முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

TAMIL Eelam news b488

கனடாவில் இலங்கை தமிழரின் விபரீத முடிவு; பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம் கனடாவில் அரசியல் தஞ்சம் நிகராகரிக்கப்பட்ட இலங்கை தமிழர் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் மட்டக்களப்பை சேர்ந்த 40 வயதான நபரே இவ்வாறு உயிர்ழந்துள்ளார். கடந்த 12ஆம் திகதி உயிரிழந்துள்ள நிலையில் அவரின் இறுதிக் கிரியைகள் நேற்று முன்தினம் நடைபெற்றன. உயிரிழந்த நபர் கடந்த 2010ஆண்டு சண்சீ (sun sea) கப்பல் மூலம் கனடா சென்ற குறித்த நபர் பிரிட்டிஸ் கொலம்பியா மாகாணத்தில் வாழ்ந்து வந்துள்ளார். கடந்த 11 வருடங்களாக கனடாவில் அகதி கோரிக்கை முன்வைத்த போதும் அரசினால் அவரது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை என கூறப்படுகின்றது. தாயகத்தில் நடைபெற்ற போரால் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், கனடாவில் அகதி கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக மனவிரக்தியில் அவர் உயிரை மாய்த்துள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

TAMIL Eelam news b487

சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றி இன்று முதல் பாடசாலைகளை திறப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வியமைச்சர் தினேஸ் குணவர்தன ) . நீண்ட காலங்களுக்குப் பின் இலட்சக்கணக்கான மாணவர்கள் பெரும் ஆவலுடன் இன்றைய தினம் பாடசாலைகளுக்கு சமுகமளிப்பரெனவும் குறிப்பிட்டுள்ளார். நீண்ட காலத்துக்குப் பின் தமது பிள்ளைகளின் மகிழ்ச்சியான முகத்தை நேரடியாக காண்பதற்காக அனைத்து ஆசிரியர்களும் பாடசாலைகளுக்கு சமுகமளிப்பார்களென தாம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். கல்வி என்பது பிள்ளைகளின் எதிர்காலமென்பதுடன் அது பிள்ளைகளின் வளர்ச்சிக்கான பலம் என்றும் குறிப்பிட்டுள்ள கல்வி அமைச்சர், அந்த கல்வியை பெற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அரச அதிபர் பிரதமர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோர் தலையீடு செய்து நம்பிக்கைக்குரிய தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கு முன்வந்துள்ளனரென்றும் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் பருத்தித்துறை முதல் தெய்வேந்திரமுனை வரை, மேல் மாகாணம் தொட்டு கிழக்குமாகாணம் வரை பரந்து வாழும் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமுகமளிப்பதை எவர

TAMIL Eelam news b486

இங்கிலாந்தில் நாடு கடத்தலை எதிர்கொண்டுள்ள இலங்கை தமிழ் குடும்பம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி குறித்த புதிய ஆராய்ச்சியை மேற்கொள்ளும் இலங்கை விஞ்ஞானி தனது குடும்பத்துடன் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்கொண்டிருப்பதாக கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. கலாநிதி நடராஜா முகுந்தன்(Dr. Nadaraja Mukundan), 47, அவரது மனைவி ஷர்மிளா(Sharmila), 42, மற்றும் அவர்களின் 13, ஒன்பது மற்றும் ஐந்து, வயதுடைய மூன்று குழந்தைகள்,இந்த நாடு கடத்தல் அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர். 2018 இல் சூரிய சக்தியை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் மெல்லிய பட ஒளிமின்னழுத்த சாதனங்களின் உற்பத்திதுறையில் பணிபுரிய முகுந்தனுக்கு வழங்கப்பட்ட அனுமதியால் அவர் இங்கிலாந்துக்கு வந்தார். பொதுநலவாய திட்டமொன்றின்மூலம் இங்கிலாந்துக்கு வந்து ஆராய்ச்சி செய்து பணியாற்ற அவருக்கு அனுமதி கிடைத்தது. அவரது மனைவி முதியோர் இல்லத்தில் வயதானவர்களைப் பராமரிக்கும் வேலையைப் பெற்றார். நவம்பர் 2019 இல், முகுந்தன் தனது நோய்வாய்ப்பட்ட தாயைப் பார்க்க ஒரு குறுகிய பயணமாக தனது சொந்த நாடு திரும்பினார். அங்கு அவர் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்

TAMIL Eelam news b485

யாழில் காதலனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற யுவதி; நடுவீதியில் நேர்ந்த சம்பவம்! யாழில் காதலனின் மோட்டார் சைக்கிளில் ஏறிச் சென்ற யுவதியை, நடுவீதியில் வழிமறித்து, கன்னத்தில் சகோதரன் அறைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது . இந்த சம்பவம் நேற்று முன்தினம் யாழ்ப்பாணம், கொக்குவிலிற்கு அண்மையாக காலையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. உயர்கல்விக்காக இரண்டு யுவதிகள் மோட்டார் சைக்கிளில் யாழ் நகர் பக்கமாக சென்று கொண்டிருந்த நிலையில், கொக்குவிலிற்கு அண்மையாக அந்த யுவதிகளில் ஒருவரின் காதலனான சக மாணவன் அங்கு வந்து காதலியை ஏற்றிக் கொண்டு சென்றுள்ளார். இந்நிலையில் அவர்கள் சிறிது தூரம் சென்றபோது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் ஒருவர் அவர்களை நிறுத்தியதுடன் யுவதியின் கன்னத்தில் அறைந்துள்ளார். குடும்பத்தினரின் கண்டிப்பை மீறி, காதலனுடன் தொடர்பு கொள்வதை அறிந்த யுவதியின் சகோதரன், நேரில் வந்து அவர்களை கையும் மெய்யுமாக பிடித்து சகோதரியை அறைந்ததுடன் தனது மோட்டார் சைக்கிளில் சகோதரியை ஏற்றிக் கொண்டு சென்றதாகவும் கூறப்படுகின்றது.

TAMIL Eelam news b484

போர்க்குற்றவாளிகளை பிரித்தானியா தடை செய்வது தொடர்பில் வழங்கப்பட்டுள்ள உத்தரவாதம் பிரத்தானியாவின் மக்நிட்ஸ்கை தடைகளுக்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குழுவில் இலங்கையின் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மீதான தடை ஆராயப்படும் உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. சவேந்திர சில்வா உட்பட்ட இலங்கை போர்க்குற்றவாளிகளை பிரித்தானியா தடை செய்வது தொடர்பான மற்றுமொரு இராஜதந்திர சந்திப்பு ஒன்று, லூசியம் கிழக்கு பிராந்தியத்தின் நாடாளுமன்ற உறுப்பினரும், மக்நிட்ஸ்கை தடைகளுக்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குழுவின் (APPG for Magnitsky Sanctions) உப தலைவருமான ஜெனட் டாபி (Hon Janet Daby) அவர்களுடன் இன்று திங்கள் கிழமை (18/10/2021) இடம்பெற்றது. மனித உரிமை செயட்பாட்டாளரும் சட்ட ஆலோசகருமான கீத் குலசேகரம் தலைமையில் நடைபெற்ற இந்த முக்கிய சந்திப்பில் ITJP அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரான்சிஸ் கரிசன் (Frances Harrison), மற்றும் தெழில்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் (Tamils For Labour) அமைப்பின் தலைவர் திரு சென் கந்தையா ஆகியோர் விசேட பேச்சாளர்களாக கலந்து கொண்டனர். இச் சந்திப்பின் போது யுத்தக்குற்றவ

TAMIL Eelam news b483

விடுதலைக்காகப் போராடிய இனத்தின் நிலை என்ன? கடுமையாக சாடிய சாணக்கியன் இனத்தின் விடுதலைக்காய் போராடிய இனத்தை இன்று பசளைக்காகவும் போராடும் நிலைக்கு இந்த அரசும் அரசுடன் இணைந்துள்ளவர்களும் சேர்ந்து தள்ளியுள்ளார்கள். இது விவசாயிகளின் பிரச்சினை மாத்திரமல்ல, சோறு சாப்பிடும் அனைவரினதும் பிரச்சினை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் (Shanakiyan Rajaputhiran Rasamanickam) தெரிவித்துள்ளார். வெல்லாவெளியில் இன்று திங்கட்கிழமை(18) இடம்பெற்ற விவசாயிகளின் பிரச்சனைகளுக்கான தீர்வு கோரிய போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “நேற்றைய தினம் கடலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று தரை வழிப் போராட்டமாக மாறியிருக்கின்றது. எங்களது இனத்தின் விடுதலைக்காகப் போராடிய இனம் இன்று வாழ்வாதாரத்திற்காகப் போராடும் நிலைமைக்கு இந்த அரசு தள்ளிருக்கின்றது. நேற்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து பருத்தித்துறை வரை கடல் வழியாக எமது மீனவர்களின் வாழ்வாதாரத்துடன் சம்மந்தப்பட்ட சில பிரச்சனைகளை அமைச்சரும், அரசாங்கமு

TAMIL Eelam news b482

பரபரப்பான ரயில் நிலையத்தில் பட்டப்பகலில் நடந்த கொடூர சம்பவம்! நடுங்கிப்போன மக்கள் 14 வயது சிறுவன் ஒருவர் பட்டப்பகலில் பரபரப்பான ரயில் நிலையம் ஒன்றில் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரின் அமைந்துள்ள அந்த ரயில் நிலையத்தில் நேற்று மதியத்திற்கு மேல் 3.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பட்டப்பகலில் இடம்பெற்ற இந்த வன்முறை சம்பவம் ஒன்றில் 14 வயதான Justin McLaughlin உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார். இச்சம்பவத்தை படுகாயமடைந்த சிறுவன் ராணி எலிசபெத் பல்கலைக்கழக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிறிது நேரத்திற்கு பின்னர் குறித்த சிறுவன் சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கிளாஸ்கோ நகரின் அமைந்துள்ள அந்த ரயில் நிலையத்தில் நடந்த இந்த கொடூர சம்பவம் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் பயணிகளை நடு நடுங்க வைத்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுத்து வருவதாகவும், சம்பவத்திற்கு தொடர்பான காரணிகளை விசாரணைக்கு உட்படுத்தப்படும் எனவும் ஸ்கொட்லாந்து பொலிஸார்