுகிய கால நுழைவு வீசா காலாவதியான நிலையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று நாட்டில் இருந்து வெளியேறியுள்ளதாக சிங்கப்பூர் குடிவரவு மற்

c 816 சீனாக்கப்பலிற்கு அனுமதி

சீன கப்பலுக்கு அனுமதி - அரசுக்கு கடும் அழுத்தம் சீன கப்பலுக்கு அனுமதி சர்ச்சையை ஏற்படுத்திய சீனக் கப்பலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் அனுமதிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுயேச்சைக் கட்சிகளின் ஒன்றியம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கை - சீன உறவுகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஏனைய நாடுகளுடன் தற்போதுள்ள உறவுகளை பேணுமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதாகவும் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. சீன கப்பலுக்கு அனுமதி - அரசுக்கு கடும் அழுத்தம் | Heavy Pressure On The Government Chinese Ship நாடு சகித்துக் கொள்ளாது இந்த கப்பல் இந்தியாவில் முக்கியமான தகவல்களை சேகரிக்க முடியும் என்பதால் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் நுழைய அனுமதிக்க வேண்டாம் என்று இந்திய மற்றும் அமெரிக்க தூதரகங்கள் அரசாங்கத்தை கடுமையாக எச்சரித்ததாக கூறப்படுகிறது. சீனாவும் இந்தியாவும் இலங்கைக்கு பெருமளவிலான பொருளாதார உதவிகளை வழங்குவதால், இந்தியாவைப் போன்று சீனாவுடனான தவறான புரிதல்கள், இராஜதந்திர விலகல்களை எமது நாடும் சகித்துக் கொள்ளாது என சுயேட்சை கட்சி ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

c 815 இலங்கையில் தொடரும் பாலியில் கொலை .

காணாமற்போன சிறுமி காட்டுப்பகுதியில் உள்ள குகை ஒன்றிலிருந்து மீட்பு காணாமற்போன சிறுமி கடந்த 3ஆம் திகதி லுணுகலை 27 ம் கட்டை பகுதியிலிருந்து காணாமல் போனதாக தெரிவிக்கப்படும் 14 வயது சிறுமி காட்டுப்பகுதியில் உள்ள குகையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். குறித்த சிறுமியுடன் தங்கியிருந்த இளைஞர் ஒருவரும் 58 வயது நபர் ஒருவரும் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். காணாமற்போன சிறுமி காட்டுப்பகுதியில் உள்ள குகை ஒன்றிலிருந்து மீட்பு | Missing Girl Rescued From Forest Cave காவல்துறைக்கு கிடைத்த தகவல் சிறுமி காணாமற் போனமை தொடர்பில் லுணுகலை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில், பல்லேகிருவ பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் ஒருவரும் 58 வயதுடைய லுணுகலைப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரும் குறித்த சிறுமியும் உடகிருவ- கொட்டிகல்கே காட்டுப் பகுதியில் தலைமறைவாகி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. காணாமற்போன சிறுமி காட்டுப்பகுதியில் உள்ள குகை ஒன்றிலிருந்து மீட்பு | Missing Girl Rescued From Forest Cave காட்டுப்பகுதியில் தேடுதல் அதற்கமைய, இன்று காலை விசேட அத

c 814 தமிழீழ தனியரசு அமைவதே தீர்வு! சிவாஜிலிங்கம் உறுதி

தமிழீழ தனியரசு அமைவதே தீர்வு! சிவாஜிலிங்கம் உறுதி சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க தமிழீழ தனியரசு அமைவதே தீர்வு என வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று முன் தினம் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்திலேயே சீன உளவுக் கப்பலுக்கு அனுமதியளித்துள்ளார். தற்போது இந்திய அரசாங்கத்தின் தொடர் அழுத்தத்தால் சீன உளவுக் கப்பலுக்கு தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுமதி மறுத்துள்ளார். எனினும் அந்தக் கப்பலின் பயணம் தொடர்கிறது அது இலங்கைக்கு வருவதில் தான் தாமதமே தவிர, அதன் பயணம் தடைப்படவில்லை என தெரிவித்துள்ளார். இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

c 813 யாழில் பெரும் துயரச்சம்பவம்

எரிபொருளுக்காக காத்திருத்த நபரொருக்கு நேர்ந்த சோகம்! யாழில் பெரும் துயர சம்பவம் கொக்குவிலில் மோட்டார் சைக்கிளுக்கு பெற்றோல் நிரப்புவதற்காக வரிசையில் சென்ற நபரொருவர் திடீரென சரிந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று (10-08-2022) மாலை 4.30 மணியளவில் கொக்குவிலில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. எரிபொருளுக்காக காத்திருத்த நபரொருக்கு நேர்ந்த சோகம்! யாழில் பெரும் துயர சம்பவம் | Man Dies While Waiting For Fuel Jaffna Kokkuvil புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த 40 வயதுடைய சொரூபன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளை கொண்டு சென்று QR குறியீட்டை காண்பித்த அவர், திடீரென மயங்கிச் சரிந்து உயிரிழந்துள்ளார். எரிபொருளுக்காக காத்திருத்த நபரொருக்கு நேர்ந்த சோகம்! யாழில் பெரும் துயர சம்பவம் | Man Dies While Waiting For Fuel Jaffna Kokkuvil திடீரென ஏற்பட்ட மாரடைப்பே உயிரிழப்புக் காரணம் என்று ஆரம்ப மருத்துவ பரிசோதனையி்ல் அறிக்கையிடப்பட்டுள்ளது. சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.