முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

TAMIL Eelam news b481

‘‘புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் பேசுவது பயங்கரவாதிகளுடன் பேசுவதற்கு ஒப்பானது’’ "இலங்கை அரசால் தடை செய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புக்களுடன் பேசுவது பயங்கரவாதிகளுடன் பேசுவதற்கு ஒப்பானது என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் (G. L. Peiris) தெளிவுபடுத்தியுள்ளார். அண்மையில், ஐ.நா. பொதுச்செயலரை சந்தித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இலங்கையின் பிரச்சினைகள் உள்நாட்டு பொறிமுறையின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்றும், புலம்பெயர் தமிழர்களுடன் இது தொடர்பாக பேச்சு நடத்தத் தயாராக இருக்கிறேன் என்றும் தெரிவித்திருந்தார். ஆனால், புலம்பெயர் தமிழ் அமைப்புக்களில் இலங்கை அரசு தடை செய்த பட்டியலில் உள்ள அமைப்புக்களுடன் பேச்சு நடத்தப்படமாட்டாது என்று வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கொழும்பு ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார். இதற்கான காரணம் என்னவென்று பீரிஸிடம் ஊடகங்கள் வினவியபோது, "உலகத் தமிழர் பேரவை, பிரிட்டிஸ் தமிழர் பேரவை, கனேடிய தமிழ் காங்கிரஸ், அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், கனேடிய தமிழ் தேசிய சபை, தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் உலகத் தமிழ் ஒருங்கிணைப்புக் குழு ஆகியவை பாதுகாப்பு அம

TAMIL Eelam news b480

கடும் நெருக்கடியில் இலங்கை அரசு -இந்தியாவிடம் கோரப்பட்ட உதவி எரிபொருள் கொள்முதல் செய்ய இந்தியாவிடம் 500 மில்லியன் டொலர் கடனுதவியை இலங்கை அரசு கோரியுள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இலங்கையில் தற்போதைய நிலவரப்படி வரும் ஜனவரி வரை மட்டுமே எரிபொருள் கையிருப்பு இருக்கும் என அண்மையில் எரிசக்தித் துறை அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்திருந்த நிலையில், கடனுதவி கோரப்பட்டுள்ளது. இலங்கை அரசின் பெற்றோலிய கூட்டுத்தாபனம், இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத்தொகை 3.3 பில்லியன் டொலரை தாண்டியுள்ளது. இதன் காரணமாகவும் எரிபொருள் கொள்முதலுக்கு இந்தியாவின் உதவியை இலங்கை நாடுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா தாக்கத்தால் கடும் அந்நிய செலவாணி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கை, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை அடுத்து அதற்கென அதிகம் செலவிடும் நிலையில் உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAMIL Eelam news b479

இந்தியா இரணுவத்தை இலக்கு வைக்கும் சிங்களச் சிப்பார்கள் சைனாவின் திட்டமா? இந்திய இராணுவ தளபதி பங்கேற்ற நிகழ்வில் - கைக்குண்டு வெடித்து சிறிலங்கா இராணுவ அதிகாரி இந்திய - சிறிலங்கா படைகள் இணைந்து நடத்தும் ‘மித்ரா சக்தி’போர்ப்பயிற்சியின்போது கைக்குண்டு வெடித்ததில் சிறிலங்கா 6 வது பொறியியல் படைப்பிரிவின் மேஜர் தர அதிகாரி காயமடைந்துள்ள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இவ்வாறு காயமடைந்த அவர் பொலனறுவை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாதுருஓயாவில் நடைபெற்ற பயிற்சியின் போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்தது. இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானா இந்த பயிற்சி நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவும் உடனிருந்தார். அவரது உடல்நிலை மோசமாக இல்லை எனினும் மேஜரின் விரல்களில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

TAMIL Eelam news b478

விஷமாகும் தேன்…. சூடான நீருடன் ஒருபோதும் இப்படி சாப்பிடாதீங்க! மரணம் கூட நிகழலாம்? தமிழர்களின் ஆயுர்வேதத்தில் தேனுக்கு என்று தனி இடம் உண்டு என்பது அனைவருக்கும் தெரியும். தேனை வயிற்றின் நண்பன் என்று சொல்லும் அளவிற்கு வயிறு சம்பந்தமான பிரச்சினைகளை தீர்ப்பதில் அதற்கு நிகர் எதுவும் இல்லை. தினமும் அளவாக சாப்பிட்டால் கண், தோல், வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள், இருதய நோய்கள், ஆஸ்துமா, மூட்டுவலி, தூக்கமின்மை, ஜலதோசம், தலைவலி ஆகியவற்றிற்கு சிறந்த தீர்வாக அமைகிறது. அளவுக்கு மீறினால் இனிப்பாக இருக்கும் தேனும் பாதிப்பை தான் ஏற்படுத்தும். சராசரி வாழ்க்கையில் நாள் ஒன்றுக்கு 50 மி.லி. அளவுக்கு மேல் ஒருவர் தேனை உட்கொள்ளக்கூடாது. அதனை அப்படியே சாப்பிவதோடு மட்டுமல்லாமல் பால், தண்ணீர், பானங்கள் (அதிக வெப்பநிலையில் இருக்ககூடாது) ஆகியவற்றில் கலந்து சாப்பிடலாம். அதிகளவு சூடான பானங்களில் தேன் கலக்கும் போது அது நச்சுத்தன்மை கொண்டதாக மாறுகிறது. இதனால் புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது. அது மட்டும் இன்றி நெய்யும், தேனும் ஒன்றாக கலந்து சாப்பிடக்கூடாது. நீரிழிவு நோயாளிகளின் உயிரை பறிக்கும் தேன்... எச்ச

TAMIL Eelam news b477

பாரிய போராட்டத்திற்கு தயாராகும் வட கிழக்கு - அணிதிரளுமாறு சாணக்கியன் அழைப்பு வட கிழக்கு மக்களின் வாழ்வாதாரங்களை காப்பாற்றும் போராட்டங்களிற்கு அனைவரையும் அணிதிரளுமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் (Shanakiyan Rajaputhiran Rasamanickam) அழைப்பு விடுத்துள்ளார். வடமாகணத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் M.A. சுமந்திரனால் முன்னெடுக்கப்படும் கவன ஈர்ப்பு போராட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பின் முழு ஆதரவுடன் மட்டக்களப்பிலும் எதிர்வரும் நாளை (18) நடாத்துவதாக தீர்மானித்துள்ளார்கள். இவ் கவனஈர்ப்பு போராட்டமானது தரை மற்றும் கடல் வழி என நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில்..! வெல்லாவெளியில் காலை 8 மணிக்கும், கொக்கட்டிச்சோலையில் 8.30 மணிக்கும், ஆயித்தியமலையில் 9.30 மணிக்கும், வந்தாறுமூலையில் 10.30 மணிக்கும், கிரானில் 11.30 மணிக்கும், என ஐந்து இடங்களில் விவசாயிகளால் இடம்பெறும் கவன ஈர்ப்பு போராட்டத்தில் அந்தந்த பகுதி பிரதேச தவிசாளர்கள் உறுப்பினர்கள், தமிழ்தேசியகூட்டமைப்பு உறுப்பினர்கள

TAMIL Eelam news b476

மிருகங்கள் போல் உறவு முறையில் மாற்றம் பெரும் கவலையில் தமிழர்கள், தாயின் மூன்றாவது கணவரால் சிறுமிகளுக்கு நேர்ந்த துயரம் முல்லைத்தீவு - வட்டுவாகல் பகுதியில் தாயின் மூன்றாவது கணவரால் இரு சிறுமிகள் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வட்டுவாகல் கிராமத்தில் தாயின் மூன்றாவது கணவரால் சிறுமிகள் இருவர் பலமுறை தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் இருவரும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் கிராமத்தவர்களால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தாயும் இதற்கு உடந்தையாக இருந்ததால் அவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். தனது பிள்ளைகள் மூன்றாவது கணவரால் தொடர்ச்சியாக துஸ்பிரயோக்திற்கு உள்ளாகி வருகின்றமை தாய்க்கு தெரிந்தும் அதற்கு உடந்தையாக இருந்ததாக தாய் மீது குற்றம் சமத்தப்பட்டுள்ளது. இவர்களை கடந்த 13ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது அவர்களை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.

TAMIL Eelam news b475

கனடாவில் இலங்கை தமிழருக்கு லொட்டரில் அடித்த மிகப்பெரிய அதிர்ஷ்டம்! கனடாவில் கொரோனா தொற்று காரணமாக தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு தவிந்துவந்த இலங்கைத்தமிழர் ஒருவருக்கு லொட்டரியில் மிகப்பெரிய பரிசு விழுந்துள்ளது. கனடாவின் Barrie நகரில் வசிந்துவரும் பிரதீபன் சிவராசா(Pradeepan Sivarasa) (42)என்ற இலங்கை நபருக்கே இந்த அதிஷ்டம் அடித்துள்ளது. இதேவேளை, Lotto Max லொட்டரியில் பிரதீபன் சிவராசாவுக்கு $500,000 (இலங்கை மதிப்பில் கிட்டத்தட்ட ரூ 9 கோடி) பணத்தொகை கிடைத்துள்ளது. இதுகுறித்து பிரதீபன் சிவராசா தெரிவிக்கையில், கொரோனாவால் எனது ஊழியர்கள் வருவமானத்தை இழப்பதை நான் விரும்பவில்லை, அதனால் எனது சொந்த செலவில் அவர்களுக்கு நிதியுவதி அளித்து வந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் தற்போது லொட்டரியில் விழுந்த பணத்தை எனது வியாரத்தில் முதலீடு செய்யவதாக தெரிவித்துள்ளார். மேலும் லொட்டரியில் விழுந்த 9 கோடி என்னுடையது என்று என்னால் நம்பவே முடியவில்லை என கூறியுள்ளார்.