முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

TAMIL Eelam news b896

நாளிற்கு நாள் அதிகரிக்கும் கொலைகள் பாதுகாப்பார் அற்ற அனாதைகளாகத் தமிழர்கள், யாழில் இன்று பகல் மூதாட்டியொருவரிற்கு நடந்த பதை.. பதைக்கும் சம்பவம்! கானல் நீராகும் மனிதம் யாழ்ப்பாணத்தில் 72 வயது மூதாட்டியொருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவம் யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இலக்கம் 16, இராசாவின் தோட்ட வீதி பகுதியில் இன்று மதியம் 12 – 1 மணிக்கிடையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. சம்பவத்தில் மரியநாயகம் காணிக்கையம்மா ஜெயசீலி (72) எனும் மூதாட்டியே அடித்துக் கொல்லப்பட்டுள்ள நிலையில், கொலையாளி தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகின்றது. உயிரிழந்த மூதாட்டி மாடி வீட்டின் கீழ் தளத்தில் தனித்து வசித்துவரும் நிலையில், மேல் மாடியில் பல்கலைகழக மாணவர்கள் சிலர் தங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று வீட்டிற்கு வேலையாள் வருவார் என கூறி, அயல்வீட்டிலிருந்து கத்தி, கோடாரியென்பன மூதாட்டி வாங்கியிருந்ததாக கூறப்படுகின்றது. இன்று பகல் 10.30 மணியளவில் பல்கலைகழக மாணவன் ஒருவர் வீட்டுக்கு வந்து போனபோது, மூதாட்டி வீட்டிலிருந்தார். அதன் பின

TAMIL Eelam news b895

விஜயகலா விடுதலைப் புலிகள் பற்றி புகழ்ந்து பேசுவதாக நீங்கள் அறிந்தவர ?இருப்பினும் அவர்களின் உறவு முறையை அறிந்து கொள்ளுங்கள். விஜயகலா இல்லத்திற்கு சென்ற மைத்திரி (Photos) முன்னாள் ஜனாதிபதியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் யாழ்ப்பாணம் இல்லத்திற்கு சென்று கலந்துரையாடியுள்ளார். இதன்போது, அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் பங்கேற்றிருந்தார். நேற்றைய தினம் சென்ற மைத்திரி உள்ளிட்ட குழுவினர் உணவு விருந்திலும் கலந்துகொண்டனர். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட மாநாடு இடம்பெற்றிருந்த நிலையில். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்கள் பலரும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

TAMIL Eelam news b894

வழுக்கை தலையை உண்டாக்கும் 5 எண்ணெய்கள் நீங்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டிய பல முடி பராமரிப்பு பொருட்கள் மற்றும் எண்ணெய்கள் உள்ளன. மறந்தாலும் பயன்படுத்தக்கூடாத 5 எண்ணெய்கள் பற்றி தெரிந்து கொள்வோம். உச்சந்தலையை பாதுகாப்பது மட்டுமின்றி அழகையும் மேம்படுத்தும் ஐந்து வகையான எண்ணெய்கள் உள்ளன. முடியை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க நாம் அனைவரும் பல்வேறு பொருட்களைப் பயன்படுத்துகிறோம். முடி பராமரிப்புக்கு நல்ல முடி எண்ணெய் தேவை. ஆனால் சில எண்ணெய்கள் கூந்தலுக்கு நல்லதை விட அதிக தீங்கு விளைவிக்கும். முடிக்கு அத்தியாவசிய எண்ணெய்கள் என்ன? என்பதை பார்ப்போம். ஆலிவ் எண்ணெய் ஆலிவ் எண்ணெய் முடி வேர்களுக்கு நல்லது மற்றும் முடி பராமரிப்புக்கு நல்லது. ஆனால் இது முடியில் உள்ள எண்ணெயின் பாகுத்தன்மையையும் பராமரிக்கிறது. ஆலிவ் எண்ணெயில் உள்ள Oleoresin முடி வளர்ச்சி சுழற்சியை நேரடியாக பாதிக்கிறது. ஆலிவ் எண்ணெயில் இயற்கையாகவே மெட்டோஜெனிக் உள்ளது, இது தோல் துளைகளை அடைத்து முகப்பருவை ஏற்படுத்துகிறது. எனவே, ஒருவருக்கு முகப்பரு ஏற்படும் போக்கு இருந்தால், அவர் ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்துவதை

TAMIL Eelamnews b893

விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பில் முரண்பட்ட தகவல் இறுதிக் கட்ட போரில் உயிரிழந்ததாக கூறப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடல் என மீட்கப்பட்ட உடலின் மாதிரிகளைக் கொண்டு மரபணு பரிசோதனை நடத்துவதற்கு கூட ஏன் சிறிலங்கா அரசாங்கம் முன்வரவில்லை என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் (M.K. Sivajilingam) கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்ப்பாணம் ஊடக மையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், தேசிய தலைவரின் மரணம் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் நடத்தும் நாடகம் அரசாங்க தரப்பினரின் முரண்பட்ட கருத்துக்களின் போது வெளிப்படுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனது இறப்புத் தொடர்பில் அரசாங்கமும் அரசாங்கத்தில் உள்ளவர்களும் மாறுபட்ட கருத்துக்களையே கூறி வருகின்றார்கள். இதன்மூலம் போர்க்குற்றம் நடந்தது என்பதை அவர் ஏற்றுக்கொள்கின்றார்கள். இதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பண்பு தெரியாத வகையில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி வசைபாடியுள்

TAMIL Eelam news b892

சிங்களக் கைக்கூலிகள் அட்டகாசம் சிங்களப் படை கண்டுபிடித்ததாதம் கதையைக் கேழுங்கோ மக்களே வீடு புகுந்து மோட்டார் சைக்கிள் திருடியவர்களில் ஒருவர் கைது உரும்பிராயில் நேற்று இரவு 11:30 மணியளவில் வீடொன்றை உடைத்து பல லட்சம் ரூபா பெறுமதியான மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற திருடர்கள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இன்று காலை ஒருவர் கைது செய்யப்பட்டு திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. நேற்று இரவு 11:30 மணியளவில் உரும்பிராயில் உள்ள வீடொன்றிற்குள் புகுந்த இருவர் KRM ரக மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் இன்று காலை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த யாழ்.பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் சம்பவ இடத்திலுள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டனர். உடுவில் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் திருடப்பட்ட மோட்டார்

TAMIL Eelam news b891

உள்லூர் முடவனை விட அயலூர் அழகனை விரும்பும் தாயகப் பெண்கள் யாழில் இருந்து காதலனுக்காக வெளிநாடு விரைந்த பெண்ணிற்கு ஏற்பட்ட புதிய சிக்கல் கடந்த 5 ஆண்டுகளாக பேஸ்புக் மூலம் அறிமுகமாகிய யாழ் பருத்தித்துறையை சேர்ந்த நிஷாந்தினி தமிழக வாலிபரை காதலித்து கரம் பிடித்துள்ளார் சேலத்தின் ஓமலூரை சேர்ந்தவர் சரவணன், இவருக்கும் யாழ்ப்பாண மாவட்டம் பருத்தித்துறையை சேர்ந்த நிஷாந்தினி என்பவருக்கும் பேஸ்புக் மூலம் நட்பானது. நாளடைவில் இந்த நட்பு காதலாக மாற, இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் சுற்றுலா விசா மூலம் சேலம் வந்தடைந்தார் நிஷாந்தினி, அங்குள்ள கோவில் ஒன்றில் இருவரும் திருமணமும் செய்து கொண்டனர். தொடர்ந்து அவர்களது திருமணத்தை பதிவு செய்ய இருவரும் அரசு அலுவலகத்தை நாடிய போது திருமணத்தை பதிவு செய்வதில் சட்ட சிக்கல் இருப்பதால் தடையில்லா சான்று வேண்டுமென்று அதிகாரிகள் கேட்டுள்ளனர். இதனால் செய்வதறியாது திணறிய காதல் ஜோடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். இதற்கிடையே விசா காலமும் விரைவில் முடிவடைவதால் என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறா

TAMIL Eelam news b890

போர் விமானத்தை சுட்டுவீழ்த்த முயன்ற சீன கப்பல்! (Photo) சீன போர்க்கப்பல் அவுஸ்ரேலியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தும் நோக்கில் அந்த விமானத்தின் மீது லேசர் ஒளியை பாய்ச்சியதாக அவுஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியது. வடக்கு அவுஸ்ரேலியாவின் அரபுரா கடலில் ​சீன கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இது போர் விமானத்தில் இருந்த வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும் அவுஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக சீனா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் அவுஸ்ரேலிய போர் விமானம் மீது லேசர் ஒளியை பாய்ச்சியது சீனாவின் மிரட்டல் நடவடிக்கை என கூறி அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாத்தியம் உள்ளது. இது ஒரு மிரட்டல் செயலே தவிர வேறு ஒன்றுமில்லை. இதுபோன்ற மிரட்டல் செயல்களை அவுஸ்ரேலியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது’’ என்று கூறினார்.