முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

c 614 எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவம் துப்பாக்கிச் சூடு - தமிழர் பகுதிய...

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவம் துப்பாக்கிச் சூடு - தமிழர் பகுதியில் பரபரப்பு ( காணொளி) முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவத்தினருக்கும் பொதுமக்களுக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினருக்கும் வரிசையில் காத்திருந்த பொதுமக்களுக்கும் இடையிலேயே இன்று இரவு 8.00 மணியளவில் இந்த முரண்பாடு ஏற்பட்டுள்ளது. முரண்பாடு தீவிரமடைய, பொதுமக்களால் இராணுவத்தினர் மீது போத்தல்கள் வீசப்பட்டதையடுத்து, இராணுவத்தினர் வானத்தை நோக்கி துப்பாக்கிப்பிரயேகம் மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றுள்ளதுடன், இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

c 613 முதன் முறையாக நீச்சல் உடையில்.

முதன் முறையாக நீச்சல் உடையில்.. இளம் நடிகை ஸ்ரீமுகி..! – ஷாக் ஆன இந்த செய்தியை பகிருங்கள் தொகுப்பாளினியாக சின்னத்திரையில் நுழைந்த இளம் நடிகை ஸ்ரீமுகி தனது வசிகர முகத்தாலும் சுறுசுறுப்பாக பேசும் தன்னுடைய பேச்சு திறமையாலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி கடந்த சில வருடங்களாக தெலுங்கு ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றார். தொடர்ந்து நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கிய பிக் பாஸ் மூன்றாவது சீஸனில் கலந்துகொண்டு இரண்டாம் இடத்தை பிடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி இவரை மிகவும் பிரபலமாக்கியது என்று கூறவேண்டும் தொடர்ந்து சினிமாவில் நடிக்கும் ஆசையில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவர் தற்பொழுது தன்னுடைய அழகான தொடை அழகை பளிச்சென காட்டும் படியான போட்டோ ஷூட் நடத்தி அவற்றை இணையத்தில் வெளியிட்டு நெட்டிசன்களை ஷாக் ஆகியுள்ளார். ஆரம்பத்தில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் தொகுப்பாளினியாக இருந்தவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிறகு பரபரப்பாக பேசப்படும் நடிகையாக மாறினார். தன்னுடைய இந்த பிரபலத்தை வீணடித்து விடக்கூடாது என்பதற்காக சூட்டோடு சூடாக சினிமாவில் நுழைந்துவிட வேண்டும் என்ற ஆசையில்

c 612 கொழும்பில் ஏற்பட்ட பதற்ற நிலை

கொழும்பில் ஏற்பட்ட பதற்ற நிலை - 6 பொலிஸார் காயம் - பெண் உட்பட பலர் கைது கொழும்பின் புறநகர் பகுதியான அத்துருகிரிய எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்கு அருகில் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது. இதன்போது பெண் ஒருவர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. 6 பொலிஸார் காயம் கொழும்பில் ஏற்பட்ட பதற்ற நிலை - 6 பொலிஸார் காயம் - பெண் உட்பட பலர் கைது இதன்போது, 6 பொலிஸார் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் எரிபொருள் தீர்ந்து போயிருந்த போதும், வரிசையில் காத்திருந்த மக்கள் எரிபொருள் கேட்டு குழப்பத்தில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை கொழும்பில் ஏற்பட்ட பதற்ற நிலை - 6 பொலிஸார் காயம் - பெண் உட்பட பலர் கைது சம்பவத்தில் காயமடைந்த ஆறு பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள் இன்று

c 611 உணவுக்கு மட்டுமே தீர்வு ரணில்

இதுவே தமது கொள்கை! பிரதமர் ரணில் வெளியிட்ட தகவல் உணவு நெருக்கடியில் எவரையும் பட்டினியில் வைத்திருக்காமல் இருப்பதே தமது கொள்கை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (17-06-2022) காலை பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற உணவுப் பாதுகாப்பு தொடர்பான குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதுவே தமது கொள்கை! பிரதமர் ரணில் வெளியிட்ட தகவல் மேலும் அவர் தெரிவித்தது, உணவு நெருக்கடியானது எதிர்வரும் காலங்களில் நாட்டில் 4 மில்லியனிலிருந்து 5 மில்லியன் மக்களை நேரடியாகப் பாதிக்கக்கூடிய போதிலும் அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மீது அதிக கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தினார். இதுவே தமது கொள்கை! பிரதமர் ரணில் வெளியிட்ட தகவல் உணவு நெருக்கடியை வெற்றிகரமாகக் கையாள்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தலைமையில் குழுவொன்றை நியமிக்குமாறும் அதில் அமைச்சர் நிமல் சிறிபால, கலாநிதி ஹர்ஷ டி சில்வா மற்றும் ஜனாதிப

c 610 இலங்கை அரசாங்கத்தின் முடிவு தவறானது

இலங்கை அரசாங்கத்தின் முடிவு தவறானது - மத்திய வங்கியின் ஆளுநர் வெளிப்படை இலங்கை அரசாங்கம் காட்டிய தாமதம் தவறானது சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார மீட்பு கடனுதவியை இலங்கை பெற்றுக்கொள்ள வேண்டும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை முன்னதாக நாடியிருந்தால், இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியை தவிர்த்திருக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். வெளியில் இருந்து உதவியை பெற்றுக்கொள்வதில் இலங்கை அரசாங்கம் காட்டிய தாமதமானது தவறானது என பி.பி.சி க்கு வழங்கிய செவ்வியில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கூறியுள்ளார். சர்வதேச நாணய நிதியம் உட்பட சர்வதேச சமூகத்தின் ஐந்து பில்லியன் டொலர் நிதி உதவி, இவ்வாண்டு தேவை என நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார். கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத நிலை இலங்கை அரசாங்கத்தின் முடிவு தவறானது - மத்திய வங்கியின் ஆளுநர் வெளிப்படை இலங்கை தனது வரலாற்றில் கடந்த மாதம் வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத நிலைமையை அடைந்திருந்தது. சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்லும் முடிவை ஆரம்ப

c 609 பாலியில் சந்தோசத்திற்காக அதை செய்து விட்டு குழத்தையை குப்பையில் எறியும் பரிதாப நிலை.

நாய்களால் கடித்துக் குதறப்பட்ட பச்சிளம் குழந்தை: தொட்டில் குழந்தை திட்டம் என்ன மு.பிரசன்ன வெங்கடேஷ் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவுத் திட்டங்களில் ஒன்றான தொட்டில் குழந்தை திட்டம் தமிழகம் முழுவதும் செயல்படாமல் முடங்கியுள்ளதால் பச்சிளம் குழந்தைகள் வீதிகள் வீசப்படும் அவலங்கள் தொடர்ந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சிசு கொலைகள் நடைபெறாத வண்ணம், உசிலம்பட்டிக்கு பல்நோக்கு துறையினர் இணைந்து சிறப்புக் கவனம் செலுத்தி உரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் என்கிறார் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன். தொட்டில் குழந்தை திட்டம் பச்சிளம் குழந்தைகள் கைவிடப்படக் கூடாது என்ற நோக்கத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்டது. 1992ஆம் ஆண்டு முதன்முறையாக சேலத்தில் இதை அறிமுகப்படுத்தினார் ஜெயலலிதா. தமிழகம் முழுவதும் பெற்றோரால் கைவிடப்பட்ட 5 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் தொட்டில் குழந்தை திட்டத்தின் மூலம் காப்பகங்களில் சேர்க்கப்பட்டு, குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு சட்டப்படி தத்துக் கொடுக்கப்பட்டன. தற்போதைய சூழலில் இந்த உயரிய திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட

c 608 ஆஸ்திரேலிய குடிவரவு தடுப்புமுகாமில் இளைஞன் மரணம்

மேற்கு ஆஸ்திரேலிய குடிவரவு தடுப்புமுகாமில் கத்திக்குத்துக்கு இலக்காகி இளைஞன் மரணம் மேற்கு ஆஸ்திரேலியாவின் Yongah Hill குடிவரவு தடுப்புமுகாமிலிருந்த இளைஞர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி மரணமடைந்துள்ளதாக Refugee Action Coalition தெரிவித்துள்ளது. துருக்கிய பின்னணி கொண்ட 32 வயது இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த இளைஞர் துருக்கிக்கு நாடுகடத்தப்படும்நோக்கில், கடந்த 3 ஆண்டுகளாக பெர்த்திற்கு அருகிலுள்ள இத்தடுப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்ததாக Refugee Action Coalition தெரிவித்துள்ளது. நேற்றிரவு குறித்த தடுப்புமுகாமிலிருந்த மற்றொரு நபருடன் ஏற்பட்ட மோதலின்போதே இவ்விளைஞர் கத்திக்குத்துக்கு இலக்கானதாக குறிப்பிடப்படுகிறது. தடுப்புமுகாமிலுள்ள பெரும்பாலானவர்களின் விசாக்கள் குடிவரவுச்சட்டம் பிரிவு 501-இன் கீழ் நடத்தை(Character) அடிப்படையில் ரத்துசெய்யப்பட்டு நாடுகடத்தப்படும் நோக்கில் அவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலிய நீதி அமைப்பின் கீழ், குற்றம் இழைத்தவர்கள் அதற்கான தண்டனையை அனுபவித்த பின் விடுவிக்கப்படுவதாகவும், ஆனால் குடிவ