முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 628 இலங்கையில் ஊழி திரைப்படத்தை வெளியிட அனுமதி கிடைக்கவில்லை: ஊழி பட இயக்குனர்

 

இலங்கையில் ஊழி திரைப்படத்தை வெளியிட அனுமதி கிடைக்கவில்லை: ஊழி பட இயக்குனர்

இலங்கையில் ஊழி திரைப்படத்தை வெளியிட அனுமதி கிடைக்கவில்லை: ஊழி பட இயக்குனர் | Permission Not Received For Publish Ooli Movie
 7 hours ago
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

இலங்கையில் ஊழி திரைப்படத்தை வெளியிட அனுமதி இன்னமும் கிடைக்கவில்லையென ஊழி திரைப்படத்தின் இயக்குனர் ரஞ்சித் ஜோசப் தெரிவித்துள்ளார்.

நாளை பத்தாம் திகதி உலக நாடுகளில் ஊழி திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில்  இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனம் தணிக்கை சான்றிதழை இதுவரை தராமையினால் இலங்கையில் இந்த திரைப்படத்தை வெளியிடுவது குறித்து தீர்மானிக்க முடியவில்லை என்றும் ரஞ்சித் ஜோசப் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பாக திரைப்படத்தின் இயக்குனர் ரஞ்சித் ஜோசப் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

இந்திய நாடாளுமன்ற தேர்தலில் அமெரிக்கா தலையீடு: ரஷ்யா பரபரப்பு குற்றசாட்டு

இந்திய நாடாளுமன்ற தேர்தலில் அமெரிக்கா தலையீடு: ரஷ்யா பரபரப்பு குற்றசாட்டு


ஊழி திரைப்படம் 

குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் படமாக்கப்பட்டுள்ள ஊழி திரைப்படம் நாளை பத்தாம் திகதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் இலங்கையில் இத்திரைப்படத்தின் வெளியீடு தொடர்பான நிலவரத்தை இவ் அறிக்கையின் வாயிலாக வெளிப்படுத்துகிறேன்.

எமது ஊழி திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வேண்டி  இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தணிக்கை பிரிவிற்கு ஊழி திரைப்படம் சமர்ப்பிக்கப்பட்டது.


கடந்த ஆறாம் திகதி தணிக்கைக்காக திரைப்படத்தை பார்வையிட இருந்த போதும் எட்டாம் திகதியே தணிக்கை குழுவால் திரைப்படம் பார்வையிடப்பட்டது.

எனினும் 48 மணிநேரம் கடந்த நிலையிலும் இதுவரை தணிக்கை சான்றிதழ் குறித்த செய்தி எமக்கு கிடைக்கப்பெறவில்லை.

இலங்கை சுற்றுலாத்துறையில் ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கை சுற்றுலாத்துறையில் ஏற்படவுள்ள மாற்றம்


தணிக்கை சான்றிதழ்

ஊழி திரைப்படத்தை இலங்கையில் மக்கள் பார்வையிட மிகுந்த ஆர்வம் காட்டுகின்ற போதும் படத்தின் வெளியீடு தொடர்பாக எந்த அறிவிப்பையும் வழங்க முடியாத சூழலில் உள்ளோம்.

கருத்துச் சுதந்திரத்தை மதித்து, எமது கலைப்படைப்பினை இலங்கையில் வெளியிட அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்துள்ளோம்.

இலங்கையில் ஊழி திரைப்படத்தை வெளியிட அனுமதி கிடைக்கவில்லை: ஊழி பட இயக்குனர் | Permission Not Received For Publish Ooli Movie

எனவே, நாளைய தினம், (10.05.2024)   இலங்கை நேரப்படி 10.30 மணிக்கு இலங்கை வெளியீடு தொடர்பாக வெளிப்படுத்த உள்ளோம் என்பதையும் அறியத் தருகின்றேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கிளிநொச்சி(Kilinochi) மாவட்ட செயலக திறன் விருத்தி மண்டபத்தில் தமிழ்த் தேசிய கலை இலக்கிய பேரவையின் ஏற்பாட்டில் நேற்றைய தினம்(08) ஊழி திரைப்பட பாடல்கள் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?