முக்கிய நாடு ஒன்றில் இருந்து கோட்டாபயவுக்கு பறந்த கடிதம் ரணிலை பிரமராகப்போட்டு இந்தியாவிற்கு செருப்படி கொடுங்கள். ஏனெனில் ரணில் வந்தால் ஐரோப்பா அமெரிக்கா போன்ற நாடுகளால் பொருளாதாரம் நிவர்த்தி செய்யக்கூடிய புற நிலை உருவாகும் என அதில் குறிப்பிடப்பட்டுயிருந்ததாகவும் . செய்வது அறியாது கோட்டாபய அலோசனைக்க பொன்சேகவிடம் சென்றுள்ளார். பொன் என்ன அலோசனை வாங்கினார் எதிர்வரும் காலங்களில் தெரிய வரும்.
பிரதமர் பதவி தொடர்பில் சரத் பொன்சேகாவை தொடர்புகொண்ட ஜனாதிபதி - கொழும்பு
பிரதமர் பதவியை வழங்குவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவைத் தொடர்பு கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடைக்கால தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு கட்சிகளுக்கு இடையில் இணக்கம் காணப்படாததன் காரணமாக தற்போதைய அரசியல் நெருக்கடியை முறியடிக்கும் முயற்சியில் ஜனாதிபதி இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், தாம் பிரதமராக நியமிக்கப்பட்டால், நாட்டை ஆளக்கூடிய நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையைப் பெறுவதற்கு தனக்குப் பின்னால் பலம் இருப்பதாக பொன்சேகா நிரூபிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
தற்போது புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை நியமனத்தில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அடுத்த பிரதமர் யார் என்பது குறித்தும், உத்தேச இடைக்கால அரசாங்கத்தில் பொறுப்புகளை ஏற்பது குறித்தும் அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து இல்லாததால் இது தொடர வாய்ப்புள்ளதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதியாக இடைக்கால அரசாங்கத்தில் இணைவது குறித்து பரிசீலிப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச கோரியிருந்தார்.
எனினும், சரத் பொன்சேகா போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் வித்தியாசமான அணுகுமுறையைக் கொண்டிருப்பதால் கட்சியில் தற்போது பிளவு ஏற்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்