முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

d 752 கடற்றொழிலில் ஈடுபடும் தமிழர்கள் மீது சிங்களவர்கள் தாக்குதல்; கஜேந்திரன்

கடற்றொழிலில் ஈடுபடும் தமிழர்கள் மீது சிங்களவர்கள் தாக்குதல்; கஜேந்திரன் திருகோணமலை மாவட்டத்தில் கடற்றொழிலில் ஈடுபடும் தமிழர்கள் மீது சிங்கள பேரினவாத சமூகத்தை சேர்ந்தவர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். இவ்வாறான ஓர் சம்பவம் கடந்த 6 ஆம் திகதி திருகோணமலை நகரை அண்மித்துள்ள திருக்கடலூர் பகுதியில் இடம்பெற்றதாகவும் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். திருகோணமலை, திருக்கடலூர் பகுதிக்குள் கடந்த சில தசாப்தங்களுக்கு முன்னதாக தமிழர்களை விரட்டியடித்துவிட்டு அத்துமீறி சிங்களவர்கள் குடியேறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கடற்றொழிலில் ஈடுபடும் தமிழர்கள் மீது சிங்களவர்கள் தாக்குதல்; கஜேந்திரன் | Sinhalese Attack On Tamils In Fishing Gajendran அதன்படி குறித்த பகுதியில், தமிழர்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல்கள் இடம்பெற்று வருவதுடன், சிங்களவர்களால் கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்படுவதாகவும் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். இதனால், தமிழ்மக்கள் பலர் காயமடைந்துள்ளதுடன், வீ

d 751 இலங்கை பாதுகாப்பற்றநாடு உங்களிற்கும் இந்த நிலை வரலாம். தற்காலிகமாக அங்கே செல்வதை நிறுத்தவும்,

இன்று இரவு கோர சம்பவம் - மர்ம நபரால் சுட்டு கொல்லப்பட்ட 29 வயது இளைஞன் அஹுங்கல்ல, மித்தரமுல்ல பிரதேசத்தில் இரண்டு குழந்தைகளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த 29 வயதுடைய நபரொருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் இந்த சம்பவம் இன்று இரவு (14) இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் உயிரிழந்த நபரை துப்பாக்கியால் சுட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இரண்டு சிறுவர்கள் [5AEHO7] மோட்டார் சைக்கிள் கவிழ்ந்ததில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு சிறுவர்களும் சிறு காயங்களுக்குள்ளான நிலையில் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், உயிரிழந்தவர் அஹுங்கல்ல பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

d750 ரஷ்யா உக்ரைன் உக்கிர போர் பின்னணி - அதிரடியாக வெளியேற்றப்பட்ட அதிகாரிகள்!

உளவு தகவல்களை சேகரித்த குற்றச்சாட்டுக்காக 15 ரஷ்ய தூதரக அதிகாரிகளை நோர்வே அரசாங்கம் அதிரடியாக வெளியேற்றியுள்ளது. உக்ரைன் – ரஷ்யாவுக்கு இடையேயான போர், கடந்தாண்டு பெப்ரவரி மாதம் தொடங்கிய சில நாட்களிலேயே ரஷ்ய தூதர்கள் உளவு தகவல்களை சேகரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பேரில் பல நாடுகள் தங்களது நாடுகளில் ரஷ்ய தூதரக அதிகாரிகளுக்கு தடை விதிக்க தொடங்கின. மேலும் சில நாடுகள் அவர்களுக்கு கடவுச்சீட்டுக்களை வழங்கவும் மறுத்திருந்தன. அதிகாரிகள் வெளியேற்றம் ரஷ்யா உக்ரைன் உக்கிர போர் பின்னணி - அதிரடியாக வெளியேற்றப்பட்ட அதிகாரிகள்! | Russia Ukraine War Norway Embassy Threat Spying இந்த நிலையில், ரஷ்யாவின் அயல் நாடான நோர்வேயின் தலைநகரான ஓஸ்லோவில் அமைந்துள்ள ரஷ்ய தூதரகத்தில் பணிபுரியும் தூதரக அதிகாரிகள் தங்களது நாட்டின் உளவுத்தகவல்களை சேகரிப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனை தங்களது நாட்டின் பாதுகாப்புக்கு மிகுந்த அச்சுறுத்தலாக நோர்வே கருதிய நிலையில், குறித்த அதிகாரிகளிடத்தில் விசாரணைகளும் நடத்தப்பட்டன. உளவுத் தகவல்கள் சேகரிப்பு ரஷ்யா உக்ரைன் உக்கிர போர் பின்னணி - அதிரடியாக வெளியேற்றப்பட்ட அதி

d 749 தமிழீழப்பகுதியில் தொடரும் வறுமக்கொலைகள் பின்னால் யார்?

தமிழர் பகுதியில் குளத்தில் மிதந்த சடலத்தால் பரபரப்பு! முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, வள்ளிபுனம் நடனமிட்டான் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் உள்ள குளம் ஒன்றில் இருந்து உயிரிழந்த குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் 03 ஆம் ஒழுங்கை வள்ளிபுனம் – புதுக்குடியிருப்பு பகுதியினை சேர்ந்த 50 அகவையுடைய டா.டேவிட் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தமிழர் பகுதியில் குளத்தில் மிதந்த சடலத்தால் பரபரப்பு! | A Body Floated In A Pond Tamil Area குளக்கரையில் மிதிவண்டி மற்றும் செருப்பு, சறம் குளக்கரையில் உயிரிழந்தவரின் மிதிவண்டி மற்றும் செருப்பு, சறம் என்பன அடையாளம் காணப்பட்டுள்ளன. குறித்த நபரின் உயிரிழப்புக்கான காரணம் வெளியாகாத நிலையில் சம்பவம் தொடர்பிலான விசாரணைகைள புதுக்குடியிருப்பு பொலீசார் மேற்கொண்டு வருவதாககவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

d 748 தமிழர்களின் உணர்வு சாகவில்லை

இறுதி யுத்தத்தில் விடுதலைப்புலிகளின் தனித்துவம்..! இறுதி யுத்தத்தில் விடுதலைப்புலிகள் ஒரு சதம் கூட செலவு செய்யவில்லை என்றும் மாறாக இலங்கை அரசு கோடிக்கணக்கில் செலவு செய்ததாகவும் உலக வாழ் புலம்பெயர் தமிழர் அமைப்பின் பிரதிநிதி நிமலன் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். லங்காசிறி செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும், மக்களோ அல்லது தமிழினமோ நசுக்கப்பட்டால் ஒரு தலைவர் அல்ல 100 தலைவர்கள் உருவாகுவார்கள் எனவும் சுட்டிக்காட்டியிருந்தார் சுதந்திரம் மறுக்கப்படும் சந்தர்ப்பத்தில் ஒரு தலைவர் அல்ல ஒரு இலட்சம் தலைவர்களும் உருவாகுவார்கள். ஒவ்வொருத்தரும் தலைவர்களாகுவார்கள். அந்த இனத்திற்குள் இருந்து 1000 தலைவர்களும் வருவாகுவார்கள். நாங்கள் அடுத்த தலைவர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். இன்று தமிழர்களின் போராட்டம் எப்படி உலகம் அறியப்பட்டது? அதாவது தமிழினம் 18 வீதம் கொண்ட சிறிய இனம். ஆனால் மிகப்பெரிய அரசாங்கத்திற்கு எதிராக மிகப்பெரிய யுத்தம் எப்படி முன்னெடுக்கப்பட்டது என்பது உலகத்திற்கே தெரியும். யுத்தத்தை நடத்த இலங்கை அரசாங்கம் 20 கோடி செலவழித்தது. ஆனால்

d 747 ஐ.நாவின் பொறிக்குள் மீண்டும் சிங்களம்

ஐ.நாவின் பொறிக்குள் மீண்டும் சிக்கும் சிறிலங்கா - ஆரம்பமானது விசாரணை! தொழில் நிமித்தம் சுற்றுலா விசாவில் ஓமனுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண்கள் அங்கு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டமை அண்மையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இது தொடர்பான விசாரணைகளை ஐ.நா ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், அடிமைத்தனத்தின் தற்போதைய வடிவங்கள் தொடர்பிலான ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் டொமொயோ ஒபக்கட்டா மூலம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை, மேற்குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. பதிலளிக்காத அரசாங்கம் ஐ.நாவின் பொறிக்குள் மீண்டும் சிக்கும் சிறிலங்கா - ஆரம்பமானது விசாரணை! | Public Bidding For Sexual Work Un Investigation இந்த விவகாரம் குறித்து சிறிலங்கா அரசாங்கம் 60 நாட்களிற்குள் பதிலளிக்கவேண்டும் எனத் தெரிவித்து, அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு பெப்ரவரி 7ஆம் திகதி கடிதமொன்றும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிறிலங்கா அரசாங்கம் இது குறித்து பதிலளிக்கவில்லை. இந்நிலையிலேயே தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

d 746 அவுஸ்திரேலியாவில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கையர்கள்!

அவுஸ்திரேலியாவில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கையர்கள்! வெளியான அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து வடக்கு பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியொன்றுக்கு விடுமுறையை கழிப்பதற்கு சென்ற இரண்டு இலங்கையர்கள், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தில் 59 வயதான தந்தை மற்றும் 21 வயதுடைய மகன் ஆகியோரே உயிரிழந்துள்ளனர். எட்டு வருடங்களுக்கும் மேலாக மெல்போர்னில் உள்ள போக்குவரத்து நிறுவனத்தில், உயிரிழந்த தந்தை பணிபுரிந்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. காப்பாற்றப்பட்ட மகள் அவுஸ்திரேலியாவில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கையர்கள்! வெளியான பின்னணி | Sri Lankan Current News இவர்கள், குயின்ஸ்லாந்தில் கிரிஸ்டல் கேஸ்கேட்ஸ் நீர்வீழ்ச்சியை பார்வையிட்டதுடன், அங்கு நீராடியுள்ளனர். இதன்போது தண்ணீரில் நீந்திக் கொண்டிருந்த தந்தை முதலில் பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அவரது மகனும் மகளும் அவரை மீட்க முயன்று நீரோட்டத்தில் சிக்கியுள்ளனர். இந்நிலையில் மகள் காப்பாற்றப்பட்ட போதிலும் இந்த சம்பவத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.