தமிழர் பகுதியில் நான்கு கடைகள் தீக்கிரை

By Sulokshi 1 மணி நேரம் முன்
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இரு. கீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)( (b21 லெப் கேணல்))(. மேஜர் b12 )(கப்டன் b13 )(2ம் லெப்டினன்ட் b14) வீரவேங்கைb15)( b16 உதவி யாழர்) தலைவர் ஏனைய படம்b17)(லெப்டின்ட்b19)
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதியில் வர்த்தக நிலையங்கள் மீது தீப் பரவியதில் புடவைக் கடை உட்பட மூன்று கடைகள், வாகனங்கள் கழுவும் இடம் என்பன எரிந்து நாசமாகியுள்ளது.
இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (07) 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபையின் தீ அணைக்கும் படையினர் இராணுவத்தினர் பொது மக்கள் இணைந்து தீ யை அணைத்த போதிலும் அனைத்தும் எரிந்து நாசமாகியுள்ளன.
அத்துடன் இந்த தீ விபத்தில் வாகனங்களும் எரிந்து முற்றாக சாம்பலாகியுள்ளன.
தீபரவலுக்கான காரணம் கண்டறியப் படாத நிலையில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கருத்துகள்