முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

c 415 முதல் பெண் கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி

முதல் பெண் கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி அவர்கள் பூமியில் உதித்த நன்நாள் இன்றாகும்…! 10-05-1973 – 16-08-1994 முதல் பெண் கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி அவர்கள் பூமியில் உதித்த நன்நாள் இன்றாகும்…! “கடலன்னையின் புரட்சிப் பெண் குழந்தை” கடற்புலிகள் மகளிர் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் நளாயினி அவர்கள் அங்கயற்கன்னியிடம், என்னம்மா ஏதாவது சொல்ல நினைக்கிறாயா? என்று கேட்டார். தயக்கமில்லாமல் மிகத் தெளிவாக அங்கயற்கண்ணியிடமிருந்து பதில் வந்தது. “உங்கட அன்பும், அண்ணையின்ர (தலைவரின்) அன்பும் எப்பவும் எனக்கு இருக்கவேணும்” தாயை நேசிப்பதையும் விட அதற்கும் மேலாக தலைவரையும், தன்னை வளர்த்துவிட்ட பொறுப்பாளர்களையும், தாயகத்தையும் நேசிப்பவர்கள்தான் கரும்புலிகள். உயர உயர அலைகளை வீசியெறியும் கடலுடன் நெருங்கிய நேசமான உறவை வைத்திருக்கும் அந்தக் கடற்கரை ஒரே வெண்மணல் பிரதேசம். சாதாரணமாக எந்த ஒரு இளம் பெண்ணுக்கும் இந்த வெண்மணற் பரப்பைப் பார்த்தால் தோழியருடன் ஓடிப்பிடித்து விளையாடத் தோன்றும். நீச்சல் பயிற்சியில் ஈடுபடவென கரைக்கு வந்த பெண் புலிகளின் மனம் ஏழைகளின் கண்ணீரில் இளகியது. அனுதாபத்துடன் அந்த மக்களி

c 414 வசந்தன் மாஸ்ரரின்நினைவு

வசந்தன் மாஸ்ரரின் 13ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும் வசந்தன் மாஸ்ரரின் 12ம் ஆண்டு நினைவு வணக்க நாள் -10.05.2021 “தலைமைச்செயலக படைக்கல வள பயிற்சிப் பொறுப்பாளர்” கேணல் வசந்/குமரிநாடான் ஆறுமுகம். அன்பழகன் ★மன்னார்★ ■“வசந்தன் மாஸ்ரர்” என்ற அர்ப்பணிப்பு மிக்க உன்னதமான போராளியை 1993 தமிழீழ படைத்துறைப்பள்ளியில் பார்த்தேன் உயரமான, கறுத்த, மிடுக்கான உருவம், மாஸ்ரரை பார்த்தால் அல்லது அவர் வந்திருக்கிறார் என்றால் எமக்கு முன் படைத்துறைப்பள்ளியில் இருந்தவர்களின் முகத்தில் ஏதோ ஒரு வித மாற்றம் வரும். அவர் போராளிகளுக்குக் கொடுக்கின்ற பயிற்சி அவ்வளவு கடினம் மட்டுமல்லாது பயிற்சியை முறையாகச் செய்யாதவர்களுக்கு அடிப்பதும் காரணமாக இருந்தது. அவரிடம் பயிர்ச்சி பெற்றவர்களுக்கு அவர் மீது எவ்வளவு கோவம் இருந்ததோ அதை விட மேலாக பாசமும் இருந்தது. “கடும் பயிற்சி; இலகுவான சண்டை” என்ற அண்ணையின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்தவர் எங்கள் வசந்தன் மாஸ்ரர். 1993 காலப்பகுதியில் எனக்கு மாஸ்ரருடன் பழகும் சந்தர்ப்பம் அதிகம் கிடைக்கவில்லை, 1995 க்கு முன்பு நான் மாஸ்டரை எப்போதாவது ஒரு முறை எமக்குப் பயிற்சி அளிப்பதற்கு வரு

c 413 ஐ.நா.கண்டனம்

இலங்கையில் வன்முறைகளை தடுத்து அமைதியை ஏற்படுத்துங்கள்… ஐ.நா. மனித உாிமைகள் ஆணையம் வலியுறுத்தல்!! இலங்கையில் நடைபெற்று வரும் வன்முறை சம்பவத்திற்கு ஐ.நா. மனித உாிமைகள் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இலங்கையில் அத்தியாவசிய பொருட்கள், பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. இதனால் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்கள் முதல் பொதுமக்கள் வரை அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான அரசை பதவி விலக வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். இந்தப் போராட்டம் கடந்த சில நாட்களாக தீவிரமடைந்து வரும் நிலையில் இலங்கையில் மீண்டும் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த சில வாரங்களாக அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகிய இருவரும் பதவி விலக வேண்டும் என மக்கள் வீதியில் இறங்கி போராடி வந்தனர். இந்த நிலையில் இலங்கையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனிடையே போராட்டகரர்களின் அழுத்தத்திற்கு பணிந்து பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். இந்த

c 412 கோட்டாபய சற்றுமுன் வழங்கியுள்ள அறிவிப்பு

இலங்கையர்கள் அனைவருக்கும் கோட்டாபய சற்றுமுன் வழங்கியுள்ள அறிவிப்பு இலங்கையர்கள் அனைவரிடமும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சற்ற முன் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார். இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவில், பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சவால்களை வெற்றிகொள்வதற்கு, அனைத்து இலங்கையர்களும் ஒன்றாக கைகோர்க்க வேண்டிய தருணம் இது. இன மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் உங்களைத் தள்ளும் நாசகார முயற்சிகளை நிராகரிக்குமாறு அனைத்து இலங்கையர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். நிதானம், சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வை ஊக்குவித்தல் இன்றியமையாதது என அவர் அறிவித்துள்ளார். என்னை சாதரனமணிதனாக நினைக்க வேண்டாம் பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு முள்ளி வாக்கால் பேர் அவலத்தைவிட நீங்கள் கடுமையான துன்பத்தை அறுவபிக்க நேரிடும். 30 வருட சுத்தத்தை அழித்து முடிவிற்கு கொண்டு வந்த எனக்கு இப் பொருளாதர பிரச்சனையை நிவர்த்தி செய்ய போதிய காலத்தை எனக்கு வளக்குங்கள். முதலில் என்னை நம்புக்கள். என குறிப்பிட்டுள்ளார்,.

c 411 முன்பே பேசிய நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

அந்த நாடு உருப்படாது'...இலங்கைப் பற்றி முன்பே பேசிய நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இரண்டு மாதங்களாக அரசாங்கத்துடனான கடுமையான சண்டையின் பின்னர், இன்று காலை கொழும்பில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மஹிந்தவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலை தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வன்முறையாக மாறியது. இதனால் அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. சில மணி நேரங்களில் மஹிந்த பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். மஹிந்த ராஜினாமா செய்வதாக அறிவித்த போதிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகாததால் கொழும்பில் வன்முறைகள் வேகமாக பரவின. கொழும்பில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 130க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும், முன்னாள் அமைச்சர் ஒருவரின் கார் பொது குளத்தில் மூழ்கடித்தனர். மேலும் போராட்டங்கள் தொடர்வதால், அதனைக் கட்டுப்படுத்த விடுப்பில் சென்ற பொலிஸாரை உடனடியாக பணிக்கு திரும்புமாறு இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அமரகீர்த்தியின் வாகனத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள்

c 410 103 வீடுகள் சேதம்; துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் காயம்

இலங்கையில் தற்போது என்ன நடக்கிறது? - 103 வீடுகள் சேதம்; துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் காயம் இலங்கையில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் மற்றும் பொது சொத்துக்களை கொள்ளையடிப்பவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த முப்படையினருக்கு பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், வன்முறையில் ஈடுபடும் நபர்கள் மீதும் துப்பாக்கி பிரயோகம் நடத்த முடியுமெனவும் பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இலங்கையில் இன்று காலை 10 மணி முதல் 6 மணி வரையான காலப்பகுதிக்குள் நடைபெற்ற தாக்குதல் சம்பவங்களில் 103 வீடுகள் கடுமையான சேதம் அடைந்துள்ளன என காவல்துறையின் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றில் மூலம் தெரிவித்துள்ளது. விளம்பரம் இலங்கையில் கொளுத்தப்பட்ட வாகனங்கள், தொடரும் பதற்றம்: தற்போதைய நிலையை விளக்கும் படங்கள் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து விலகல்: அடுத்து என்ன நடக்கும்? இந்த கால பகுதியில் 88 வாகனங்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். காலி ரத்கம பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் மூவர் காயமடைந்துள்ளனர். ரத்கம பிரதேச சபை தலைவரின் வீட்டிற்கு அர

c 409 தமிழர் பகுதியில் தலைமறைவாகி உள்ள மஹிந்த குடும்பம்

தமிழர் பகுதியில் தலைமறைவாகி உள்ள மஹிந்த குடும்பம் - வெளியான அதிர்ச்சித் நாட்டில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு நிலையை அடுத்து மகிந்த குடும்ப தப்பியோடி தலைமாறைவாகி உள்ளனர். முன்னாள் பிரமரான மகிந்த ராஜபக்ச, ஷிரந்தி ராஜபக்ச மற்றும் ரோஹித ராஜபக்ச மற்றும் அவர்களது குடும்பத்தினர் இராணுவ ஹெலிகாப்டரில் திருகோணமலை கடற்படை முகாமில் தஞ்சம் புகுந்துள்ளனர். நேற்றிரவு அலரி மாளிகையில் பதுங்கி இருந்த மஹிந்த குடும்பம் இன்று அதிகாலை பலத்த இராணுவ பாதுகாப்புடன் அங்கிருந்து வெளியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.