முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

318 இலங்கை தமிழர்கள் மகிழ்ச்சியில்

பிரான்ஸ் அரச தலைவர் தேர்தலில் மக்ரனுக்கு வெற்றி - வாக்களிப்புக்கு பின்னரான கருத்துக்கணிப்பில் முடிவு பிரான்சில் இன்று இடம்பெற்ற அரச தலைவர் தேர்தலின் இரண்டாம் சுற்று வாக்களிப்பில் தற்போதைய அரச தலைவரான இமானுவேல் மக்ரன் மீண்டும் இரண்டாம் தடவை ஆட்சித்தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று ஒப்பீட்டு ரீதியில் வாக்களிப்பு வீழ்ச்சியுடன் இடம்பெற்ற இரண்டாம் சுற்று வாக்களிப்பு உள்ளுர் நேரப்படி இரவு 8 மணிக்கு முடிவடைந்து வாக்குச்சாவடிகள் மூடப்பட்டிருந்தன. இதன் பின்னர் உடனடியாகவே வெளியான கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில் மக்ரன் மீண்டும் 5 வருடங்களுக்குரிய அரச தலைவராக தெரிவு செய்யப்படும் வகையில் 58 சத வீத வாக்குகளை பெற்றுள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளிப்பட்டுள்ளன. இதனையடுத்து மக்ரனின் ஆதரவாளர்கள் பரிஸ் நகரின் ஈபில் கோபுரத்துக்கு அருகில் உள்ள சாம்ஸ் து மார்ஸ் பகுதியில் வெற்றிக் கொண்டாட்டங்களுக்காக திரண்டுள்ளனர்.

c 317 யுவதி சுட்டுக்கொலை!!

மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் யுவதி சுட்டுக்கொலை!! பெலியத்த, தாரபெரிய, நிஹிலுவ பிரதேசத்தில் யுவதி ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் நிஹிலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இதேவேளை, குறித்த நபரின் வீட்டில் அருகேயே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத ஒருவரால் குறித்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

c 316 கத்தியோடு நடிகைகள் ஆண்கள் பாதுகாப்பாகயிருங்கள்?

என்ன கன்றாவி இது.. ? – ஆணுறுப்பு கேக்.. காதலனுடன் ஸ்ருதிஹாசன் அழிச்சாட்டியம். .! – நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ் சினிமாவில் கமல்ஹாசனின் மகள் என்ற பெருமையோடு உள்ளே வந்தார். 7ம் அறிவு படமே அவருக்கு மக்களிடம் பெரிய ரீச் கொடுத்தது.நடிப்பதை தாண்டி இசையில் தான் ஸ்ருதிஹாசனுக்கு கவனம் அதிகம். எ னவே கமல்ஹாசனின் உன்னைப் போல் ஒருவன் படத்தில் சூப்பராக பாடல் பாடியிருப்பார், நல்ல ஹிட்டடித்தது.அதன்பிறகு இசையில் கவனம் செலுத்துவார் என்று பார்த்தால் தமிழை தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி என நடித்து வந்தார். இடையில வெளிநாட்டில் தனது குழுவுடன் இசைக் கச்சேரி எல்லாம் செய்தார்.நடிகை சஸ்ருதிஹாசன் பல வருடங்களாக சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார். இருவரும் விரைவில் திருமணம் செய்யப் போகிறார்கள் என்ற தகவல் கொஞ்ச நாட்களாகவே உலவிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் திருமணம் குறித்த கேள்விக்கு சாந்தனு சுவாரசியமான பதிலை அளித்திருக்கிறார்.தனது வாழ்க்கையை திறந்த புத்தகமாக வைத்திருப்பவர் ஸ்ருதிஹாசன். மதுவுக்கு அடிமையாக இருந்ததையும் வெளிப்படையாக அவர் கூறியிருக்கிறார். தற்போது அதிலிருந்து மீண்டு மீண்டும் படங்களில்

c 315 சில வங்கிகள் வீழ்ச்சியடைந்து மூடப்படதா?

இலங்கையில் சில வங்கிகள் வீழ்ச்சியடைந்து மூடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது ! நாட்டில் சில வங்கிகள் வீழ்ச்சியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். எந்த வங்கிகள் என்று அவர் பெயர் குறிப்பிடவில்லை. இருப்பினும் சில வங்கிகள் என்ற சொற் பதத்தை பாவித்துள்ளார். நாட்டின் நடுத்தர வர்க்கத்தினரும் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வங்கியாளர்களின் விசேட மாநாடு நேற்று (22) மாலை கொழும்பில் இடம்பெற்றது. இதன் போது சில வங்கிகள், தாம் அடைந்துள்ள பின்னடைவு தொடர்பாக, சில விபரங்களை வெளியிட்டுள்ளது. இதனை ஆதாரமாக வைத்தே… ரணில் இந்தக் எச்சரிக்கையை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்திருந்தார்.

c 314 உணவுத் தட்டுப்பாடு ஏற்படக் கூடும் -

எதிர்வரும் காலங்களில் கடுமையான உணவுத் தட்டுப்பாடு ஏற்படக் கூடும் - ரணில் எச்சரிக்கை இலங்கையில் எதிர்வரும் காலங்களில் கடுமையான உணவுத் தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். எரிபொருளுக்காக வழங்கப்பட்ட இந்தியக் கடன் வசதி மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான ஒரு பில்லியன் டொலர் கடன் திட்டம் முதல் வாரத்தில் முடிவடைவதால் அடுத்த மாதம் இலங்கை பாரிய பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற தனியார் வங்கியாளர்கள் குழுவுடனான கலந்துரையாடலின் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், இலங்கையில் எதிர்வரும் காலங்களில் கடுமையான உணவுத் தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என அவர் தெரிவித்தார். அரசாங்கம் உடனடியாக பதவி விலகுமாறு கோரி இளைஞர்கள் உட்பட பொதுமக்கள் வீதியில் இறங்கிய போதிலும் நாடாளுமன்றம் உரிய தீர்வை வழங்கத் தவறியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். மக்கள் கோரும் புரட்சிகரமான மாற்றத்திற்கு செவிசாய்க்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார

c 313 மஹிந்த வெளியிட்ட அறிவிப்பு

போலியான தகவல்கள் பரப்பப்படுகின்றன; மஹிந்த வெளியிட்ட அறிவிப்பு தான் சுகவீனமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சமூக வலைத்தளங்களில் பொய்யான பிரசாரங்கள் உலாவருவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ர் தெரிவித்துள்ளார். அத்துடன் தான் வழமை போன்றே நலத்துடன் காணப்படுவதாகவும் கௌரவ பிரதமர் மஹிந்த தெரிவித்தார். அதோடு நோயாளியை பார்ப்பதற்கேனும் தான் இத்தினங்களில் வைத்தியசாலைக்கு செல்லவில்லை எனத் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தான் உடற்பயிற்சியில் ஈடுபட்டு சிறந்த ஆரோக்கியத்துடன் காணப்படுவதாகவும் குறிப்பிட்டார். அதேவேளை பிரதமர் நோய்வாய்ப்பட்ட நிலையில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது

c 312 புடினுக்கு அனுப்பியுள்ள செய்தி

அடங்க மறுக்கும் உக்ரைன் படைகள் - புடினுக்கு அனுப்பியுள்ள செய்தி ரஷ்யாவின் பொய்யான பரப்புரைகளுக்கு பதிலடி கொடுப்போம் என உக்ரைன் படைகள் பகிரங்க சவால் விடுத்துள்ளனர். உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோல் ரஷ்ய துருப்புகளின் பிடியில் சிக்கியுள்ளதாகவும், அசோவ்ஸ்டல் இரும்பு தொழிற்சாலையில் மாத்திரம் நூற்றுக்கணக்கான உக்ரைனிய வீரர்களும், அப்பாவி பொதுமக்களும் பதுங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவல் தகவல் உறுதிசெய்யப்பட்ட நிலையில், அங்கு அதிரடித் தாக்குதல்கள் எதுவும் நடத்த வேண்டாம் என விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளதாகவும், உக்ரைனிய படைகளுக்கு சரணடைய வாய்ப்பு அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் உக்ரைனிய வீரர்கள் விளாடிமிர் புடினின் கோரிக்கையை ஏற்க மறுத்துள்ள நிலையில், காணொளி ஒன்றின் ஊடாக பகிரங்க சவால் விடுத்துள்ளனர். மரியுபோல் நகரில் நாங்கள் எஞ்சியிருக்கும் வரையில், மரியுபோல் நகரம் கண்டிப்பாக உக்ரைன் வசமே இருக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.