முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

c 467 பேரவலம்!! சிங்கள மாணவி உருக்கமான பதிவ

முள்ளிவாய்க்கால் பேரவலம்!! சிங்கள மாணவி உருக்கமான பதிவு (காணொளி) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் இன்று இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் சிங்கள மாணவி ஒருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். நாம் அனைவரும் இலங்கையர்கள் எனவும், எமது உடலில் ஓடுவது ஒரே குருதி எனவும் அவர் கூறினார். அத்தோடு அடுத்த வருடம் குருதிக்கொடை நிகழ்வு ஒன்றினையும் முன்னெடுப்பது தொடர்பில் தனது கரிசனையை வெளிப்படுத்தியுள்ளார்

c 466 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்தியசிங்கள மக்கள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்திய சிங்கள மக்களின் மனநிலை என்ன? இலங்கையில் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற சந்தர்ப்பங்களில், தென் பகுதியில் வாழ்ந்த சிங்கள மக்களிடம் இருந்து தமிழ்த் தரப்புக்கு ஆதரவு வந்ததில்லை என்ற உணர்வு இருந்தது. ஆனால், இன்று வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலுள்ள தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என சிங்கள மக்களில் இருந்தே குரல்கள் கேட்கத் தொடங்கியுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தமிழர்களுடன், சிங்கள மக்களும் இன்று கைக்கோர்த்து காலிமுகத் திடலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்தினர். பிரிவினைவாத அடிப்படையில் நடந்த போரின் வடுக்களுக்கு, தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் வகையில் சிங்கள மக்களும் தமது ஆதரவை தமிழர்களுக்கு வெளிப்படையாகவே இன்று வெளியிட்டுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு நேர்ந்த பாதிப்புக்கள், தமிழ் அரசியல் கைதி விவகாரங்கள், படுகொலைகள் ஆகியவற்றுக்கு நீதி கோரி குரல் தமிழர்களோடு இணைந்து சிங்களர்களும் குரல் எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.

c 465 நாளை இலங்கையில் தாக்குதல் இடம்பெறுமா?

நாளை இலங்கையில் தாக்குதல் இடம்பெறுமா?...சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல் இலங்கை நாளை தாக்குதல் நடத்தவுள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். மே - 09 அலரி மாளிகை மீதான தாக்குதல் ஆரம்பமானது. பிரச்சினையை மூடிமறைக்க மற்ற தரப்பினரிடம் விடக்கூடாது. 9வது சம்பவத்துடன் தொடர்புடைய கட்சியின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல் உள்ளது.. புத்தளம் கழுதை ஒன்று இரும்பு சுமந்து செல்வதைப் பார்த்தேன். மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கழுதையின் முதுகில் ஏறிச் செல்லுங்கள். - என்றும் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். அதேவேளை வெற்றிடங்களுக்கான போராட்டம் தொடர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

c464 இனப்படுகொலைக்குநீதி கேட்டும் தமிழர்கள்

இனப்படுகொலைக்கு சர்வதேச சமூகத்திடம் நீதி வேண்டி முழு கதவடைப்பு : கிளிநொச்சி இன்று மே 18 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஈழ மண்ணில் நடைபெற்றமை திட்டமிட்ட இன படுகொலையே என்பதை சர்வதேச சமூகம் ஏற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரி முழு அளவிலான கதவடைப்புக்கு கிளிநொச்சி வர்த்தக சமூகம் அழைப்பு விடுத்துள்ளது. இதனால் இன்று பொதுச் சந்தைகள் உட்பட அனைத்து வர்த்தக நிலையங்களும் சர்வதேசத்திடம் நீதி கோரும் வகையில் மூடப்பட்டிருக்கும் என்று கிளிநொச்சி வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது.

c463 கோட்டாபாய பதவிநீக்கத்தில் சுமந்திரனுக்கு அடி!இந்தியத்தூதர் சம்பந்தனிடம் ...

கோட்டாபய பதவி கவிழ்ப்பில் சுமந்திரனுக்கு அடி! இந்தியத்தூதர் சம்பந்தனிடம் ஓட்டம் ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் அமர்த்தியதன் பின்னணியில் இந்தியா இல்லை என இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ரணில் தரப்புக்கு கூட்டமைப்பு வழங்க வேண்டிய ஆதரவு நிலை குறித்து மறைமுகமான நாடிப் பிடிப்பை செய்வதற்காக சம்பந்தனது இல்லத்திற்கே நேரடியாகச் சென்ற பாக்லே, ஒரு மணிநேர பேச்சுக்களை முன்னெடுத்துள்ளார். இந்தச் சந்திப்பின் போது தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து இந்தியா செலுத்த வேண்டிய அவதான நிலை குறித்தும் பேசப்பட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க, இன்று நாடாளுமன்றத்தில் இரு முக்கிய வாக்கெடுப்புகள் இடம்பெற்றிருந்தது. இந்த இரண்டு வாக்கெடுப்புக்களிலும் ராஜபக்ச தரப்பு தான் வெற்றி அடைந்திருக்கிறது. இதன் விரிவான, மேலும் பல நிகழ்கால நிதர்சனங்களுடன் வருகிறது ஐபிசி தமிழின் செய்தி வீச்சு,

c 462 முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களை இலங்கை நாடாளுமன்றில் நினைவேந்திய கஜ...

விடுதலைப் புலிகள் விவகாரத்தில் ரணிலின் சதிவலை - நாடாளுமன்றில் பகிரங்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை சர்வதேச ரீதியில் பலவீனப்படுத்தி இராணுவ தீர்வுக்கு அடித்தளமிட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஒரு நேர்மையற்ற தலைவர் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் விமர்சித்துள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தமிழர்களிடம் இருந்து தலைவர்களை தேடாது, அவர்களிடம் இருந்து முகவர்களை தேடுவதே இதுவரை இனப்பிரச்சினை தீர்க்கப்படாமைக்கான காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்தோடு, முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட உறவுகளுக்கு நாடாளுமன்றில் அஞ்சலியையும் அவர் செலுத்தியிருந்தார்.

c 461 வட்டிக்குப் பணம் கொடுப்பவர்கள் அவதானம்.

யாழ்ப்பாணத்தில் வன்முறைக் கும்பல் அட்டகாசம் யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் தொட்டிலடி பகுதியில் நேற்றைய தினம் (17) இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். அளவெட்டியைச் சேர்ந்த ஏ. ரதீஸ்வரன் (வயது-37) என்பவரே தலையில் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். குறித்த நபர் "அளவெட்டி கனி" என அழைக்கப்படுபவர் என்றும், குறித்த நபர் வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதேவேளை குறித்த நபர் “வட்டிக்கு கொடுத்த பணத்தை வசூலிப்பதற்காக சண்டிலிப்பாய் பகுதிக்கு வந்த போது, மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட குழு வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.