சீன கப்பலுக்கு அனுமதி - அரசுக்கு கடும் அழுத்தம்
சீன கப்பலுக்கு அனுமதி
சர்ச்சையை ஏற்படுத்திய சீனக் கப்பலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் அனுமதிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுயேச்சைக் கட்சிகளின் ஒன்றியம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை - சீன உறவுகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஏனைய நாடுகளுடன் தற்போதுள்ள உறவுகளை பேணுமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதாகவும் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
சீன கப்பலுக்கு அனுமதி - அரசுக்கு கடும் அழுத்தம் | Heavy Pressure On The Government Chinese Ship
நாடு சகித்துக் கொள்ளாது
இந்த கப்பல் இந்தியாவில் முக்கியமான தகவல்களை சேகரிக்க முடியும் என்பதால் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் நுழைய அனுமதிக்க வேண்டாம் என்று இந்திய மற்றும் அமெரிக்க தூதரகங்கள் அரசாங்கத்தை கடுமையாக எச்சரித்ததாக கூறப்படுகிறது.
சீனாவும் இந்தியாவும் இலங்கைக்கு பெருமளவிலான பொருளாதார உதவிகளை வழங்குவதால், இந்தியாவைப் போன்று சீனாவுடனான தவறான புரிதல்கள், இராஜதந்திர விலகல்களை எமது நாடும் சகித்துக் கொள்ளாது என சுயேட்சை கட்சி ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
போர் விமானத்தை சுட்டுவீழ்த்த முயன்ற சீன கப்பல்! (Photo) சீன போர்க்கப்பல் அவுஸ்ரேலியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தும் நோக்கில் அந்த விமானத்தின் மீது லேசர் ஒளியை பாய்ச்சியதாக அவுஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியது. வடக்கு அவுஸ்ரேலியாவின் அரபுரா கடலில் சீன கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இது போர் விமானத்தில் இருந்த வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும் அவுஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக சீனா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் அவுஸ்ரேலிய போர் விமானம் மீது லேசர் ஒளியை பாய்ச்சியது சீனாவின் மிரட்டல் நடவடிக்கை என கூறி அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாத்தியம் உள்ளது. இது ஒரு மிரட்டல் செயலே தவிர வேறு ஒன்றுமில்லை. இதுபோன்ற மிரட்டல் செயல்களை அவுஸ்ரேலியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது’’ என்று கூறினார்.
கருத்துகள்