முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

d 176 இலங்கையில் குடும்ப வண்முறை அதிகரிப்பு,

ஒரே குடும்பத்தைச்சேர்ந்த நால்வர் மீது வாள்வெட்டு - சிறுவன் பலி தனிப்பட்ட தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த மூன்றரை வயது சிறுவன் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதுடன் தாய், பிள்ளைகள் இருவர் படுகாயமடைந்துள்ளனர். அயலவரே தாக்குதலாளி ஒரே குடும்பத்தைச்சேர்ந்த நால்வர் மீது வாள்வெட்டு - சிறுவன் பலி | A Sword On Members Of The Same Family மாத்தளை காவல்துறை பிரிவிற்குட்பட்ட ரணபிமகம பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று (14) காலை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.குறித்த வீட்டிற்கு அருகில் உள்ள நபரே இந்த தாக்குதலை நடத்தியதாக தெரியவருகிறது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த 38 வயதான தாய், 19 வயது மகள் மற்றும் 15 வயது சிறுவன் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வாளுடன் சந்தேகநபர் கைது ஒரே குடும்பத்தைச்சேர்ந்த நால்வர் மீது வாள்வெட்டு - சிறுவன் பலி | A Sword On Members Of The Same Family குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட வாளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுவனின்

d 175 யாழில் பெண்களின் ஆடைகளைக் கிழித்த பொலிஸார்!(Photos)

யாழில் பெண்களின் ஆடைகளைக் கிழித்த பொலிஸார்!(Photos) யாழில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட இழுபறியில் , பெண் ஒருவரின் ஆடை கிழிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கில் காணப்படும் காணி தொடர்பான பிரச்சினைகள்,சுவீகரிப்புகள்,மற்றும் அரச திணைக்களங்களுக்கு சொந்தமான காணிகள் தொடர்பில் ஆராய்தல் போன்றவற்றுக்காக ,ஆளுநர் அலுவலகத்தில் இன்று கூட்டம் ஒன்று ஆரம்பமாகியுள்ளது. யாழில் பெண்களின் ஆடைகளைக் கிழித்த பொலிஸார்!(Photos) | Police Tore Women S Clothes Jaffna ஆளுநர் அலுவலகத்தில் கூட்டம் குறித்த கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜ தலைமையில் , யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் ,முப்படைகளுடன் தற்போது நடைபெறுகிறது. அதேவேளை மக்களின் காணிகளை அபகரித்து ,படையினருக்கு வழங்குவதாக தெரிவித்து,இன்றைய தினம் மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். யாழில் பெண்களின் ஆடைகளைக் கிழித்த பொலிஸார்!(Photos) | Police Tore Women S Clothes Jaffna இதன்போது கூட்டத்துக்கு வருகை தந்த முப்படைகளை உள்ளே நுழைய விடாமல் மக்கள் தடுத்த நிலையில் , பொலிஸார் போராட்டக்

d 174 செவ்வாயில் உயிர்கள் உள்ளதா? 3.5 லட்சம்

செவ்வாயில் உயிர்கள் உள்ளதா? 3.5 லட்சம் கோடி ஆண்டுகள் பழமையான ஆஸ்திரேலிய பாறைகள் சொல்லும் ரகசியங்கள் ஜோனதன் அமோஸ் பட மூலாதாரம்,FRANCES WESTALL / CNRS ORLÉANS ஆஸ்திரேலியாவில் உள்ள பில்பாரா பகுதியில் 3.5 லட்சம் கோடி ஆண்டுகள் பழமையான பாறைகள், செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருந்தனவா என்பதை அறிய விஞ்ஞானிகளுக்கு உதவியாக இருக்கிறது. அந்த பாறைகள் குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் ஆராய்ச்சியாளர்கள் அந்த பாறைகள் பழமையான நுண்ணுயிரிகளால் தங்கள் அம்சங்களை பெற்றிருக்கலாம் எனத் தெரிவிக்கின்றனர். செவ்வாய் கிரகத்தில் இதே காலகட்டத்தைச் சேர்ந்த பழமையான பாறைகள் குறித்து நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் விண் ஊர்தி கண்டறியும்போது இந்த ஆஸ்திரேலிய பாறைகளின் அம்சங்களை அது ஒத்து இருக்கிறதா என ஆராய வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள். செவ்வாய் கிரகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னதாக உயிர்கள் இருந்தனவா என்பதற்கான ஆதாரத்தை பெர்சவரன்ஸ் ரோவர் தேடி வருகிறது. சிவப்புக் கோடு நீரிழிவு நோய் வராமல் தடுக்க என்ன சாப்பிட வேண்டும்? வந்தால் சமாளிப்பது எப்படி? கரு முட்டையை நோக்கி விந்தணு நீந்துவதாக சொல்லப்படுவது கட்டுக்கதையா? தொ

d 173 சிறை வாழ்க்கை எப்படி இருந்தது ? - நளினி பேட்டி

ராஜீவ் கொலை வழக்கு: 32 ஆண்டு சிறை வாழ்க்கை எப்படி இருந்தது ? - நளினி பேட்டி 8 மணி நேரங்களுக்கு முன்னர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருந்த நளினி உள்ளிட்ட ஆறு பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சாந்தன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் சிறப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தனது சிறை வாழ்க்கை, சட்டப் போராட்டம், ராஜீவ் காந்தி உள்பட 17 பேர் கொல்லப்பட்டது போன்றவை குறித்து பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசினார் நளினி ஸ்ரீகரன். பேட்டியிலிருந்து. கே. 30 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருந்திருக்கிறீர்கள். அந்த அனுபவத்தைப் பற்றிச் சொல்லுங்கள்.. ப. அதற்கு முன்பு நான் சிறையைப் பார்த்ததே கிடையாது. சிறை என்றால் என்னவென்றே தெரியாது. முதன் முதலில் ரிமாண்ட் செய்து தனி செல்லில் அடைத்தபோது மிகவும் பயந்து போய்விட்டேன். கத்தி, அமர்க்களம் செய்து வெளியில் ஓடிவந்துவிட்டேன். எனக்கு அடுத்த அறையில் அடைக்கப்பட்டிருந்த ஆதிரை, அதற்கு அடுத்த அறையில் அடைக்கப்பட்டிருந்

d 172 ஆண் பெண் இருவகையினரின் தீவிர உழைப்பால் 800 கோடியைத்தொட்ட உலகம்,

உலக சனத்தொகை இன்றுடன் 800 கோடி..! ஐ.நா வெளியிட்டுள்ள புதிய தகவல் இன்றுடன் உலக மக்களின் தொகை 800 கோடியை தொட்டுவிடும் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. அதேவேளை, மக்கள் தொகையில் சீனாவை இந்தியா முந்திவிடும் என ஐ நா தெரிவித்துள்ளது. கொரோனாதொற்று காரணத்தால் கடந்த 2020 ஆம் ஆண்டு மட்டும் மக்கள் தொகை பெருக்கம் ஒரு விழுக்காட்டிற்கு குறைவாக பதிவானது. இந்நிலையில், இன்றுடன் (15) உலகின் மக்கள் தொகை 800 கோடியை தொட்டுவிடும் என ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு நடத்திய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. உலக மக்கள் தொகை தினம் உலக சனத்தொகை இன்றுடன் 800 கோடி..! ஐ.நா வெளியிட்டுள்ள புதிய தகவல் | World Population India China Population Un Report ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11 ஆம் திகதி உலக மக்கள்தொகை தினமாக கடைப்பிடிக்கப்படுறது. இந்த ஆண்டு மக்கள் தொகை தினத்தன்று ஐநா சபை வெளியிட்ட அறிக்கையின்படி நம்பர் பதினைந்தாம் திகதியோடு உலகின் மக்கள் தொகை 800 கோடியை தொட்டுவிடும் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதேவேளை, உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்னும் சிறப்பை பெற்றுள்ள சீனாவை இந்தியா 2023 ஆம் ஆண்டு மக்கள் தொகையில் ப

d 171 மாவீரர் நாள் ஏற்பாடுகள் தீவிரம்..

மாவீரர் நாள் ஏற்பாடுகள் தீவிரம்..! கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக - திரண்டெழ அழைப்பு யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. நவம்பர் 21ஆம் திகதி காலை 9மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ள இக் கல்வெட்டுக்கள் நவம்பர் 27ஆம் திகதி வரையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருக்குமென யாழ். மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் தெரிவித்தார். திரண்டெழ அழைப்பு மாவீரர் நாள் ஏற்பாடுகள் தீவிரம்..! கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக - திரண்டெழ அழைப்பு | Maveerar Day 2022 Jaffna அத்தருணத்தில் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு அஞ்சலி செலுத்தமுடியும். இதற்கு அனைவரும் ஒத்துழைப்புத்தர வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இந்தக் கோரிக்கையை அவர் விடுத்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், உரிய அனுமதியுடன் நினைவேந்தல் மாவீரர் நாள் ஏற்பாடுகள் தீவிரம்..! கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக -

d 170 மன நிலையில் மாற்றத்தை ஏற்படுத்திய திரு சுமந்திரன்

அதிரடி முடிவை எடுக்க தயாராகும் எம்.பி! எமது மக்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்துவதற்காக கட்சி வேறுபாடுகளை புறம் வைத்து அனைவரையும் உரையாடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். எதிர்வரும் 15 ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) மாலை 5.30 மணிக்கு சம்பந்தனின் கொழும்பிலுள்ள இல்லத்தில் ஒன்று கூடுமாறு வடகிழக்கு தமிழ் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதிரடி முடிவை எடுக்க தயாராகும் எம்.பி! | Mp Preparing To Take Action இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடகிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வே தமிழ் தேசிய பிரச்சினைக்கான தீர்வு என்பதை, வடகிழக்கு தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் ஒன்றாக வலியுறுத்த வேண்டிய சந்தர்ப்பமொன்று எழுந்துள்ளது. எமது கட்சிகளுக்கிடையில் பல்வேறு பேதங்கள் இருந்தாலும் எமது மக்களின் அடிப்படை அபிலாஷையை வெளிப்படுத்த வேண்டிய இந்த வேளையில் கட்சி வேறுபாடுகளை புறம் வைத்து விட்டு அதனை உரத்துக் கூற அனைவரும் ஒன்றிணைய வேண்டிய தரு