முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

c 994 திலீபனின் நினைவு ஊர்தியை மறித்து படையினர் அடாவடி - நினைவேந்தல் பயணத்துக்...

திலீபனின் நினைவு ஊர்தியை மறித்து படையினர் அடாவடி - நினைவேந்தல் பயணத்துக்கு அச்சுறுத்தல் வாகன ஊர்திப் பவனி தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நாட்களை நினைவு கூர்ந்து நகர்ந்து வரும் வாகன ஊர்திப் பவனிக்கு சிறிலங்கா இராணுவத்தினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஊர்திப் பவனியில் கலந்துகொண்டவர்கள் இராணுவத்தினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், குறித்த வாகனத்தை சோதனையிடுவதற்கும் முயற்சிக்கப்பட்டுள்ளது. திலீபனின் நினைவேந்தல் நாட்களை நினைவு கூர்ந்து நகர்ந்து வரும் வாகன ஊர்திப் பவனி இன்று மன்னாரை சென்றடைந்தது.

c 953 ஐ.நாவிலிருந்து அவசர செய்தி!! ஒரு குடும்பத்தின் வாக்குமூலம்!!கண்திறக்குமா...

ஐ.நாவிலிருந்து அவசர செய்தி!! ஒரு குடும்பத்தின் வாக்குமூலம்!!கண்திறக்குமா சர்வதேசம் - (காணொலி) 1995 ஆம் ஆண்டு யாழ்ப்பாண இடப் பெயர்வினை பார்த்து கண்கலங்கிய மகன் தமிழருக்கு என ஒரு விடிவு வேண்டும் என தனது பல்கலைக்கழக அனுமதியையும் உதறி தள்ளிவிட்டு போராட்டத்தில் இணைந்தார். இறுதி யுத்தம் முடிந்து ஓமந்தை ஊடாக வரும்போது அவரது பெயரை சொல்லி விசாரணைக்கு அழைத்து சென்றவர்தான் இன்றுவரை எங்கு என்று தெரியாமல் தேடுகின்றோம் என கூறுகிறார் தாயார். அவர் தொடர்பாக தாயார் தெரிவிக்கும் விடயங்கள் காணொலி வடிவில்

c 992 பிரபாகரனே எம்தலைவன் தமிழீழமே எம்தேசம் எனும் உரத்த கோஷத்துடன்.

இவர்களின் உணர்வை பார்க்கும் போது என்னொரு முறை தான் செத்தாவது இவர்களின் கனவை நனவாக்க வேண்டும் என்று தான் நினைப்பதாக தமிழீழத்தில் வாழும் 99 வயது சேது என்பவர் குறிப்பிட்டுள்ளார்.

:c991 கடைசி ஆசையாக கிட்டு அண்ணாவை பார்க்க விரும்பிய திலீபன் அண்ணா!!

திலீபன் அண்ணாவின் இறுதிநாள்! :கடைசி ஆசையாக கிட்டு அண்ணாவை பார்க்க விரும்பிய திலீபன் அண்ணா!! திலீபனின் சொந்தப் பெயர் பார்த்திபன். திலீபன் பிறந்து பத்தாவது மாதத்திலேயே தாயார் இறந்துவிட்டார். தந்தையார் இராசையா ஒரு ஆசிரியர். யாழ்ப்பாணம் ஊரெழுதான் சொந்த ஊர். உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாசாலை, உரும்பிராய் சந்திரோதய வித்தியாசாலை, யாழ் இந்துக்கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவன். யாழ் வைத்திய பீட மாணவனாக கல்வி கற்கும் வாய்ப்பை உதறிவிட்டு, 1983ல் புலிகள் அமைப்பில் சேர்ந்து கொண்டார். திலீபனின் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பமாகி ஐந்து நாட்கள் சென்ற நிலையில் பத்திரிகை ஒன்று பின்வருமாறு தெரிவித்தது. “திலீபனின் உடல் நிலை மோசமடைந்து வருகின்றது. அவர் கடைசியாக சிறுநீர் கழித்து 48 மணித்தியாலங்களுக்கு மேலாகி விட்டது. இதே நிலையில் மேலும் இரண்டு நாட்களுக்கு தொடர்ச்சியாக சிறுநீர் கழிக்காவிட்டால், அவரது சிறுநீரகம் பாதிக்கப்பட்டு அதிர்ச்சி ஏற்படும்” ஐந்தாம் நாளன்று இந்தியப்படையின் யாழ் கோட்டை இராணுவ முகாம் பொறுப்பாளர் பரார் திலீபனைப் பார்ப்பதற்காக வந்தார். அவரைக் கண்டதும் குழுமியிருந்த மக்கள் மத்தியில் சலசல

c 990 இந்து ஆலயம் மீது தாக்குதல் - 46 பேர் வரையில் கைது

பிரித்தானியாவில் இந்து ஆலயம் மீது தாக்குதல் - 46 பேர் வரையில் கைது பிரித்தானியாவின் லீசெஸ்டர்ஷையர் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் வெடித்துள்ள நிலையில் அந்த பகுதியில் உள்ள இந்து ஆலயம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த காணொளியும் சமூக ஊடகஙகளில் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் இடம்பெற்ற ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை வெற்றிகொண்டது. இதனை தொடர்ந்து குறித்த பகுதியில் ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது. பிரித்தானியாவில் இந்து ஆலயம் மீது தாக்குதல் - 46 பேர் வரையில் கைது | Leicester Violence Hindu Temple Vandalised இந்திய தூதரகம் கண்டனம் இந்த சம்பவத்தின் ஒரு பகுதியாக இந்து ஆலயம் மீது தாக்குதல் நடதப்பட்டுள்ளது. இந்துக் கோவில் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு லண்டன் நகரில் உள்ள இந்திய தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனிடையே, இந்த வன்முறை சம்பவம் தொடர்பில் இதுவரையில் 46 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் ஒருவருக்கு 10 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் புதுப்ப

c 989 அபகரிக்கப்படும் தமிழர் பிரதேசங்கள்

அடாத்தாக கட்டி முடிக்கப்படும் விகாரை! தமிழர் காணிகள் அபகரிப்பு - வெடிக்கப்போகும் தொடர் போராட்டம் குருந்தூர் மலையில் கட்டி முடிக்கப்படும் விகாரை முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர்களின் பூர்வீக இடமாகிய தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதிசிவன் அய்யனார் ஆலயம் இருந்த வளாகத்தில் அத்துமீறி அமைக்கப்பட்ட விகாரையினுடைய கட்டுமானப் பணிகள் தொடர்பில் முல்லைதீவு நீதிமன்ற தடை உத்தரவுகளை மீறி விகாரை அமைப்பு பணிகள் நிறைவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதனை விட விடுமுறை தினத்தில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளால் மக்களின் காணிகளுக்குள் எல்லைக் கற்கள் இடப்பட்டு மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு குருந்தூர் மலையில் தொடர்ச்சியாக தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது. மக்களுடைய மத உரிமை, நில உரிமை பறிக்கப்பட்டிருக்கின்ற இந்த நிலைமையில் இவற்றிற்கு எதிராக தொடர்போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு குறித்த பகுதியினுடைய பொது அமைப்புகள் தீர்மானித்துள்ளன. தொடர் போராட்டத்திற்கு அழைப்பு அதற்கமைய இன்று முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய குறித்த கிராமத்தின் பொது அமைப்புகளின் பிரதிநிதி

c 988 ஐ.நாவில் ஒலிக்கும் ஒரு தாயின் அழுகுரல்!

ஐ.நாவில் ஒலிக்கும் ஒரு தாயின் அழுகுரல்!! அம்பலமான உண்மை! ஐ.நாவில் சிக்கிய ஸ்ரீலங்கா!! சரணடைந்தார் கணவர் நானும் எனது கணவரும் இரண்டரை வயது மகனும் வன்னி இறுதி யுத்ததத்தின்போது 17.05.2009 அன்று வட்டுவாகல் ஊடாக ஓமந்தைக்கு வந்து கொண்டிருந்தவேளை எனது கணவர் சரணடைந்தார். இதன்போது எனக்கு வயிற்றில் காயம் ஏற்பட்டிருந்தது.வட்டுவாகல் வருதற்கு ஒரு மணிநேரம் முன்புதான் நான் காயமடைந்தேன். இதன்போது வயிற்றில் செல்லுடன் தான் நான் வந்தேன். சுமார் 15 ஆயிரம் பேர் படையினரிடம் சரணடைவு இதன்போது எனது கணவரைப்போல சுமார் 15 ஆயிரம் பேர் படையினரிடம் சரணடைந்திருந்தனர். இவ்வாறு அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்தார். அவர் தற்போது ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமை அமர்வில் பங்கேற்பதற்காக வருகை தந்தவேளை ஐ.பி.சி தமிழுக்கு அளித்த பிரத்தியேக நேர்காணலில் தெரிவித்த விடயங்களை காணொலியில் காண்க