முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

c 674 திருமணத்துக்கு சீதனமாக கேட்பது என்ன

இலங்கையில் திருமணத்துக்கு சீதனமாக கேட்பது என்ன தெரியுமா? நாட்டில் அவல நிலை இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான எரிபொருள் நெருக்கடியை அடுத்து, சைக்கிளுக்கான மவுசு அதிகரித்துள்ளது. நாட்டில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 210 ரூபாயாக காணப்பட்டது. தற்போது சுமார் 450 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது. இலங்கையில் திருமணத்துக்கு சீதனமாக கேட்பது என்ன தெரியுமா? நாட்டில் அவல நிலை | Sri Lanka Fuel Crisis Marriage Seethanam Cycle இதில் குறிப்பாக தற்போது உள்ள எரிபொருள் நெருக்கடியை பயன்படுத்தி, கறுப்புச் சந்தையில் யாழ்ப்பாணத்தை பொறுத்த வரையில் ஒரு லீற்றர் பெற்றோல் 3 ஆயிரம் ரூபா முதல் விற்பனை செய்யப்படுகிறது. அதிலும் நாள் கணக்கில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தங்கியிருந்தால் கூட எரிபொருள் கிடைக்காத நிலை காணப்படுகிறது. நாளாந்த உழைப்பையும் விட்டு விட்டு எரிபொருளுக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையில் திருமணத்துக்கு சீதனமாக கேட்பது என்ன தெரியுமா? நாட்டில் அவல நிலை | இதில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நடைபெறும் கைகலப்புக்கு பஞ்சமே இல்லை. இந்த நில

c 673 முஸ்லிம் பெண்களின் முகம் மறைக்கும் ஆடைக்கு தடை

முஸ்லிம் பெண்களின் முகம் மறைக்கும் ஆடைக்கு தடை ; நாட்டிலுள்ள பிரச்சினை போதவில்லையாம் பிரச்சினையை உருவாக்க தயாராகும் ஞானசார-! இலங்கையில் தன்பாலின உறவு கொள்வதற்கு அனுமதி வழங்குதல், யுத்த குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்தல், மத மாற்றத்தை தடை செய்தல் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை, ”ஒரே நாடு – ஒரே சட்டம்” ஜனாதிபதி செயலணி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளது. கொழும்பு – கோட்டை பகுதியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதியிடம் நேற்று (29) முற்பகல் ஜனாதிபதி செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரரினால் இந்த அறிக்கை கையளிக்கப்பட்டது. இலங்கையில் ”ஒரே நாடு – ஒரே சட்டம்” என்ற கருத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில், பல்வேறு தரப்பினரின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பெற்று, இலங்கைக்கு தனித்துவமான கருத்தியல் கட்டமைப்பொன்றை உருவாக்குவது தொடர்பிலான ஆலோசனைகளை வழங்குவதற்கு ஜனாதிபதியினால், 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26 மற்றும் 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆகிய தேதிகளில் அதிவிசேட வர்த்தமானி ஊடாக இந்த செயலணி ஸ்தாபிக்கப்பட்டது. இந்த அறிக்கை

c 672 நாங்கள் மிகவும் ஆபத்தான உலகில் வாழ்கிறோம்

நாங்கள் மிகவும் ஆபத்தான உலகில் வாழ்கிறோம் - ரஷ்யா குறித்து பிரித்தானிய பிரதமர் எச்சரிக்கை 2030 ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5% ஐ பிரித்தானிய அரசாங்கம் பாதுகாப்பிற்காக செலவிடும் என்று அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார். மாட்ரிட்டில் நேட்டோ மாநாட்டில் பேசிய பிரதமர், "எதிர்கால போர் காற்று போன்ற முக்கிய திறன்களில் நீண்டகாலத்திற்கு முதலீடு செய்ய வேண்டும் எனவும், மிகவும் ஆபத்தான மற்றும் அதிக போட்டி நிறைந்த உலகத்திற்கு மாற்றியமைக்க வேண்டும்" என்றும் கூறினார். இந்த முடிவுகளின் அடிப்படையில் நாங்கள் மேற்கொள்ளும் முதலீடுகளின் தர்க்கரீதியான முடிவு என்னவென்றால், தசாப்தத்தின் இறுதிக்குள் பாதுகாப்புக்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 வீதத்தை ஒதுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சுதந்திரத்திற்கான விலை எப்போதும் செலுத்தத் தகுந்தது என்று பிரதமர் மேலும் கூறினார். "உக்ரைனில் சரியான முடிவைப் பெறாவிட்டால், முன்னாள் சோவியத் யூனியனின் பிற பகுதிகளுக்கு எதிராக ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட முடியும். நாங்கள் மிகவும் ஆபத்தான உலகில் வாழ்கிறோம் - ரஷ்யா

c 671 தமிழர் பகுதியில் தொடரும் ஆட்கடத்தல்

யாழில் மற்றுமொரு பதின்மவயது சிறுமி மாயம்; தவிப்பில் பெற்றோர்! யாழ்ப்பாணத்தை சேர்ந்த முஸ்லிம் சிறுமி ஒருவர் காணாமல்போயுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 28ஆம் திகதி கடை ஒன்றில் நின்ற சமயம் சிறுமி காணாமல்போனதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் இதுவரை சிறுமி பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை வெளியகாத நிலையில் பெற்றோர் பொலிஸி முறைப்பாடளித்துள்ளனர். யாழில் மற்றுமொரு பதின்மவயது சிறுமி மாயம்; தவிப்பில் பெற்றோர்! | Another Teenage Girl Mayam In Jaffna காணாமல்போன சிறுமி யாழ்.கதீஜா பாடசாலையில் தரம் 8ல் கல்வி கற்கற்று வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

c 670 புத்திசாலிகள் என்று தங்களைக் காட்டிக்கொள்ளும் இருவர் உள்ளனர். ?

எந்த ஒரு ஐக்கிய நாடுகள் சபையிலும் கலங்ககையில் இனப்பிரச்சனை நடந்தது தமிழர்களை பாது காற்க வெளிநாட்டுப் பொறிமுறை ஒன்று தேவை என்று கேட்க விரும்பாதே பச்சோன்றிகள். இவர்கள் யார் என்பதை தமிழர்கள் இனம் கண்டு வைத்துயிருக்க வேண்டும். புலம்பெயர் தமிழர்களாலேயே இலங்கைக்கு விடிவு

c669 வாதாடிய சிங்களவர்களிற்கு செருப்படி கொடுத்த கனடா

தமிழ் ‘இனப்படுகொலை’ தொடர்பான சிங்களவர்களின் விண்ணப்பத்தை நிராகரித்தது கனேடிய நீதிமன்று கனடாவில் சிங்களவர்களின் விண்ணப்பம் கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் தமிழ் இனப்படுகொலைக் கல்வி வார அறிவிப்பை 'கல்வி' நோக்கத்திற்காகச் செய்ததாகக் கூறி தடை கோரிய கனடாவில் வசிக்கும் சிங்களவரின் மனுவை கனேடிய நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது. தமிழர்கள் குறிப்பிடுவது சட்டவிரோதமானது உலக வரலாற்றில் தமிழ் இனப்படுகொலையும் ஏனைய இனப்படுகொலைகளும் இடம்பெற்ற காலப்பகுதியாக ஒவ்வொரு வருடமும் மே 18ஆம் திகதியுடன் முடிவடையும் ஏழுநாட்களை புலம்பெயர்ந்த கனேடிய தமிழர்கள் குறிப்பிடுவது சட்டவிரோதமானது என தெரிவித்தும் சர்வதேச சட்டத்தின் கீழ் எந்தவொரு தமிழ் இனப்படுகொலையும் அங்கீகரிக்கப்படவில்லை எனவும், 'இனப்படுகொலை' என்ற வார்த்தையை பயன்படுத்த கனேடிய மாகாண அரசாங்கத்திற்கு அதிகாரம் இல்லை எனவும் சிங்கள விண்ணப்பதாரர்கள் தமது மனுவில் தெரிவித்துள்ளனர். நிராகரித்தது நீதிமன்று இது ஒரு பிரிவினருக்கு எதிராக மற்றொரு பிரிவினர் மீதான வெறுப்பை வளர்க்கிறது என்றும் இந்த வழக்கில் வாதிடப்பட்டது. எனினு

c 668 போராளியின்குருதிச் சுவடு

கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன் வீட்டிற்குமுன் வாகனம் வந்து நின்ற போது செங்கதிர்வாணன் தான் வருகிறான் என்று நினைத்துக் கொண்டாள் தண்ணீருற்று அம்மா. அவனின் அம்மா திருமலையில் என்பதால் இப்போது உறவுகள் எல்லாம் அந்த வீடுதான். அம்மா தலையை இழுத்து முடித்தபடி விளக்கையும் எடுத்துக்கொண்டு வாசலுக்கு ஓடிவந்தாள். அக்கம் பக்கத்து வீட்டுச்சிறுமிகள் எல்லாம் “குட்டான் மாமா வந்திட்டார்” என்ற மகிழ்ச்சியுடன் பாடப்புத்தகங்களை மூடிவிட்டு ஆரவாரித்து நின்றனர். அவர்களுக்கு ஒருபுறம் அச்சமும் இருந்தது. பாடப்புத்தகத்தில் கேள்வி கேட்பார். தேர்வு அறிக்கை பார்ப்பார். என்றாலும் , குட்டான்மாமா எவ்வளவு நல்லவர். சிறுமிகளும் வாசலுக்கு வந்தனர். அந்த வயது முதிர்ந்த அம்மா விளக்கை உயர்த்தி எல்லோர் முகங்களையும் பார்த்தாள். இல்லை…. அவள் தேடி வந்த செங்கதிர்வாணன் இல்லை. வந்தவர்களின் முகத்தில் எழுதாத கவிதையொன்று எதையோ உணர்த்தியது. அம்மாவால் முகங்களைப் பார்க்க முடிந்தது. படிக்க முடியவில்லை. “இவ்வளவு நாட்களுக்கு ஏன் மோனை வரேல்லை” அம்மாவிற்கு அவன் வந்திருப்பான் என்பதில் அவ்வளவு நம்பிக்கையிருந்தது. அவனை எதிர்பார்த்து எத்தனை வாசல்கள்.