முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

e 408 இஸ்ரேலில் உயிரிழந்த இலங்கை பெண்

  இஸ்ரேலில் உயிரிழந்த இலங்கை பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான தகவல்  By Mayuri  49 நிமிடங்கள் முன்             Report விளம்பரம் இஸ்ரேலில் பணியாற்றியபோது ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலில் உயிரிழந்த இலங்கை பெண்ணான அனுலா ரத்நாயக்கவின் பிரேத பரிசோதனை வெளியாகியுள்ளது. இதன்படி அனுலா ரத்நாயக்க துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது. தீவிரம் அடையும் இஸ்ரேல் - ஹமாஸ் போர் : இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பெரும் ஆபத்து உடலில் இருந்த தோட்டாக்கள் அத்துடன் பிரேதப் பரிசோதனையின் போது அவரின் உடலில் பல தோட்டாக்கள் காணப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தற்போது அவரது சடலம் களனியில் உள்ள அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அனுலா ரத்நாயக்க இஸ்ரேலில் பணியாற்றியபோது கடந்த 7ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

e 407 உயர்ந்த பாலமுருகன் சிலை ஸ்தாபிப்பு

  மட்டக்களப்பில் மிக உயர்ந்த பாலமுருகன் சிலை ஸ்தாபிப்பு  By Yadu  54 நிமிடங்கள் முன்             விளம்பரம் கிழக்கு மாகாணத்தில் மிக உயர்ந்த பாலமுருகன் சிலை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டக்களப்பு தாதாந்தாமலை, 40 வட்டையடியில் ஸ்தாபிக்கப்பட்டு இன்றைய தினம் குட முழுக்கு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க தாந்தாமலை முருகன் ஆலயத்திற்கு செல்லும் வழியில் 40வட்டை சந்தியில் இந்த பாலமுருகன் சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. முருகன் புலனம் குழுவின் ஏற்பாட்டில் சுமார் 35 உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலமுருகன் சிலை மற்றும் 40 வட்டை சந்தி பிள்ளையார் ஆலயத்தின் குடமுழுக்கு என்பன இன்று நடைபெற்றது. மஸ்கெலியாவில் மாயமான மாணவர்கள் மட்டக்களப்பில் மீட்பு தாந்தாமலை முருகன் ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்த குருக்கள் தலைமையில் இந்த குடமுழுக்கு வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதன் போது விசேட யாக பூஜை,கும்பபூஜை நடைபெற்றதை தொடர்ந்து முச்சந்தி விநாயகர் ஆலயம் குடமுழுக்கு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பாலமுருகனுக்கு விசேட பூஜைகள் அபிசேகம் செய்யப்பட

e 406 இயக்கச்சி றீச்சாவின் புதிய முயற்சி:

இயக்கச்சி றீச்சாவின் புதிய முயற்சி: அறுவடையாகும் நூற்றுக்கணக்கான மாம்பழங்கள் (Video)  By Sheron  1 மணி நேரம் முன்             Report விளம்பரம் கிளிநொச்சியில் இருக்கும் பசுமை பண்ணை றீச்சாவில் நூற்றுக்கணக்கான மாம்பழங்கள் முதல்முறையாக அறுவடை செய்யப்பட்டுள்ளன. tom jersey ரக மாம்பழமே இவ்வாறு அறுவடை செய்யப்பட்டுள்ளது. பொதுவாக இந்த மாம்பழம் பழச்சாறுகள் செய்ய பயன்படுத்தப்படுவதாகவும் ஒரு மாம்பழம் சுமார் 500 கிராமிற்கு மேல் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

e 405 யாழ் பல்கலைக்கழகத்திற்கு நியமிக்கப்பட்ட 7 பெரும்பான்மை இனத்தவர்கள்!

  யாழ் பல்கலைக்கழகத்திற்கு நியமிக்கப்பட்ட 7 பெரும்பான்மை இனத்தவர்கள்!  By Shankar  8 மணி நேரம் முன்             விளம்பரம் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் அறிமுகப்படுத்தப்பட்ட 1 லட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற தென்னிலங்கையைச் சேர்ந்த பெரும்பான்மையினத்தவர்களை யாழ் பல்கலைக் கழகத்தில் உள்ள சிற்றூழியர் பதவி வெற்றிடங்களுக்கு நியமிப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று அறியவருகிறது. இந்த நியமனங்கள் பலநோக்கு அபிவிருத்திச் செயலணித் திணைக்களப் பணிப்பாளரின் பணிப்புரைக்கு அமைய வழங்கப்படவுள்ளன. அங்கீகரிக்கப்பட்ட பணியாளர் வெற்றிடங்களுக்குப் பல்பணி மேம்பாட்டு உதவியாளர்களை வழங்குதல் என்ற தலைப்பின் கீழ் பல்கலைக் கழகங்களில் உள்ள பதவி வெற்றிடங்களுக்காக நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. நாடளாவிய ரீதியில் 1 லட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 1,139 பேர் நியமனத்துக்குத் தகுதி பெற்றவர்கள் எனப் பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த 7 பேர் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் உள்ள வெற்றிடங்களுக்கு நியமிக்கப்படவுள்ளனர். எதிர்வரும் 30

e 404 ஹமாஸை கூண்டோடு ஒழிக்க களமிறங்கியது

  ஹமாஸை கூண்டோடு ஒழிக்க களமிறங்கியது  படை : இரத்த ஆறு ஓடுமென எச்சரிக்கை  By Sumithiran  1 மணி நேரம் முன்             விளம்பரம் இஸ்ரேல் மீது கடந்த 07 ஆம் திகதி திடீர் தாக்குதலை நடத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கொன்றும் 200 ற்கும் மேற்பட்டவர்களை பணயக் கைதிகளாகவும் பிடித்துச் சென்ற ஹமாஸ் அமைப்பு அதற்கான விலையை தற்போது காஸாவில் செலுத்திக் கொண்டிருக்கிறது. ஹமாஸின் தாக்குதலால் சீற்றமடைந்த இஸ்ரேல் காஸா மீது பயங்கரமான விமான தாக்குதலை நடத்திவருகிறது.இதனால் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டும் பெரும் எண்ணிக்கையிலானோர் காயமடைந்தும் அவதிப்பட்டும் வருகின்றனர். மரணப்பொறி காஸா இப்பொழுது அம்மக்களுக்கு மரணப்பொறியாக மாறிகிடக்கிறது. இந்த நிலையில் இஸ்ரேல் தனது தரைவழி தாக்குதலை ஆரம்பித்துள்ளது.ஹமாஸ் அமைப்பை கூண்டோடு ஒழிக்கும் வகையில் இந்த தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்துள்ளார். இஸ்ரேல் அதிரடி : துருக்கியிலிருந்து தமது தூதுவரை வெளியேற உத்தரவு இந்த தாக்குதல்களுக்காக உலகிலேயே மிகவும் ஆபத்தான படைப்பிரிவாக கருதப்படும் இஸ்ரேலின் 'பிசாசுப் படை&

:e 403 சிறைகளில் வைத்து படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள்!! ...

சிறைகளில் வைத்து படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள் : மறக்கப்பட்டுவிட்ட சோக வரலாறு!  By Beulah  7 மணி நேரம் முன்             விளம்பரம் இலங்கையை ஒரு படுகொலைகளின் தேசம் என்று தாராளமாக கூறலாம். இனங்களுக்கும் இனங்களுக்கிடையேயும், மதங்களுக்கும் மதங்களுக்கிடையேயும், மொழிகளுக்கும் மொழிகளுக்கிடையேயும், பிரதேசங்களுக்கும் பிரதேசங்களுக்கிடையேயும் ஏதாவது ஒரு காரணத்தை வைத்து நடைபெறுகின்ற படுகொலைகளும், அதனை நியாயப்படுத்துகின்ற வாதங்களும் இலங்கை தேசத்தில் மலிந்திருப்பது போன்று, வேறு எங்குமே இருக்காது. அதுவும் தமிழ் இனத்திற்கான படுகொலைகள் என்பது, எந்த நியாயப்பாடுகளும் இல்லாமலேயே மேற்கொள்ளப்படலாம். யாருமே கேட்பதும் இல்லை, கேட்கவும் முடியாது. பைடனுக்கு பதிலடி: பாலஸ்தீன சுகாதார அமைச்சு வெளியிட்ட பட்டியல் படுகொலை  அப்படி கேட்பாரற்று நடைபெற்ற ஓர் படுகொலை பற்றிதான் இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி ஆராய்கின்றது. இன்றைக்கு சுமார் 23 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் சிறைச்சாலையொன்றில் இடம்பெற்ற படுகொலை அது. 2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி பிந்துருவெவ எனும் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 26 தமிழ் இளைஞர்கள்