முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

c 482 ரஷ்யாவிடம் மண்டியிட்ட உக்ரைன் போராளிகள்

ரஷ்யாவிடம் மண்டியிட்ட உக்ரைன் போராளிகள் - புடினுக்கு சொல்லப்பட்ட தகவல் மரியுபோலின் அசோவ்ஸ்டல் எஃகு ஆலையில் பதுங்கியிருந்த மீதமுள்ள உக்ரைன் போராளிகளும் "சரணடைந்துள்ளனர்" என்று ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு சரணடைந்தவர்களில் 531 பேர் இருந்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் பேசிய அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர், மரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டல் எஃகு ஆலை உக்ரேனிய போராளிகளிடமிருந்து முற்றிலும் விடுவிக்கப்பட்டுவிட்டதாக கூறியுள்ளார். ரஷ்யாவிடம் மண்டியிட்ட உக்ரைன் போராளிகள் - புடினுக்கு சொல்லப்பட்ட தகவல் அசோவ்ஸ்டல் முற்றுகையிடப்பட்ட நகரமான மரியுபோலின் கடைசி பெரிய கோட்டையாகக் கருதப்பட்டது. ஏனெனில் இந்த பகுதி புடினுக்கு மிக முக்கிய இலக்காக காணப்பட்டது. குறித்த பகுதி கிரிமியாவிற்கும் ரஷ்ய சார்பு பிரிவினைவாத கட்டுப்பாட்டு பகுதிகளான லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் இடையே ஒரு நில நடைபாதையை கொண்டது என சுட்டிக்காட்டப்படுகின்றது. இந்நிலையில், குறித்த ஆலையில் உக்ரைன் போராளிகள் பது

c 481 மொழி பிரச்சினையால் உதவியை இளந்த இலங்கையர்

பிரான்ஸில் இலங்கையருக்கு நேர்ந்த பரிதாப நிலை! பிரான்ஸில் வாழ்ந்து வரும் இலங்கையர் ஒருவர் மொழி பிரச்சினையால் தனது மாதாந்த உதவித் தொகையை இழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸில் வருமானம் குறைந்த குடும்பங்களுக்காக வழங்கப்படும் உதவித் தொகையை அந்நாட்டில் வாழும் இலங்கையர் ஒருவர் இழந்துள்ளார். பாரிஸில் வாழும் இந்த இலங்கையர் குடும்ப உதவி நிதி எனப்படும் உதவித் தொகையை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் அவரது கணக்குகள் சிலவற்றை புகுப்பிக்குமாறு பிரான்ஸ் அதிகாரிகள் அறிவித்திருந்தனர். இந்நிலையில் அவரால் அந்த மொழியை புறிந்துக் கொள்ள முடியவில்லை. அத்துடன் அவரது குடியிருப்பு அனுமதியும் புதுப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அவரது குடியிருப்பு அனுமதி பெப்ரவரி மாதம் புதுப்பிக்கப்பட்ட போதிலும் அவர் அதனை சமர்ப்பிக்கவில்லை என தெரியவந்துள்ளது. அவருக்கு பிரெஞ்சு மொழி தெரியாதென்பதனால், அவரது ஆவணங்களில், அவரிடமிருந்து கோரப்பட்ட தொகைகளை அவர் செலுத்த தவறியுள்ளார். இந்த நிலையில் அது தொடர்பான அதிகாரிகளிடம் ஆவணங்கள் எடுத்த செல்லப்பட்டுள்ளது. அவர் தனது நண்பருடன் அங்கு சென்று விடயங்களை தெளி

c 480 ரணிலின் கருத்தால் வெடித்தது சர்ச்சை

ரணிலின் கருத்தால் வெடித்தது சர்ச்சை பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஸ்கை நியூஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்பில் ஊடகவியலாளர் வினவிய போது. நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் போராட்டங்களில் பங்கேற்று புதிய அனுபவத்தைப் பெறலாம் என்று தெரிவித்தமையே சர்ச்சையை கிளப்பியுள்ளது. ரணிலின் கருத்தால் வெடித்தது சர்ச்சை இதேவேளை இந்தப் பேட்டியில் விவசாயத்திற்கு தேவைாயான உரம் இல்லாமையினால் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்குள் உணவு நெருக்கடியை இலங்கை சந்திக்க நேரிடும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையினால் கடனை திருப்பி செலுத்த முடியாததை முன்னிட்டு வெட்கப்படுவதாக பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார். அதேபோல் இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முன்னைய நிர்வாகமே பொறுப்புக்கூற வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

c 479 ராஜீவ் காந்தி மரணமும், வழக்கு கடந்து வந்த பாதையும்

ராஜீவ் காந்தி மரணமும், வழக்கு கடந்து வந்த பாதையும் - ஆண்டுவாரியாக நிகழ்ந்தவை என்ன? (இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீ பெரும்புதூரில் தற்கொலைப்படை குண்டுதாரி ஒருவரால் கொல்லப்பட்டார். இன்று வரையிலும் இந்த வழக்கு சூடு குறையாத பேசுபொருளாகவே இருந்து வரும் நிலையில், ராஜீவின் கொலைக்கு முன்னும் பின்னும் என்ன நடந்தது? வழக்கு கடந்து வந்த பாதை என்ன என்பதை ஆண்டுவாரியாக விளக்கும் இந்தக் கட்டுரையை உங்களுக்காக மறுபகிர்வு செய்கிறோம்.) 1991 மே 20: ஒதிஷா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு பகுதிகளில் தேர்தல் பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக வாடகைக்கு அமர்த்தப்பட்டிருந்த கிங் ஏர் விமானத்தில் புறப்பட்டார் ராஜீவ்காந்தி. 1991 மே 21 மாலை 6.30 மணி: விசாகப்பட்டணத்தில் இருந்து ராஜீவ் காந்தி சென்னை நோக்கிப் புறப்பட்டார். 1991 மே 21 இரவு 8. 20 மணி: சென்னை பழைய மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியது. அங்கிருந்து வாழப்பாடி ராமமூர்த்தி, மரகதம் சந்திரசேகர், பாதுகாப்பு அதிகாரிகளுடன் புறப்பட்டார் ராஜீவ். விளம்பரம் 1991 மே 21 இரவ

C 478 MAY 18 திருமதி சியாமினா அவர்களின் முள்ளி வாய்க்கால் கவிதை

அவுஸ்திரேலியாவில் 18/05//2022 குயின்ஸ்லாந்து மாதிலத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இனவளிப்பு நினைவு நிகள்வில் திருமதி சியாமளா யோகஸ்வரன் அவர்கள் நினைவு நிகழ்வில் கலந்து கொண்டே சுமார் 75 மக்கள் முன்னிலையில் தனது உணர்ச்சிக் கவிதையை வாசித்து அனைத்து மக்களையும் சிந்திக்க வைத்தார். இப்படி உணர்வு உள்ளவர்கள் புலத்திலும். ஈழத்திலும் குறிப்பிட ஒரு சிலரே உள்ளார்கள் என்பதும் குறிப்பிடக்தக்கது.

c477 மீண்டும் கலவரம் வெடித்தது:

மீண்டும் கலவரம் வெடித்தது: கொழும்பில் பாரிய ஆர்பாட்டம் மாணவர்களை கலைக்க முற்படும் பொலிசார் ! கொழும்பில் சற்று முன்னர் பெரும் ஆர்பாட்டம் ஒன்று வெடித்துள்ளது. இது கலவரமாகவும் மாறியுள்ளது. பல்கலைக் கழக மாணவர்கள், கோட்டபாயவை பதவி விலகச் சொல்லி பெரும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்களை கலைக்க பொலிசார் கண்ணீர் புகை கொண்டு தாக்கி வரும் நிலையில். மாணவர்களுக்கும் பொலிசாருக்கு இடையே மோதல் நிகழ்வதாக அங்கிருந்து அதிர்வின் செய்தியாளர் சற்று முன்னர் அறிவித்துள்ளார். சேத விரபரங்கள் இன்னும் தெரியவில்லை. அதுவரை அதிர்வின் செய்திகளோடு இணைந்திருங்கள்.

c 476 தமிழர்களை கருவருத்தவர்கள், அதற்க்கான பலனை அனுபவிக்கிறார்கள்! - Nanjil Sa...

தமிழர்களை கருவறுத்தவர்கள், அதற்கான பலனை அனுபவிக்கிறார்கள் -நாஞ்சில் சம்பத் காலம் ஒரு மருத்துவரைப் போன்றது. அறுப்பதற்கு ஒரு காலம் உண்டு என்றால் விதைப்பதற்கும் ஒரு காலம் உண்டு. 2009 இல் கூலிப்படைகளின் உதவியோடு ஈழத்து சொந்தங்களை கருவறுத்து மலர இருந்த தமிழ் ஈழத்தை மண்ணை அள்ளிப்போட்டு மிலேச்சத்தனமான நடவடிக்கைகளை மேற்கொண்டவர்கள் அதற்கான பலனை அனுபவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக கருதுகிறேன். இவ்வாறு தெரிவித்தார் சொல்லின் செல்வர் நாஞ்சில் சம்பத். முள்ளிவாய்க்கால் பெருந்துயரை முன்னிட்டு ஐ.பி.சி தமிழுக்கு அவர் அளித்த சிறப்பு நேர்காணலில் இதனைத் தெரிவித்தார்.அவர் தெரிவித்தவை காணொலி வடிவில்,