முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

TAMIL Eelam news b386

 யாழில் யுவதி ஒருவரை காதலித்த இரு காதலர்கள்! பிரித்தானிய காதலரின் நிலை யாழில் ஒரு யுவதி, இரண்டு பேரை காதலித்ததால், இருவரும் நேரில் அழைக்கப்பட்டு, தெரிவுசெய்யப்பட்ட ஒருவருக்கு கழுத்தை நீட்டியுள்ளார். சினிமா பாணியிலான இந்த முக்கோண காதல் கதை, கடந்த வாரம் யாழ்ப்பாணம் புறநகர் பகுதியொன்றில் நடந்துள்ளது. யாழில் இயக்கப்பட்ட குறும்படங்கள் சிலவற்றில் நடித்த யுவதியொருவர், யாழ் நகரிலுள்ள புகைப்பட கலையகத்தில் பணியாற்றும் இளைஞன் ஒருவரை காதலித்து வந்துள்ளார். சில மாதங்கள் இந்த காதல் நீடித்த நிலையில், பிரித்தானியாவில் வசிக்கும் முல்லைத்தீவு இளைஞன் ஒருவடன் யுவதிக்கு பேஸ்புக் காதல் உருவாகியுள்ளது. பேஸ்புக் காதல் தெய்வீக காதலாக உருமாற, புகைப்பட கலையகத்தில் பணியாற்றும் இளைஞனை, யுவதி கைகழுவி விட்டுள்ளார். எனினும், தன்னுடைய காதலும் தெய்வீக காதல்தான் என்பதை புகைப்படக்காரரும், யுவதியிடம் நிரூபிக்க முயன்றுள்ளார். தனது உடலில் யுவதியின் பெயரை கீறி, இரத்தத்தால் ஒரு கடிதம் எழுதி அனுப்பி வைத்துள்ளார். அவ்வளவுதான் யுவதியின் மனம் இளகி விட்டது.கைக்குள்ளேயே ஒரு தெய்வீக காதலனை வைத்துக் கொண்டு, எதற்கு பிரித்தானியாவிற்கு

TAMIL Eelam news b385

 உணவை காரணம் காட்டி சிங்கள வெறியர்களின் கழுத்துக்கு சுருக்கு வெல்லப் போவது யார்? ஐ.நாவின் குற்றச்சாட்டுகளுக்கு அரசு பொறுப்புடன் பதிலளிக்க வேண்டும்! "இலங்கை முன்னேற வேண்டுமானால், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் குற்றச்சாட்டுகளுக்கு அரசு பொறுப்புணர்வுடன் பதிலளிக்க வேண்டும்“ என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அலவத்துவல தெரிவித்தார். எதிர்க்கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது, "நாட்டின் பொருளாதாரம் சரிந்து வருகின்றது. அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் உலகத்துடன் பரிவர்த்தனைகளை முன்னெடுக்க வேண்டிய தேவை இலங்கைக்கு உள்ளது. அரசு வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் கொண்டு வருவதாகக் கூறுகின்றது. எனினும், பொருளாதாரம் தொடர்ந்து பலவீனமடைந்து வருகின்றது என்பது தெளிவாகின்றது. இலங்கை முன்னேற வேண்டுமானால், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் குற்றச்சாட்டுகளுக்கு அரசு பொறுப்புணர்வுடன் பதிலளிக்க வேண்டும். ஜி.எஸ்.பி. பிளஸ் வர்த்தகச் சலுகையை நாடு இழந்தபோது பொதுமக்கள் பல சிரமங்களை எதிர்க

TAMIL Eelam news b384

 குடியேறிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள ஆஸ்திரேலிய அரசின் முடிவு ஆஸ்திரேலிய நிரந்தரமாக வசிக்கும் உரிமைப் பெற்ற குடியேறிகள், அந்நாட்டின் முக்கிய மற்றும் அவசியமான நல உதவிகளைப் பெற நான்காண்டுகள் காத்திருக்க வேண்டும் என்ற புதிய திட்டம் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிக்கும் எண்ணம் கொண்ட வெளிநாட்டினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 670 மில்லியன் டாலர்களை மிச்சப்படுத்தும் நடவடிக்கையாக இக்கொள்கையினை ஸ்காட் மாரிசன் தலைமையிலான ஆஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்திருக்கிறது.

TAMIL Eelam news b383

 அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்திரேலியாவின் புதிய கூட்டு! எதிர் நடவடிக்கைக்கு தயாராகும் சீனாவின் “மாஸ்டர் பிளான்” பிராந்தியத்தில் தனது நிலையை வலுப்படுத்துவதற்காக முக்கியமான ஆசிய பிசிபிக் வர்த்தக உடன்படிக்கை ஒன்றில் இணைவதற்கு சீனா விண்ணப்பித்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு இடையே வரலாற்று முக்கியம் வாய்ந்த உடன்படிக்கை அறிவிக்கப்பட்டு சில நாட்களிலேயே சீனா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ட்ரான்ஸ்-பிசிபிக் கூட்டாண்மை என்ற இந்த ஒப்பந்தம் சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்வதற்கு அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட விரிவான மற்றும் முற்போக்கான ஒப்பந்த ஒன்றாகும். எனினும் 2017 ஆம் ஆண்டில் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த டொனால்ட் டிரம்ப் இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் இந்த ஒப்பந்தத்தில் இணைவதற்கு உலகின் இரண்டவாது மிகப்பெரிய பொருளாதாரமான சீனா, நியூசிலாந்து வர்த்தக அமைச்சரிடம் விண்ணப்பத்தை கையளித்தது என்று சீன வர்த்தக அமைச்சர் வாங் வென்டாவோ தெரிவித்தார். இந்த உடன்படிக்கையின் நிர்வாக மையமாக நியூசிலாந்து செயற்படுகிறது. ட்ரான்ஸ்-பிசிபிக் கூட்டாண்மை உடன்படிக்கை அவுஸ்

TAMIL Eelam news b382

 இந்தியா - இலங்கை இடையில் பாலம் இருந்தது உண்மையா? ஆதாரத்தை வெளியிட்ட அமெரிக்கா இந்தியா- இலங்கை இடையே தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரை கடற்பகுதியில் 13 மணல் தீடைகள் உள்ளன. இது ராமர் காலத்தில் கட்டப்பட்ட பாலம் என இதிகாசங்களில் கூறப்படுகிறது. இந்த பாலம் ஆதாம் பாலம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால் இந்த பாலம் வெறும் கற்பனைதான் என்ற வாதமும் ஒரு பக்கம் இருந்து வந்த நிலையில் ராமர் பாலம் இருந்தது உண்மை தான் என அமெரிக்க ஆராய்ச்சி முடிவுகளில் தெரியவந்துள்ளது. மேலும் இதுதொடர்பில் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.  அந்த வீடியோவில் கூறப்பட்ட தகவல் இதுதான்: இந்தியா-இலங்கை நடுவேயான இந்த பாலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள கற்கள் சுமார் 7000 ஆண்டுகள் பழமையானவை. இந்த பாலம் 30 மைல்கள் நீளமானவை. அங்கு மணல் திட்டுங்கள் உருவாகியுள்ளது உண்மைதான். ஆனால் அவை கற்களால் பாலம் அமைக்கப்பட்ட பிறகே உருவாகியுள்ளன. மணல் திட்டுக்களின் வயது சுமார் 4000 ஆண்டுகள்தான். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

TAMIL Eelam news b381

 விடுதலைப்புலிகளின் பெயரைக்கேட்டாலே அஞ்சிப் பதுங்கியவர் 'லொஹான் ரத்வத்தே' - சரத் பொன்சேகா தமிழீழ விடுதலைப்புலிகளின் பெயரைக்கேட்டாலே அஞ்சிப் பதுங்கிய இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி முன்னாள் போராளிகளின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டுகின்றமை முதுகெலும்பற்ற செயற்பாடென முன்னாள் இராணுவத் தளபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், லொஹான் ரத்வத்தவிற்கு எதிராக அரசாங்கம் மேற்கொள்ளவிருக்கும் சட்டநடவடிக்கை என்னவென்றும் கேள்வியெழுப்பியுள்ளார். இதன்போது மேலும் கருத்துரைத்த அவர், இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் செயற்பாடுகளை கண்டிக்கின்றோம். அவரது தந்தையான முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் அமரர் அனுருத்த ரத்வத்த அன்றைய நாட்களில் போர்க் களத்திற்கு விஜயம் செய்து எம்மையும் சந்திப்பார். ஆனால் அவர் மீதான மதிப்பினை இழக்கச் செய்கின்ற அளவுக்கு தற்போது லொஹான் ரத்வத்தவின் செயற்பாடு அமைந்துள்ளது.   தமிழீழ விடுதலைப் புலிக

TAMIL E elam news b380

 யாழில் பரபரப்பை ஏற்படுத்திய மர்ம மரணம்! தீவிர விசாரணையில் பொலிஸார் யாழ்.காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் அருகே நேற்று மாலை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இளைஞனின் மரணம் தொடர்பில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கீரிமலை, நல்லிணக்கபுரத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 24 வயதான ம.ஜெனுசன் என்ற இளைஞனே யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தின் அருகே சடலமாக மீட்கப்பட்டார். காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திலிருந்து 100 மீற்றர் தொலைவில், காங்கேசன்துறை பிரதான வீதியில் சடலம் காணப்பட்டது. இளைஞன் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிள் வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்தது. அந்தப்பகுதியில் சில காலணிகளும் சிதறிக் காணப்பட்டன. அந்த காலணிக்குரியவர்கள் இன்று இளைஞனுடன் முரண்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. நல்லிணக்கபுரத்தில் இன்று நடைபெற்ற மரணவீட்டில் இளைஞர்கள் சிலர் மது அருந்திய பின்னர் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக,சம்பந்தப்பட்டவர்கள் பொலிஸ் நிலையம் வந்த போதோ அல்லது பொலிஸ் நிலையம் வந்த இளைஞனை யாராவது விரட்டி வந்து தாக்கினார்களா என ஆராயப்படுகிறது. இளைஞன் அடித்துக் கொல்லப்பட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டிய