முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

c 423 மீட்டெடுப்பேன் - புதிய பிரதமர் ரணில் உறுதி

இலங்கை நெருக்கடி: மக்களை எல்லா பிரச்னைகளில் இருந்தும் மீட்டெடுப்பேன் - புதிய பிரதமர் ரணில் உறுதி இலங்கை மக்களை எதிர்காலத்தில் அவர்கள் எதிர்நோக்கவுள்ள சிரமங்களில் இருந்து மீட்டெடுப்பதற்காகவே பிரதமர் பொறுப்பை ஏற்றேன் என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதமராக வியாழக்கிழமை மாலையில் பதவியேற்றுக் கொண்ட பிறகு ஊடகங்களுக்கு பேசினார் ரணில். அப்போது பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்கும் நடவடிக்கைகளை தனியாக தம்மால் முன்னெடுக்க முடியாது என்றும் ஏனைய நாடுகள் மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றின் உதவிகள் அத்தியாவசியம் எனவும் அவர் தெரிவித்தார். மூன்று வேளைகளும் உணவு உட்கொள்ளும் வகையிலான பிரஜைகளாக இலங்கையர்கள் இருக்க வேண்டும். இலங்கை ரூபாவிற்கு பெறுமதி இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். அத்துடன், இளைஞர்களுக்கு எதிர்காலமொன்று இருக்க வேண்டும் என்றும் ரணில் தெரிவித்தார். அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களின் எண்ணிக்கை குறித்து இதுவரை தீர்மானம் எட்டப்படவில்லை என தெரிவித்த அவர், திங்கட்கிழமை அளவிலேயே அமைச்சரவை சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளும் எனவும் ரணில் குறிப்பி

c 422 தலைமை அமைச்சராகும் அதிசயம்!

தனித்து ஓர் எம்.பியாகத் தெரிவாகி தலைமை அமைச்சராகும் அதிசயம்! தமது கட்சியின் சார்பில் தனித்து ஏக எம்.பியாக - அதுவும் தேசியப்பட்டியல் மூலம் - நாடாளுமன்றம் சென்ற ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வேறு தரப்புகளோடு கூட்டணி அமைக்காமலேயே பிரதமராகும் அதிசயம் இன்று நடைபெறுகின்றது. தற்போதும் கொழும்பு அரசியலில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளைச் சாணக்கியமாகப் பயன்படுத்தி காய்களை நகர்த்திய அவர் அதன் மூலம் பிரதமர் பதவியை இன்று ஏற்கும் வாய்ப்பை சுவீகரித்துக் கொண்டார் எனத் தெரியவருகின்றது. தாம் இன்று பிரதமராகப் பதவியேற்கும் விவரங்களைப் பிற கட்சித் தலைவர்களுக்கு நேற்று அவரே உறுதிப்படுத்தினார் என அறியவந்தது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை நேற்று நேரடியாகச் சந்தித்துப் பேச்சு நடத்திய ரணில் விக்கிரமசிங்க அதனை அடுத்து ஏனைய கட்சிகளின் தலைவர்களுடனும் பிரமுகர்களுடனும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கலந்துரையாடினார். தாம் இன்று பிரதமராகப் பதவியேற்கின்றார் என்ற செய்தியை அப்போது அவர்களுக்கு ரணில் தெரியப்படுத்தினார். பல தலைவர்களையும் தொடர்பு கொண்டு அவர் ஆதரவு கோரினார் எனவும் தெரிகின்றது. ஸ்ரீலங

c 421 சரத் பொன்சேகாவின் அதிரடிப் பதில்!

பிரதமர் பதவி தொடர்பில் சரத் பொன்சேகாவின் அதிரடிப் பதில்! பொய்ப் பிரச்சாரத்தின் மூலம் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் முயற்சியை தான் வன்மையாகக் கண்டிப்பதாகவும், கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தில் எந்தவொரு பதவியையும் திட்டவட்டமாக ஏற்கப்போவதில்லையெனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் தனது உத்தியோகபூர்வ முகநூல் கணக்கின் பதிவிலேயே தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், தற்போதைய அரச தலைவரின் கீழுள்ள அரசாங்கத்தில் எந்தவொரு பதவியையும் ஏற்கத் தயாராக இல்லை என அந்த பதிவில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும் அமைதியான, வன்முறையற்ற உள்நாட்டுப் போராட்டத்தின் மூலம் முழு இலங்கை தேசத்தின் முக்கிய கோரிக்கைகளில் நானும் நிபந்தனையின்றி நிற்கின்றேன். அதுமட்டுமன்றி காலி முகத்திடல் போராட்ட மைதானத்தில் இருந்து நாட்டிற்காகவும், மக்களுக்காகவும், தேசத்தின் பேரப்பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகவும் குரல் கொடுக்கும் மக்களின் கோரிக்கைகளை நான் மிகவும் உணர்கின்றேன். ஆரம்பத்தில் இருந்தே, ப

c 420 முக்கிய நாடு ஒன்றில் இருந்து கோட்டாபறந்த கடிதம்பய

முக்கிய நாடு ஒன்றில் இருந்து கோட்டாபயவுக்கு பறந்த கடிதம் ரணிலை பிரமராகப்போட்டு இந்தியாவிற்கு செருப்படி கொடுங்கள். ஏனெனில் ரணில் வந்தால் ஐரோப்பா அமெரிக்கா போன்ற நாடுகளால் பொருளாதாரம் நிவர்த்தி செய்யக்கூடிய புற நிலை உருவாகும் என அதில் குறிப்பிடப்பட்டுயிருந்ததாகவும் . செய்வது அறியாது கோட்டாபய அலோசனைக்க பொன்சேகவிடம் சென்றுள்ளார். பொன் என்ன அலோசனை வாங்கினார் எதிர்வரும் காலங்களில் தெரிய வரும். பிரதமர் பதவி தொடர்பில் சரத் பொன்சேகாவை தொடர்புகொண்ட ஜனாதிபதி - கொழும்பு பிரதமர் பதவியை வழங்குவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவைத் தொடர்பு கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைக்கால தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு கட்சிகளுக்கு இடையில் இணக்கம் காணப்படாததன் காரணமாக தற்போதைய அரசியல் நெருக்கடியை முறியடிக்கும் முயற்சியில் ஜனாதிபதி இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், தாம் பிரதமராக நியமிக்கப்பட்டால், நாட்டை ஆள

c 419 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பம் - தமிழர்களுக்கு முக்கிய செய்தி தமிழினப் படுகொலை அரங்கேறிய முள்ளிவாய்க்கால் மண்ணைத் தொட்டு வணங்குவதற்கு இம்முறை பெருமளவான மக்கள் அணிதிரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை மாத்திரமன்றி தமிழர்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் நசுக்கும் செயற்பாடுகளில் சிங்களப் பேரினவாதத்தின் நிகழ்ச்சி நிரல் முன்னெடுக்கப்படுகின்றது என தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ். நிஷாந்தன் குற்றம்சாட்டியுள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “மே -12 ஆம் திகதி (இன்று) முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் ஆரம்பிக்கின்றது. இந்த நினைவேந்தல் நிகழ்வைக் குழப்பும் விதமாகவும் இந்நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்து கொள்ளக்கூடாது என்பதற்காகவும் சிங்களப் பேரினவாதம் அவர்களுடைய நிகழ்ச்சி நிரலை தெளிவாகத்தான் செயற்படுத்துகின்றது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பம் - தமிழர்களுக்கு முக்கிய செய

c 418 டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகை

டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகை அஞ்சலி..! – ரசிகர்கள் ஷாக்.. ! நடிகை அஞ்சலி தமிழ் சினிமாவில் சில பல ஹிட் படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளார். இவர் ஆந்திராவைச் சேர்ந்தவர். தமிழில் கற்றது தமிழ், அங்காடித்தெரு ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். இவர் நடித்த கலகலப்பு என்ற திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இடையில் சித்தியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் நடிகை அஞ்சலி சென்னையில் இருந்த அவரது சித்தி வீட்டை விட்டு வெளியேறி ஆந்திராவில் தனியாக வீடு வாங்கி வசித்து வந்தார். அப்போது பிரபல தமிழ் நடிகர் ஒருவருடன் லிவ்விங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்தார் என்ற தகவல்கள் கிசுகிசுக்கப்பட்ட அதற்கு ஏற்றாற் போலவே நடிகை அஞ்சலியும் அந்த குறிப்பிட்ட நடிகருடன் ஒரே வீட்டில் வசிப்பது போன்ற புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டு வந்தார். கசந்தது காதல்.. அதன் பிறகு அந்த நடிகருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அவரை விட்டு பிரிந்து விட்டு சினிமாவில் முழு வேகத்தில் பயணிக்க ஆயத்தம் ஆனார். ஆனால் சொல்லிக்கொண்டும் படவாய்ப்புகள் கிடைப்பதாக தெரியவில்லை. தமிழில்

c 416 ஒரு வாரத்தில் ராஜபக்ஷ தெரிவிப்பு

இலங்கை நெருக்கடி: ஒரு வாரத்தில் புதிய அரசாங்கம்; நாடாளுமன்றத்திற்கு அதிகாரம்: கோட்டாபய ராஜபக்ஷ ஒரு வார காலத்திற்குள் புதிய அரசாங்கத்தை அமைத்து, அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை மீள அமல்படுத்த தான் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கையில் விலைவாசி உயர்வு, பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் பொருளாதார வீழ்ச்சியால் மக்கள் வீதிக்கு வந்துள்ளனர். அவர்கள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷ குடும்பத்தினர் ஆட்சி அதிகாரத்தை விட்டு வெளியேற வேண்டும் எனக்கூறி காலி முகத்திடலில் ஒரு வாரத்துக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திங்கள் கிழமை மஹிந்த ஆதரவாளர்கள் காலி முகத்திடலில் கூடி இருந்த போராட்டக்காரர்களை தாக்கினர். இதனையடுத்து இலங்கையின் பல பகுதிகளில் வன்முறை பரவியது. பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்ஷ ராஜினாமா செய்தார். இந்நிலையில் இன்று இரவு சுமார் 9 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார் கோட்டாபய ராஜபக்ஷ. அப்போது பேசிய அவர் , நாடு ஸ்திரதன்மை அடைந்த பின்னர், ஜனாதிபதிக்கான நிறைவேற்று அதிகார முறைமையை இல்லாது செய்வதற்கும் தான் நடவடிக்கை எடுப்பதாக இ