முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 170 தமிழர் பகுதியில் மாமியாரை அடித்துக் கொலை செய்த மருமகன்

 

தமிழர் பகுதியில் மாமியாரை அடித்துக் கொலை செய்த மருமகன்

தமிழர் பகுதியில் மாமியாரை அடித்துக் கொலை செய்த மருமகன் | Son In Law Who Beat His Mother In Law Death Batti
BatticaloaSri LankaSri Lanka Police InvestigationDeath
 8 hours ago
Kirushanthi

Kirushanthi

  •  
  •  
  •  
Follow us on Google News

 மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்படட வாகனேரி பகுதியில் மருமகனால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மாமியார் உயிரிழந்துள்ளார்.

குறித்த இந்த சம்பவம் நேற்றிரவு (23.02.2024) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாகனேரி கூளையடிச்சேனையைச் சேர்ந்த 45 வயதுடைய வைரமுத்து கோமதனி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் மகள் தொழில் வாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழர் பகுதியில் மாமியாரை அடித்துக் கொலை செய்த மருமகன் | Son In Law Who Beat His Mother In Law Death Batti

அதாவது உயிரிழந்தவரின் மகள் திருமணம் முடித்து இரு குழந்தைகள் உள்ள நிலையில் தொழில் வாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ளநிலையில் அவரது தாயாருடன் குழந்தைகள் மற்றும் அவரது கணவன் வாழ்ந்து வருகின்றனர்.

மருமகன் மதுபோதையில் மாமியாருடன் தினமும் சண்டையிட்டு வந்துள்ள நிலையில் சம்பவதினமான நேற்று இரவு மாமியார் வீட்டில் தனிமையில் இருந்துள்ள போது மது போதையில் வந்த மருமகனுக்கும் மாமியாருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது.

பின்னர் மாமியாரின் தலை மீது பாரிய பொருள் ஒன்றால் தாக்கியதையடுத்து அவர் உயிரிழந்துள்ளார்.


30 வயதுடைய மருமகன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் நீதிமன்ற அனுமதியை பெற்று சடலத்தை பிரேத பரிசோதனைக்கு வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?