முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

TAMIL Eelam news 76

 அணையாத தீபத்தின் அழியாத நினைவுகள் –அமல்ராஜ் ”திலீபண்ண” ஒரு தாயிற்கு மகனாக பிறந்தவர்,  ஆனால் மக்களின் மகனாக மரணித்தார் , அவருக்கு பிற்பட்ட காலத்தில் தாயகத்தில் எல்லாக்குடும்பங்களிலும் அவரும் ஒரு மூத்த மகன் அதனால் தான் திலீபண்ண என்று பாசமாக இன்றுவரை அவரை எல்லோரும் அழைக்கிறோம். அவரை அண்ண என்றுதான் கூப்பிட வேண்டும் என்டு யாரும் எமக்கு சொல்லி தந்ததில்லை , சாதாரண வாழ்வியல் உறவு நிலைக்குள் வரையறுத்துக்கொள்ள முடியாத உறவு நிலைக்கூடாக வந்த சொந்தம் அது. திலீபண்ண வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவனும் அல்ல , அவர் இருக்கிறபோது இந்த மண்ணில் பிறந்திருக்கவும் இல்லை, ஆனாலும் அவரின் வாழ்வை அந்த சூழல் என் போன்ற எல்லா குழந்தைகளுக்கும் கற்று கொடுத்தது , அவரின் நினைவு என்று நெஞ்சில் தூக்கி சுமக்க அவரின் தியாக புரட்சி எப்படி அழியாமல் இருக்கிறதோ அப்படிதான் அவரை வழிபட்ட நிகழ்வுகளும் அவரின் நினைவாக இருதயத்தில் அரித்துக்கொண்டு கிடக்கிறது. வீட்டில் ,  குடும்பத்தில் ஒருவராகி போனதால் அநேக வீடுகளில் அவரை பன்னிரு நாட்களும் வழிபடுவோம் , வீட்டு முற்றத்தில் அல்லது கண்டாயத்தில் சதுர வடிவில் சின்ன குடில் செய்து அதனை வெள்ளை சேலைய

TAMIL Eelam news 75

 யாழில் சிறிலாங்காப் புலனாவுத்துறையினர் அட்டகாசம். மேலும் தெரியவருவதாவது வவுனியாவில் இருந்து யாழ் சென்ற ஆங்கில ஆசிரியர் தனது உறவினரைப் பாற்கவும் மற்றும் வேறு சில காரணங்களிற்காகச் சென்றறுள்ளார் அவ்வேளை அதிகூடிய பாதுகாப்பு இடமான யாழ் பல்கலைக்கழக விடுதிக்கு முன்பாக பொலிஸ்ஸார் இராணுவம் கடும் பாதுகாப்பில் இருக்கும் இவ் இடத்திலே சிவில் உடையணிந்த இராணுவப் புலநாய்வாளர்களால் சரமாரியாக இவர் வாளால் வெட்டப்பட்டுள்ளார். தாக்குதலில் படுகாயம் அடைந்த ஆசிரியர் யாழ் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுளார். மேலும் அவரின் பேர் முகவரி என்பன செய்திகளில் பிரசூரிப்பதை தவிர்க்கும் மாறும் அதை பிரசூரித்தால் மீண்டும் அவரை இனம்கண்டு கொலை செய்ய அது வளியாக அமைந்துவிடும் என சில புத்திஜீவிகள் குறிப்பிட்டுள்ளனர். இப்படியான பாதுகாப்பற்ற நாட்டில் வெளிநாடுகளில் இருந்து தனது நாட்டிற்கு முதலீடு செய்ய வாருங்கள் என சர்வதேச நாடுகளிற்கு கோத்தவாய அளைப்பு விட்டது மிகவும் சிறுபிள்ளை தனமானது எனவும் அவருடைய மக்களையே அவரால் பாது காற்கமுடியாது என்றால் அவரால் முதலீட்டாளர்களை எப்படி பாது காற்கமுடியும் என புத்திஜீவிகள் அவரி

TAMIL Eelam news 74

 தமிழீழம் எப்போது கிடைக்கும்? – தலைவர் பிரபாகரனின் பதில் பிரபாகரன் அன்பானவர், பண்பானவர், மிகவும் பலம் வாய்ந்த  விடுதலை இயக்கத்திற்கு தலைமை தாங்கி வழிநடத்துபவர் என்ற முறையில் , சிங்கள ஒடுக்குமுறையிலிருந்து தமிழ் மக்களை விடுதலை செய்யும் இலட்சியத்தில் தீவிரமும் உறுதிப்பாடும் மிக்கவராக விளங்குகிறார் என 1984ல் அவரைச் சந்தித்து பேட்டி எடுத்த அனிதா பிரதாப் தெரிவித்தார் . அனிதா பிரதாப் அவர்கள் கேட்ட  சில கேள்விகளும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு : வே. பிரபாகரன் அவர்கள் அளித்த துல்லியமான பதில்களும்…….. 1.கேள்வி: சிங்கள இராணுவத்தின் கரங்களில் பிடிபடுவதைவிட மரணமடைவது மேலானது என்று கருதுகிறீர்களா? பதில்: உயிரோடு எதிரிகள் கைகளில் பிடிபடுவதை விட கெளரவமாக சாவதையே விரும்புகிறேன் 2. கேள்வி: தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் விடுதலைப் போராட்டத்தை பின்னுக்குத் தள்ளுகிறார்கள் என்று நீங்கள் கருதுகிறீர்களா? ஏன்? அவர்களைத் துரோகிகள் என நினைக்கிறீர்களா? பதில்: தமிழர் விடுதலைக் கூட்டணியின் சந்தர்ப்பவாத அரசியலானது விடுதலைப் போராட்டத்தை நிச்சயமாகப் பின்னுக்குத் தள்ளத்தான் செய்கிறது. இப்போராட்டத்தைமுன்னெடுத்து

TAMIL Eelam news 73

 ஒருகாலம் தமிழீழம் கைகூடிவிட்டால் அது எவ்வகையான நாடாக அமையும் என பிரபாகரனிடம் இந்திய ஊடகம் ஒன்று 1986 இல் கேள்வி கேட்டபோது அதற்கு புலிகளின் தலைவர் பிரபாகரன் பதிலளிக்கையில் தமிழீழம் ஒரு சோசலிச அரசாக அமையப்பெறும். சோசலிசம் என்பதன் மூலம் சமத்துவமான சமூக அமைப்பை நான் கருதுகின்றேன். இதில் மனித சுததிரத்திற்கும் தனிநபர் உரிமைகளுக்கும் உத்தரவாதமுண்டு. எல்லாவித ஒடுக்குமுறையும் சுரண்டலும் ஒழிக்கப்பட்ட மக்களின் உண்மையான ஜனநாயகமாக அது திகழும். தமிழ் மக்கள் தங்களுடைய பொருளாதாரத்தைப் பேணி வளர்த்து தமது கலாசாரத்தை மேம்பாடு செய்யும் வகையில் அவர்களுக்கு அதிகபட்ச வாய்ப்புக்கள் கிடைக்கின்ற ஒரு சுதந்திர சமூகமாக தமிழீழம் அமையும். இந்தச் சுதந்திரத் தமிழீழம் நடுநிலை நாடாக இருப்பதுடன் அணிசேராக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் அத்தோடு இந்தியாவோடு நேச உறவு கொண்டு அதன் பிராந்தியக் கொள்கைகளை குறிப்பாக இந்துமகா சமுத்திரத்தை ஒரு சமாதானப் பிராந்தியமாக்கும் வெளிநாட்டுக்கொள்கையைக் கெளாரவிக்கும் தமிழீழ மண்ணுக்கேற்ற கோட்பாட்டிலேயே கடைப்பிடிப்போம் என்பதில் தலைவர் பிரபாகரன் திட்டவட்டமாக தெளிவாக்கி இருந்தார்.                  

TAMIL Eelam news 72

 மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்- திலீபன் 1987 ம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 15ம் நாள் தமிழீழ விடுதலைக்காக நீதி கோரி இந்திய அரசிடம்  ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நல்லூர் ஆலைய முன்றலில் ஜந்தம்ச கேரிக்கையினை முன்வைத்து சாகுவரையில் உண்ணா நோன்பிருந்த தியாகம் நிறைந்த வீரச்சாவடைந்த திலீபன் அவர்களின் 26ஆம் ஆண்டு நினைவுகள் சுமந்த நாட்கள் இவை..   திலீபன் அவர்கள் முன்வைத்த ஐந்து அம்சக் கோரிக்கைகள் வருமாறு:-   1* பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இன்னமும் தடுப்புக்காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்படல் வேண்டும்.   2* புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நாடாத்தப்படும் சிங்கள குடியேற்றங்கள் உடணடியாக நிறுத்தப்படல் வேண்டும்.   3* இடைக்கால அரசு நிறுவப்படும் வரை புனர்வாழ்வு என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்படல் வேண்டும்.   4) வடகிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.   5* இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில் ஊர்காவல் படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப்பெறப்பட்டு தமி்ழ்க்கிராமங்கள்

TAMIL Eelam news 71

 மரணதண்டனை விதிக்கப்பட்ட பிரமலால் ஜேயசேகர நாடாளுமன்றம் கலந்துகொள்ள முடியாது என அரசியல் யாப்பில் இருக்கின்றபோதிலும் ஏன் அவர் அனுமதிக்கப்பட்டார் என திரு சரத்பொன்சேகா கேழ்வி எழுப்பினார்? மேலும் அவர் கூறியதாவது மறண தண்டனை விதிக்கப்பட பிரமலால் ஜேயசேகர பாராளுமன்ற உறுப்பினராக அவர் சத்தியப் பிராணம் செய்துகொண்ட தை அடுத்து மேலும் பொன்சேகா குறிப்பிடும்போது 2010ம் ஆண்டு என்னை சிறைக்குள் தள்ளினார்கள் ஆட்ச்சியில் இருந்த ஜனாதிபதியின் உத்தரவிற்கு அமைவாகவே நான் அடபட்டேன். ஆனால் 30 மாதங்கள் நான் ஜெயல் தண்டனை அனுபவித்தேன்.அப்பொழுது நான் பாராளுமன்ற உறுப்பினராக வரமுடியவில்லை என தெரிவித்தார். மேலும் அவர் குறிப்பிடும்போது அக்காலப்பகுதியில் நான் பாராளுமன்றம் வர  முயிற்சி செய்தேன் அப்பொழுது சபாநாயகர் என்னை அனுமதிக்கவில்லை. இன் நிலையில் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஒரு குற்றவாளி சபாநாயகர் முன்நிலையில்  சத்தியப்பிரணம் செய்துகொண்டார். எனவே இது சட்டத்திற்கு முறனானது. நான் ஜெயலில் இருந்து விடுதலையான பின்னரே பாராளுமன்ற உறுப்பினாராக சபாநாயகர் முன்நிலையில் தான் சத்தியப் பிராணம் செய்துகொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.      

TAMIL Eelam news 70

 யாழில் காதல் பிரச்சனை தொடர்பாகத்தூக்கில்யிட்டு சாவடையும் இளைஞர்களின் தொகை முன்னரைவிட இப்பொழுது அதிகரித்துக் காணப்படுபவதாகத் தமிழ் புத்திஜீவிகள் கவலை வெளியிட்டுள்ளனர். மேலும் தெரியவருவதாவது நேற்ற்றைய தினம் மாதகல் நாவலர் பகுதியில் 32 வயதான இளைஞர் ஒருவர் தூக்கில் தோங்கிய நிலையில் சடலாமாக மீட்க்கப்பட்டுள்ளார். எனவே இப்பிரச்சனை தொடர்பாக ஆண் பெண் இருபாலரும் தற்கொலை செய்து தங்களின் உயிரை அளிப்பதாகவும் இருப்பினும் பெண்களை விட ஆண்களே கூடுதலாகச் சாவடைவதாக அங்குள்ளவர்கள் கருதுகின்றார்கள். இதுதொடர்வாக உளவியலாளர் பீற்றர் தெரிவிக்கும்போது ஆண் பெண் தொடர்பான பாலியல் பகுப்பு இவர்களிக்கு எடுப்பதின் ஊடாக அனைத்துப் பெண்களிற்கும் ஆண்களிற்கும் ஒரேவிதமான உறுப்பு என்பதை தெளிவுபடுத்தினால் இவர்களின் மனநிலையில் மற்றவர்களை கொலை செய்வதோ அல்லது தாங்கள் தற்கொலை செய்வதோ என அனைத்து விடயங்களில்யிருந்தும் இவர்களை விடுதலை செய்ய முடியும் எனவும் ஒரு பெண் விருப்பம்யில்லை என்றால் அவர் இலகுவான முறையில் மற்றப் பெண்னை தேர்ந்து எடுப்பதில் அவரின் மனம் பரந்தமனநிலையில் இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.