முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

c 408 தென்னிலங்கையில் வெடித்த கலவரம்: 7 பேர் உயிரிழப்பு

தென்னிலங்கையில் வெடித்த கலவரம்: 7 பேர் உயிரிழப்பு - வெளிவரும் பகீர் நேற்று திங்கட்கிழமை ஏழு பேர் இறந்துள்ளனர் மற்றும் 220 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இமதுவ பிரதேச சபையின் தவிசாளர் ஏ.வி.சரத் குமார, அவரது இல்லத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் உயிரிழந்துள்ளார். பிரதேச சபைத் தலைவர் நேற்று இரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதேவேளை, நேற்று இரவு அலரிமாளிகைக்கு அருகில் இடம்பெற்ற அமைதியின்மையின் போது கண்ணீர் புகைக்குண்டு வெடித்ததில் பொலிஸ் உப காவல்துறை பரிசோதகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தென்னிலங்கையில் வெடித்த கலவரம்: 7 பேர் உயிரிழப்பு - வெளிவரும் பகீர் தகவல்கள் 24 வயதான காவல்துறை உத்தியோகத்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கொழும்பில் உள்ள காலி முகத்திடல் மைதானத்தில் மாரடைப்பு காரணமாக மற்றுமொரு மூத்த பிரஜையும் உயிரிழந்துள்ளார். தென்னிலங்கையில் வெடித்த கலவரம்: 7 பேர் உயிரிழப்பு - வெளிவரும் பகீர் தகவல்கள் குறித்த நபர் வைத

c 407 தமிழர் தரப்புக்கு கிடைத்த பெரு வெற்றி

தமிழர் தரப்புக்கு கிடைத்த பெரு வெற்றி வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த மண்ணிலே தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமை ஒன்று உள்ளது என்பதை சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே தங்களுடைய எதிர்பார்ப்பு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளை காட்டிலும், இலங்கை அதிகளவு இராணுவப் படைகளை கொண்டிருப்பதே நாடு தற்போது எதிர்நோக்கி உள்ள பாரிய பொருளாதார சிக்கலுக்கு காரணம் என கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், ''எமது நாடு அலங்கோலமான மிகவும் மோசமான நிலையை எட்டியிருக்கின்றது. வன்முறை உச்சத்தைத் தொட்டிருக்கின்றது. ராஜபக்சக்களின் குண்டர்கள் நியாயமான போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் இடங்களிற்குள் புகுந்து அவர்களைத் தாக்கியிருக்கின்றார்கள். தமிழர் தரப்புக்கு கிடைத்த பெரு வெற்றி அதனால் கோபம் கொண்ட எமது மக்கள் மாவட்டங்கள் தோறும் வன்முறைகளைக் கையில் எடுத்திருக்கின்றார்கள். சட்டம் ஒழுங்கு நிலைகுலைந்திருக்கின்றது. இந்த நாடு மிக மோசமான நி

c 406 மஹிந்த அனுப்பிய ராஜிநாமா கடிதம்

தமிழர்களை அடைக்கியது போல் எங்களை அக்க முடியாது இந்தியா இராணுவம் வந்தாலும் செருப்படி அடி மக்கள் தெரிவிப்புஇலங்கை: கோட்டாபயவுக்கு மஹிந்த அனுப்பிய ராஜிநாமா கடிதம் - இனி என்ன நடக்கும்? இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இலங்கை பிரதமர் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவியில் இருந்து விலகும் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபயவுக்கு அனுப்பியுள்ளார். இந்த தகவலை பிரதமர் அலுவலக ஊடகப்பிரிவு செயலாளர் ரோபன் வெலிவிட செய்திக்குறிப்பு மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். இலங்கையில் நீடித்து வரும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளும் ஆரசாங்கம் நிரந்தரத் தீர்வை வழங்கத் தவறியதாகவும் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை வகித்து வரும் ராஜபக்ஷ குடும்பத்தினர் அமைச்சரவையில் இருந்து விலக வேண்டும் என்றும் கோரி கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராடத் தொடங்கினார்கள். ஆனால், தமது பதவியில் இருந்து விலக முடியாது என்று கோட்டாபய ராஜபக்ஷவும் மஹிந்த ராஜபக்ஷவும் ஆரம்பத்தில் கூறி வந்தனர். பிரதமர் பதவி விலகுவார் என்று சில முறை ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தபோதும், அதை வெளிப்படையாகவே கோட்டாபயவும், மஹிந்தவும் மறுத்தனர்.

“c 405 தெருக்கள் எங்கும் பிணங்கள் கிடந்தன”

“தெருக்கள் எங்கும் பிணங்கள் கிடந்தன” – ரஷ்ய ஆக்கிரமிப்பு எல்லையில் தப்பிய பெண்ணின் கதை “அது தான் எங்கள் கடைசி நிமிடங்களாக இருக்குமென்று நினைத்தோம். மிகவும் பயமாக இருந்தது. ஆனால், நாங்கள் அதிர்ஷ்டசாலிகள்.” எலெனாவும் தப்பியோடிய குழுவும் ரஷ்ய படைகளின் சோதனைச் சாவடிகளில் ஒன்றைக் கடந்து சென்ற பிறகு, ரஷ்ய படைகள் ஷெல் தாக்குதலைத் தொடங்கிய தருணத்தை நினைவு கூர்ந்தார். யுக்ரேனில் உள்ள ரஷ்ய ஆக்கிரமிப்பு நகரமான இஸ்யமில் உள்ள ஒரு மழலையர் பள்ளியின் அடித்தளத்தில் இரண்டு மாதங்களாகப் பதுங்கியிருந்த பிறகு, எலெனா பாதுகாப்பை நோக்கிய ஆபத்தான பயணத்தில் இரண்டு நாட்களை சாலையில் கழித்தார். ரஷ்ய கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசத்தில் இருந்து வெளியேறிச் சென்ற வாகனத் தொடரணியில் இருந்த 20 பேரில் எலெனவும் அவருடைய மகளும் இருந்தனர். தன்னார்வலர்கள் ஏற்பாடு செய்த பாதையைப் பயன்படுத்தி கடந்த வெள்ளிக்கிழமை அவர்கள் தப்பினார்கள். “அந்த நேரம் முழுவதும் நாங்கள் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தோம்,” என்று கூறிய 52 வயதான எலெனா, பல ரஷ்ய சோதனைச் சாவடிகளை எப்படிக் கடந்து வந்தார் என்பதை விவரித்தார். படையினர் அவர்களிடம் “எங்கு செல

c 404 டொலரின் பெறுமதி 400 ரூபாவாகும் நரிப்பிள்ளை ரணில்

டொலரின் பெறுமதி 400 ரூபாவாகும்! ரணில் தெரிவிப்பு டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி தொடச்சியாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் எதிர்வரும் வாரமளவில் டொலரின்பெறுமதி 400 ரூபாவை அண்மிக்கும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், வெளிநாட்டு கையிருப்பு வரையறுக்கப்பட்டதால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு பலர் தொழில்வாய்ப்புகளை இழந்துள்ளனர். மறுபுறம் பணவீக்கம் அதிகரித்துள்ளதால் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளாந்தம் அதிகரித்த நிலையில் உள்ளன.இலங்கையில் தனிநபர் வருமானம் டொலரை விட குறைந்த மட்டத்திற்கு சென்றுள்ளது. நட்டமடையும் அரச நிறுவனங்கள் குறித்து அவதானம் செலுத்த வேண்டும். பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அரசுக்கு சுமையாக இல்லாமல் இலாபமடைய வேண்டுமாயின் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட வேண்டும். தற்போதைய நிலைமையில் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டால் அது சமூக கட்டமைப்பில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நடுத்தர மக்கள் பொருளதார ரீதியில் பாரிய நெருக்கடிகளை தற்போது எதிர்கொண்டுள்ளார்கள்.நடைமுறையில் உள்ள வரவு செலவு திட்டத்தை புறக்கணித்து மக்களுக்

c 403 நாடு சந்திக்கவுள்ள பாரிய விளைவு -

அவசரக்கால சட்டத்தால் நாடு சந்திக்கவுள்ள பாரிய விளைவு - தமிழ் தேசிய மக்கள் முன்னணி அவசரகாலச் சட்டம் மீண்டும் அமுலானதால் நாட்டின் பொருளாதாரத்தில் பேரழிவை ஏற்படுத்தும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (TNPF) தெரிவித்துள்ளது. மேலும், மக்களின் அமைதியான போராட்டத்தை ஒடுக்கும் முயற்சிகளை அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுக்கும் என அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய அவர், அரசாங்கம் ஸ்திரமாக இருக்க வேண்டும் என்ற சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கையை சுட்டிக்காட்டினார். எனவே, நாட்டில் ஸ்திரத்தன்மை ஏற்படாவிட்டால், இவ்வாறான நடவடிக்கைகள் பொருளாதாரத்தை மோசமான நிலைக்கு கொண்டு செல்லும் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எச்சரிக்கை விடுத்துள்ளார். அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை மக்கள் முழுமையாக எதிர்த்த போது அதனை ஒடுக்குவதற்காக அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்

c 402 எதிர்வர வாரம் நிகழவுள்ள அதிரடி அரசியல் மாற்றங்கள்

இலங்கையில் எதிர்வர வாரம் நிகழவுள்ள அதிரடி அரசியல் மாற்றங்கள் ஜனாதிபதியும் பிரதமரும் பாதுகாப்பாக உள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீதிக்கு செல்ல முடியாத நிலை காணப்படுவதாக அரசாங்கத்தில் இருந்து சுயாதீனமாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமண வீரசிங்க தெரிவித்துள்ளார். இடைக்கால அரசாங்கம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், பொதுஜன முன்னணி இடைக்கால அரசாங்கத்திற்கு கொள்கையளவில் இணக்கம் தெரிவித்தது. பொதுஜன பெரமுனவுடன் இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டுமென மகாநாயக்க தேரர்கள் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றனர். இடைக்கால அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதான எதிர்க்கட்சிகளுடன் நாளை அல்லது நாளை மறுதினம் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. இதற்கு சாதகமான பதில் கிடைக்காத பட்சத்தில், 39 சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தும்.