முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

c 474 விடுதலை தொடர்பாக இந்தியாவில் என் கதைக்கிறார்கள்?

பேரறிவாளனின் விடுதலை தொடரவாக வேறு இனத்தவர்களும் மாற்றுக் கருத்துடையவர்களும் என்ன நினைக்கின்றார்கள் என்ன கதைக்கின்றார்கள் என்பதை ஈழத் தமிழர்கள் கண்டிப்பாக அறிந்துயிருக்க வேண்டும். ராஜீவ் காந்தியுடன் இறந்தோர் குடும்பத்தினர் குமுறல்: "நாங்கள் தமிழர்கள் இல்லையா?" முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் இருந்து பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுவிட்டார். இந்தத் தீர்ப்பை அரசியல் கட்சிகள் பலவும் வரவேற்றுள்ள சூழலில், '30 ஆண்டுகளாக நாங்கள் அடைந்துவரும் துயரங்களை அரசும் கண்டுகொள்ளவில்லை' என்கின்றனர் குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி மனித வெடிகுண்டு தாக்குதலால், ராஜீவகாந்தி கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில் அவருடன் சேர்த்து 18 பேர் இறந்தனர். இந்த வழக்கில் முருகன் என்கிற ஸ்ரீகரன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். குறிப்பாக, மனித வெடிகுண்டு தாக்குதலுக்குப் பயன்பட்ட 9 வோல்ட் பேட்டரியை பேரறிவாளன்

c 473 சிறப்பாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவுநாள் - பிரிஷ்பன்

சிறப்பாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நினைவுநாள் - பிரிஷ்பன் அவுஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து மாநிலத்தில் வூட்றிட்ஜ் என்ற இடத்தில் சுமார் 75 இற்கும் மேற்பட்ட தமிழீழத்தேசிய உணர்வாளர்கள் கலந்துகொண்டு மிகவும் சிறப்பான முறையில் முள்ளிவாய்க்கால் இனவளிப்பு நினைவேந்தல் நாள் நினைவுகூரப்பட்டது. மாநில காவல் துறையினரின் கண்காணிப்பில் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. முள்ளிவாய்க்கால் இனவழிப்பிற்கு உள்ளான எமது உறவுகளின் மாதிரிப்படம் வைக்கப்பட்டு அவர்களிற்கு மலரஞ்சலி செலுத்பட்டது. இரவு 6.30 மணி தொடக்கம் 9 மணி தொடக்கம் வரை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. முதலாவது பிரதான பொதுச்சுடரை, மூத்த தேசியச் செயற்பாட்டாளர் பேராசிரியர் திரு.செல்வநாதன் அவர்கள் ஏற்றிவைத்தார். அடுத்து அவுஸ்திரேலியா தேசியக்கொடியை திருமதி.செர்னா டாணியல் அவர்கள் ஏற்றி வைத்தார். அடுத்து அவுஸ்திரேலியாவின் பழங்குடிமக்களின் தேசிக்கொடியை திரு.குமார் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடியை குயின்ஸ்லாந்து மாநிலத்தில் ஆரம்பத்தில் இருந்தே தொடர்ச்சியாக தேசியசெயற்பாடுகளை முன்னெடுத்துவந்த மூத்தசெயற்பாட்டாளர் திரு.கோ

c 472 இலங்கை போர் குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் | #brit...

இலங்கை போர் குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்: பிரித்தானிய எதிர்க்கட்சி தலைவர் (Video) இலங்கையின் நடந்த குற்றங்களைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்புமாறு பிரித்தானிய எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் தலைமை வழக்கறிஞருமான கெய்ர் ஸ்டர்மேர் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், இன்று முள்ளிவாய்க்கால் நினைவு நாளில், இலங்கை போரின் இறுதிக்கட்டத்தின் போது கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களை நாம் நினைவுகூருகிறோம். தொழிற்கட்சி தமிழ் மக்களுடன் கை கோர்த்து நிற்கின்றது. இந்த நாளை நாம் நிதானித்துச் சிந்திக்கும்போது, ​​​​எங்கள் எண்ணங்கள் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களுடன் உள்ளன. ஆனால் நாம் இழந்தவர்களை நினைவு கூறும் போது இது உண்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தின் அவசியத்தை நினைவூட்டுவதாகவும் இருக்க வேண்டும். 13 ஆண்டுகளாகியும் இந்தக் கொடுமைகளைச் செய்த குற்றவாளிகள் இன்னும் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படவில்லை. இன்று, இத்தகைய பாரதூரமான மனித உரிமை மீறல்களுக்கு ஆளானவர்களுக்கும் மற்றும் உயி

c 471 கூச்சலிட்டவர்களுக்கு நேர்ந்த கதி

விடுதலைப் புலிகள் வெட்டுகின்றனர்; கூச்சலிட்டவர்களுக்கு நேர்ந்த கதி விடுதலைப் புலிகள் அமைப்பினர் தாக்குதல் நடத்துவதாகத் தெரிவித்து, அம்பாறை- நவகிரியாவ காட்டிலிருந்து கூச்சலிட்டவாறு ஒடி வந்து கிராமவாசிகளை பயமுறுத்திய ஏழு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பக்கிஎல்ல பொலிஸ்ஸார் தெரிவித்துள்ளனர். “ புலிகள் எம்மை வெட்டுகின்றனர்” என கூக்குரலிட்டவாறு சிலர் ஒடி வருவதை அவதானித்த மின் வேலியைப் பாதுகாக்கும் கடமையில் ஈடுபட்டிருந்த சிவில் பாதுகாப்பு தரப்பினரும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் பக்கிஎல்ல பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். அத்துடன் அவர்கள் 119 என்ற அவசர பிரிவினருக்கும் அறிவித்துள்ளனர். இதனையடுத்து , அம்பாறை மற்றும் அரன்தலாவ பொலிஸ் விசேட பிரிவினர், இராணுவத்தினர், பொலிஸார் இணைந்து அப்பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன்போது சந்தேகநபர்கள் வருகைத் தந்த மோட்டார் சைக்கிள், 3 சைக்கிள்கள் மற்றும் ஓட்டோவொன்று என்பன அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அத்துடன் சந்தேகநபர்கள் 7 பேரும் திவுலான காட்டுப் பகுதியில் மறைந்திருந்த நிலையில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ள

c 470 கடனை அடைக்க முடியாத நிலையில் இலங்கை - பிரதமர்

கடனை அடைக்க முடியாத நிலையில் இலங்கை - பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக கடனை அடைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 5.5 பில்லியன் டொலர்கள் அடுத்த 12 மாதங்களில் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும் என சுட்டிக்காட்டிய அவர், பிரதமரிடம் உள்ள திட்டங்கள் என்னவென்றும் கேள்வியெழுப்பினார். இந்நிலையில், குழுக்கள் ஊடாக தனது பூரண ஆதரவை வழங்குவதாகவும், அந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா பிரதமரிடம் உறுதியளித்தார். இதற்குப் பதிலளித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அடுத்தவாரம் முழுமையான அறிக்கை தயாரிக்கப்படும் எனவும், சில விடயங்கள் தொடர்பில் தகவல் இல்லாமை மற்றும் தவறான தகவல்கள் இருப்பதால் உண்மை நிலவரத்தை ஆராய வேண்டும் எனவும் தெரிவித்தார். 10 பில்லியனாக இருந்தாலும் அல்லது ஒரு பில்லியனாக இருந்தாலும் கடனை செலுத்த ஒரு மில்லியன் கூட இல்லை என பிரதமர் சுட்டிக்காட்டினார். அரசியல் வேலைத்திட்டம் தொடர்பில் நாடாள

c469 நாட்டிற்கு தகுதியானவர்கள் - கனடா பிரதமர்

தமிழர்கள் உள்ளிட்ட இலங்கையர்கள் அமைதியான நாட்டிற்கு தகுதியானவர்கள் - கனடா பிரதமர் தமிழ் மக்கள் உட்பட இலங்கை மக்கள் பாதுகாப்பான, அமைதியான, நிலையான நாடு ஒன்றிற்கு தகுதியானவர்கள் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இலங்கையில் ஆயுதப் போராட்டம் முடிவடைந்து 13 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட கனேடியப் பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இந்த துயரத்தின் வலி, அதிர்ச்சி மற்றும் இழப்புடன் தொடர்ந்து வாழும் குடும்பங்கள் மற்றும் அன்புக்குரியவர்களுடன் தனது எண்ணங்கள் இருப்பதாகக் கனடா பிரதமர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் ஆயுதப் போர் முடிவுக்கு வந்து 13 ஆண்டுகள் நிறைவடைவதை அனுஷ்டிக்கும் இவ்வேளையில், முள்ளிவாய்க்கால் படுகொலை உட்பட, 26 வருடகால ஆயுதப் போரின் போது, ​​உயிர்நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துகிறோம். தமிழர்கள் உள்ளிட்ட இலங்கையர்கள் அமைதியான நாட்டிற்கு தகுதியானவர்கள் - கனடா பிரதமர் இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் காரணமாக மக்கள் த

c 468 இலங்கையில் வெடித்த கலவரம்!! வெளிவரும்

இலங்கையில் வெடித்த கலவரம்!! வெளிவரும் பின்னணிகள்...! அலரிமாளிகை முன்பாக இருந்த போராட்ட காரர்களை கோபத்துக்கு ஆளாக்கிய செயற்பாட்டை அறிவற்றதொரு அரசியல்வாதிகள் குழுவொன்றே மேற்கொண்டதென தான் ஒப்புக்கொள்வதாக பொதுஜன பெரமுனவின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்த கருத்தை தனது உரையின் மூலம் உறுதிப்படுத்திய ரமேஷ் பத்திரன, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சிரேஷ்ட பிரதிப் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்த கருத்து தான் இந்தச் சம்பவத்தின் யதார்த்தம் என்றும் தெரிவித்தார். நிலைமையை கட்டுப்படுத்தும் முயற்சியில் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் ஈடுபட்டிருந்த போதிலும், இதில் நேரடியாக தலையிட வேண்டாம் என காவல்துறைமா அதிபர் மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அவருக்கு பணிப்புரை விடுத்ததாக அவர் மேலும் தெரிவித்தார். இலங்கையில் வெடித்த கலவரம்!! வெளிவரும் பின்னணிகள்...! காலிமுகத்திடல் சம்பவத்திற்கு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் காவல்து