முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

c 460 இருவர் கைது

இலங்கை காலிமுகத் திடல் வன்முறை தொடர்பில் எம்.பிக்கள் இருவர் கைது இலங்கையின் காலி முகத்திடல் தன்னெழுச்சி போராட்டத்தின் மீது கடந்த 9ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கொழும்பு காலி முகத்திடலில் கடந்த 9ம் தேதி நடைபெற்ற வன்முறை தொடர்பில் ஜனாதிபதி் கோட்டாபய ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த, மிலான் ஜயதிலக்க ஆகிய இருவரும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர். காலி முகத்திடல் பகுதியில் அமைதியான முறையில் நடத்தப்பட்ட போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம், தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது, இதன்படி, கடந்த 9ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து 7 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டியுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், நாடாளுமன்ற சபாநாயகருக்கு அறிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களை தெளிவூட்டுமாறு சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப

c 459 தலைவரின் வீட்டிற்கு முன்பாக விழுந்து வணங்கிமக்கள்

விடுதலைப் புலிகளின் தலைவரின் வீட்டிற்கு முன்பாக விழுந்து வணங்கி ஆரம்பிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த ஊரான வல்வெட்டித்துறைப் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு முன்பாக விழுந்து வணங்கி முள்ளிவாய்க்கால் பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மே 18 இல் முள்ளிவாய்க்காலில் அப்பாவி தமிழ் மக்களைக் கொத்துக் கொத்தாக கொன்றொழித்த சிங்கள பேரினவாதத்தின் கறைபடிந்த நாளான முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் கடந்த 12ஆம் திகதி உணர்வுபூர்வமாக தமிழர் தாயகப் பகுதிகளில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. "இன விடுதலை தேடி முள்ளிவாய்க்கால் நோக்கிய பயணம்" என்ற கருப்பொருளில் இந்த பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவரின் வீட்டிற்கு முன்பாக விழுந்து வணங்கி ஆரம்பிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் பேரணி (படங்கள்) தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த ஊரான வல்வெட்டித்துறையில் இருந்து இன்று ஆரம்பிக்கப்பட்ட பேரணியானது நடைபவனியாக பருத்தித்துறை நெல்லியடி, அச்சுவேலி, நல்லூர் கந்தசாமி ஆலயம் யாழ். பல்கலைக்கழகம் ஊடாக யாழ். நகரத்தை வந்தடையவுள்ளது.

c 458 இந்தியாவை சுக்குநூறாக்கும் நடிகைகள்.

கவர்ச்சியே கெதி என்று மாறி விட்ட நடிகை மீரா ஜாஸ்மின்… புகைப்படங்கள் இணைப்பு இந்த செய்தியை பகிருங்கள் கவர்ச்சியே கெதி என்று மாறி விட்ட நடிகை மீரா ஜாஸ்மின்… புகைப்படங்கள் இணைப்பு பாருங்கள்…

c 457 இந்தியாவின் ரோவை கடுமையாகக் கண்டிக்கும் தமிழர்கள் .

ராஜபக்ச அரசாங்கத்தை கொண்டுவருவதற்காக மீண்டும் விடுதலைப்புலிகளை உருவாகின்றார்கள் : தர்மலிங்கம் சுரேஸ் (Photos) ராஜபக்ச அரசாங்கத்தை மீண்டும் கொண்டுவருவதற்கும், சிங்கள மக்கள் மத்தியில் ராஜபக்சவுக்கு உள்ள எதிர்ப்பினை சமாளிப்பதற்காகவும் மீண்டும் விடுதலைப்புலிகள் உருவாகின்றார்கள் என்ற நிலையினை ஏற்படுத்த முனைவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நினைவு வாரத்தின் ஐந்தாவது நாள் இன்று மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். ஐ. நாவின் பொறுப்புக்கூறல் என்ற விடயத்திலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக புலிக்காய்ச்சல் ஏற்படுத்தப்படுவதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார். ராஜபக்ச அரசாங்கத்தை கொண்டுவருவதற்காக மீண்டும் விடுதலைப்புலிகளை உருவாகின்றார்கள் : தர்மலிங்கம் சுரேஸ் (Photos) மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலா

c 456 தொடரட்டும் முள்ளி வாக்கால் கஞ்சி

இந்தகக்ஞ்சில் தான் மாவீரர்களினதும் அவர்களோடு இறுதி வரை நின்று சாவடைந்த மக்களின் முகம் தெரிவதாக தமிழர்கள் நினைக்கின்றார்கள். ஏனெனில் மாவீரர்களின் துயலும் இல்லம் தான் எமது மக்களின் வணக்கத்திற்கு உரிய இடமாக கருதப்படுகின்றது. 30வருடப்போரில் தாய் நாட்டின் விடுதலைக்காக தங்களின் பிள்ளைகளைக்கொடுத்த பெற்றோர்களும் அவர்களின் வாரிசிகளும் இதைத்தான் விரும்புகின்றார்கள். எனவே அனைத்தும் எதிரிகளால் அளிக்கப்பட்டு அது தடை செய்யப்பட்ட போதிலும். அவர்களிற்கு எஞ்சியது இந்த முள்ளி வாக்கால் கஞ்சி தான்இந்த மண் நிம்மதியான விடிவை காண்கின்ற நாளன்று கஞ்சி தேசத்தின் தேசிய உணவாக அங்கீகரிக்கப்படும்: அருணாசலம் வேழமாலிகிதன் இந்த மண் நிம்மதியான விடிவை காண்கின்ற நாளன்று இந்த கஞ்சி தேசத்தின் தேசிய உணவாக அங்கீகரிக்கப்படும் என்பது நம்பிக்கை என கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி சேவைச்சந்தையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பி

c 455 சந்தேக நபர் கைது

கனடாவில் பலியான தமிழர் - பிரதான சந்தேக நபர் கைது கனடாவில் தமிழர் ஒருவரை வாகனத்தில் மோதிவிட்டு தப்பிச் சென்ற குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பரில் 35 வயதான சுரேஷ் தர்மகுலசிங்கம் என்பவர் Mississauga பகுதியில் வாகனத்தால் மோதப்பட்டு உயிரிழந்தார். எனினும், பாதிக்கப்பட்டவருக்கு எந்த உதவியும் செய்யாமல், சம்பவ இடத்தில் வாகனத்தை நிறுத்தாமல் சாரதி தப்பிச் சென்றதாக விசாரணைகளின் மூலம் தெரிவிக்கப்படுகின்றது. உயிருக்கு ஆபத்தான நிலையில் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சுரேஷ் தர்மகுலசிங்கம் டிசம்பர் 24ஆம் திகதி உயிரிழந்தார். கனடாவில் பலியான தமிழர் - பிரதான சந்தேக நபர் கைது இந்தச் சம்பவம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் Luke Conklin என்பவர் மீது Toronto காவல்துறையினர் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தனர். கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட சந்தேகநருக்கு எதிராக விபத்தை ஏற்படுத்திய பிறகு வாகனத்தை நிறுத்தத் தவறியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், Luke Conklin ஜூலை மாதம் 2ஆம் திகதி நீதிமன

c 454 ரணிலுக்கு கஜேந்திரகுமார் அனுப்பியுள்ள செய்தி

ரணிலுக்கு கஜேந்திரகுமார் அனுப்பியுள்ள செய்தி புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கக் கூடிய சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டால் மாத்திரமே அவர் தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க முடியும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட போது அவர் இவ்வாறு கூறியிருந்தார். அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச, எந்தளவிற்கு கொடூரமானவர் என்பதை தற்போதேனும் சிங்கள மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.