முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

c 607 41 மாதங்களாக அதிகரிப்பு!

ஆஸ்திரேலியாவிற்கான Skilled recognised graduate visa (subclass 476) விசாவிற்கு விண்ணப்பிக்கும் ஒருவர், அதற்காக காத்திருக்க வேண்டிய காலப்பகுதி 41 மாதங்கள் ஆகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. r Subclass 476 விசா என்பது, வெளிநாடுகளிலுள்ள பொறியியல்துறை பட்டதாரிகள், ஆஸ்திரேலியாவில் சுமார் ஒன்றரை ஆண்டுகள்வரை தங்கியிருந்து கல்விகற்க அல்லது பணிபுரிய அனுமதிக்கும் விசாவாகும். இவ்வாறு ஆஸ்திரேலியா வருவதற்கு விண்ணப்பித்துவிட்டு கிட்டத்தட்ட 4 ஆண்டுகள்வரை காத்திருக்க நேரிடுவதால், வெளிநாட்டு பொறியியல்துறை பட்டதாரிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகும் அதேநேரம் அவர்களது காலமும் விரயமாவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த 12 மாதங்களில் பொறியியல்துறை சார்ந்த வேலை வெற்றிடங்களில் சுமார் 97 வீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக Engineers Australia அமைப்பு தெரிவித்துள்ளதுடன் பொறியிலாளர்களுக்கான பற்றாக்குறையும் நிலவுவதாக குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு வெளிநாடுகளிலிருந்து வருவதற்குத் தயாராகவுள்ள பொறியியலாளர்களும் அதற்குரிய விசாவைப் பெறுவதற்கு நீண்டகாலம் காத்திருக்க வேண்டியுள்ளதால், நாட்டில் மேற்கொள்ளப்படவே

c 606 ஒரு இனத்திற்கு செய்த கொடுமை அந்தே நாட்டையே மனநோய்யாழிகளாகமாற்றியது.

களனி ஆற்றில் 5 வயது குழந்தையை வீசிய தாய்! மகன் வழங்கியுள்ள வாக்குமூலம் வத்தளை கதிரான பாலத்திற்கு அருகில் தாயொருவரால் களனி ஆற்றில் வீசப்பட்ட ஐந்து வயது குழந்தையை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர். பொலிஸார், கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இந்நிலையில், தனது ஐந்து வயது மகனைத் தள்ளிவிட்டு, ஆற்றில் குதித்து உயிரைத் துறக்க முயன்ற தாய் தொடர்பில் அவரது மூத்த மகன் வாக்குமூலம் வழங்கியுள்ளார். மகன் மேலும் தெரிவித்துள்ளதாவது, களனி ஆற்றில் 5 வயது குழந்தையை வீசிய தாய்! மகன் வழங்கியுள்ள வாக்குமூலம் மூத்த மகன் வழங்கிய வாக்குமூலம் மாற்றுத்திறனாளியான எனது அம்மா ஊன்றுகோல் உதவியுடன்,வெள்ளை நிற துணியுடன் தம்பியை அழைத்துக்கொண்டு நேற்று மாலை சென்றார். நான் எங்கே செல்கின்றீர்கள் என வினவியபோது என்னை முறைத்துவிட்டு தம்பியுடன் சென்றுவிட்டார். அம்மாவுக்கு வலிப்பு நோய் உள்ளது. என்னையும் அழைத்தார். நான் தயாராகி வந்து நானும் வருகிறேன் என கூறினேன். பி

c 605 விபத்த்தில் தமிழர் உயிரப்பு

கனடாவில் சோகத்தை ஏற்படுத்திய இலங்கைத் தமிழரின் மறைவு - அரைக்கம்பத்தில் பறக்கின்றன கொடிகள்..!! சோகத்தை ஏற்படுத்திய இலங்கைத் தமிழரின் மறைவு கனடாவில் இலங்கைத் தமிழரான காவல்துறை அதிகாரி விபத்தில் உயிரிழந்துள்ள நிலையில், ஒட்டாவா காவல்நிலையத்தில் அரைக்கம்பத்தில் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. மோட்டார் சைக்களில் விபத்தில் காவல்துறை அதிகாரியாக கடமையாற்றிய இலங்கைத் தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஒட்டாவா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விஜயாலயன் மதியழகன் கனடாவில் சோகத்தை ஏற்படுத்திய இலங்கைத் தமிழரின் மறைவு - அரைக்கம்பத்தில் பறக்கின்றன கொடிகள்..!! இலங்கையில் பிறந்து ஒட்டாவாவில் வளர்ந்த, 28 வயதான விஜயாலயன் மதியழகன் என்பவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். இவர் கனேடிய இராணுவத்தில் பல வருடங்கள் பணியாற்றிய நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் காவல்துறை சேவையில் இணைந்துகொண்டுள்ளார். விபத்தில் சிக்கி பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக காவல்து

c 604 அமெரிக்கா சொன்னால் பொய் சீனா சொன்னால் உன்மையா?

ஏலியனை தொடர்பு கொண்டோம்: ஒப்புக் கொண்ட சீன அரசு: ஆனால் உடனே ஆவணங்களை அழித்து விட்டது ! சீனாவின் அதிகார பூர்வ தகவல் தொடர்பு அமைச்சு, தாம் வேற்றுக் கிரக வாசிகளோடு தொடர்பு கொண்டுள்ளதாக உத்தியோக பூர்வமாக நேற்றைய தினம்(15) அறிவித்தது. ஆனால் சிறிது நேரத்தில் அந்த ஆவணங்கள் அனைத்தையும் அது அழித்து விட்டது. அத்தோடு அந்த செய்தியையும் சீன அரசு உடனடியாக அழித்து , இருட்டடிப்புச் செய்து விட்டது. சீனாவில் இருக்கும் மிகவும் சக்திவாய்ந்த ராடர் உள்வாங்கிகள், ஏதோ அலைக் கீற்றை கண்டு பிடித்துள்ளார்கள். அது வேற்றுக் கிரக மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒன்று. அதனை சில இளம் விஞ்ஞானிகள் எதேட்சையாக வெளியிட்டு விட்டார்கள். ஆனால் உடனே சீன அரசு தலையிட்டு அந்த செய்தியை உடனே அழித்து இருட்டடிப்பு செய்துள்ளது. இருப்பினும் சீனா தொடர்ந்தும் அந்த அலைக் கற்றையை அவதானித்து, அதனூடாக வேற்றுக் கிரக மனிதர்களோடு முதன் முதலாக தொடர்பை ஏற்படுத்தக் கூடும் என்று எதிர்வு கூறப்படுகிறது.

c 603 சுவிஸ் வாழ் இந்துக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

சுவிஸ் வாழ் இந்துக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு! கிடைத்தது முக்கிய அனுமதி சுவிட்சர்லாந்தில் நீண்ட நாட்களாக எமது சமுதாயத்தில் சிவபதமடைந்தவர்களுக்கு , அவர்களுடைய அஸ்தியை ஆற்றில் அல்லது ஓர் நீர் நிலையில் இடுவதற்கு பல சிரமங்கள் இருந்து வந்த நிலையில் தற்போது அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் கடந்து மூன்று வருடங்களாக Lausanne Municipalité இனால் , இது சம்பந்தமான பல commissions களில் கலந்து சைவ மக்களின் முக்கிய கடமைகளில் ஒன்றான அஸ்தி கரைத்தல் சடங்கு முறைகளை விளக்கப்படுத்தி, இன்று அது செயல் வடிவம் பெற்று அனுமதியும் கிடைத்துள்ளது. சுவிஸ் வாழ் இந்துக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு! கிடைத்தது முக்கிய அனுமதி அதன்படி வரும் 25/6/2022 அன்று சனிக்கிழமை காலை பத்து மணிக்கு சம்பிரதாயபூர்வமான முறையில் Le conseiller municipal Monsieur Pierre -Antoine Hildbrand தலைமையில் இந்த இடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. சுவிஸ் வாழ் இந்துக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு! கிடைத்தது முக்கிய அனுமதி இந்நிலையில் இந்த தகவல் சுவிஸ் வாழ் இந்து மக்களொஇடையே பரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள

c 602 உன்மையைக்கண்டுபிடித்த இரட்டை முகவர் .

குருந்தூர் மலை விவகாரம் காலிமுகத்திடலில் எதிரொலிக்காதது ஏனோ...! சுரேந்திரன் கேள்வி காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்படுகின்ற போராட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. அவர்களுடைய நியாயப் பாட்டினை நாங்கள் நன்றாக புரிந்து கொள்ளுகிறோம். ஆனால் தமிழர் பிரச்சினையை பெரும்பான்மை இனத்தினருக்கு தெளிவுபடுத்துகிறோம், விளக்குகிறோம், அவர்களோடு கலந்துரையாடுகிறோம் என்றெல்லாம் கூறியவர்கள் குருந்தூர் மலை விவகாரத்தில் எங்கு சென்றார்கள் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், "குருந்தூர் மலை விவகாரம் மதப் பிரச்சினைக்கு அப்பாற்பட்டது. பௌத்த மதத்தின் பெயரால் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை அபகரித்து, அங்கு சிங்கள குடியேற்றங்களை நிறுவுவதும் அதனூடாக எங்கள் குடிப்பரம்பலை சிதைப்பதற்கும் முயல்வது இனவழிப்பு நடவடிக்கையாகவே கருதப்பட வேண்டும். இந்த நடவடிக்கைக்கு எதிராக காலிமுகத்திடலில் இருக்கும் போராளிகள் ஏன் குரல் கொடுக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது. அதையும் தாண்டி தமிழர் பிரச்சினையை பெரும்பான்மை இனத்தினருக்கு தெளிவுபடுத்த

c 601 35 லக்ஸ்சம் தமிழரை கண்காணிக்க ஐந்து லக்ஸ்சம் படைள்ளது.

படைக்கு சம்பளம்கொடுக்கவும் மேலதிகப் பணம் தேவையாம். அமெரிக்காவில் இருந்து வருகிறது டொலர்கள்!! வெளியான உத்தியோகபூர்வ அறிவிப்பு அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிதி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர்கள் சபை இலங்கைக்கு புதிதாக 120 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு அனுமதிவழங்கியுள்ளது. இலங்கையின் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்காகவும் ஆதரவாகவும் 120 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிதி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர்கள் சபை அனுமதி வழங்கியுள்ளது. அமெரிக்க தூதுவரின் அறிவிப்பு அமெரிக்காவில் இருந்து வருகிறது டொலர்கள்!! வெளியான உத்தியோகபூர்வ அறிவிப்பு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இதனை இன்று அறிவித்துள்ளார். 70 ஆண்டுகளாக, இலங்கையின் பொருளாதாரத்தை வளர்ப்பதற்கும் இலங்கை மக்களுக்கு ஆதரவளிப்பதற்கும் அமெரிக்கா வெளிநாட்டு உதவிகள், கடன்கள் மற்றும் வர்த்தக வாய்ப்புகளை வழங்கியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.