முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 204 சமூக செயற்பாட்டாளர் சீற்றம்

 

சாந்தனின் இழப்புக்கு தமிழ் அரசியல்வாதிகளே காரணம்! சமூக செயற்பாட்டாளர் சீற்றம்

சாந்தனின் இழப்புக்கு தமிழ் அரசியல்வாதிகளே காரணம்! சமூக செயற்பாட்டாளர் சீற்றம் | Rajiv Gandhi India Murder Santhan Tamil Politician
JaffnaRajiv GandhiSri Lanka PoliticianSri LankaIndia
 7 hours ago
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 1991 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட சாந்தன் எனப்படும் சுதேந்திர ராஜாவுக்கு இறுதிவரை நீதி கிடைக்காமைக்கு, தமிழ் அரசியல்வாதிகளே காரணம் என காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களால் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் பேரவை எனும் அமைப்பின் உறுப்பினர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் குற்றம் சாட்டியுள்ளார். 

அரசியல் பிரச்சனையாக மாற்றப்பட்டு தீர்வு வழங்கப்பட வேண்டிய விடயம், சாதாரண பிரச்சினையாக கருதப்பட்டமையே இதற்கான காரணம் என ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போது அவர் கூறியுள்ளார். 

தமிழகத்தின் சென்னையில் நேற்று சாந்தன் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ள நிலையிலேயே,  ராஜ்குமார் ரஜீவ்காந்த் இதனை குறிப்பிட்டுள்ளார். 

தமிழ் அரசியல்வாதிகள்

மேலும் தெரிவித்த அவர், “சிறையில் இருந்த போதும், சாந்தன் விடுதலையான போதும் அவரை இலங்கைக்கு நாடு கடத்த இலங்கையில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் முயற்சிக்கவில்லை.

சாந்தனின் இழப்புக்கு தமிழ் அரசியல்வாதிகளே காரணம்! சமூக செயற்பாட்டாளர் சீற்றம் | Rajiv Gandhi India Murder Santhan Tamil Politician

ஈழத்தமிழர்களுக்காக யாழில் நடைபெறவுள்ள மாபெரும் பூப்பந்தாட்ட போட்டி!

ஈழத்தமிழர்களுக்காக யாழில் நடைபெறவுள்ள மாபெரும் பூப்பந்தாட்ட போட்டி!

அத்துடன், இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி தமிழ் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர் அண்மையில் இந்தியாவுக்கு பயணம் செய்திருந்தார்கள். எனினும், என்ன பயன்? 

சாந்தனை விடுதலை செய்ய யாரும் எந்த நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுக்களை முன்னெடுக்கவில்லை. 

தமிழ் மக்களின் பிரச்சினைகள்

இலங்கையில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள், தங்கள் தனிப்பட்ட தேவைகளுக்காக மாத்திரம் குரல் கொடுக்கிறார்கள். மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தவறியுள்ளனர்.   


சாந்தனின் பிரச்சினை மாத்திரமின்றி தமிழ் மக்களின் காணி பிரச்சினை உள்ளிட்ட பல நீண்ட கால சிக்கல்களை தீர்க்க அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

நான் தொடர்ந்தும் தமிழ் அரசியல்வாதிகளை குற்றம் சாட்டுகிறேன். இதன் பின்னணியில் அவர்களது குற்றம் மாத்திரமே காரணமாக உள்ளது“ என தெரிவித்துள்ளார்.Rajkumar Rajeevkanth

இந்தத் தோல்வியை அனைவரும் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள்.!
சாந்தன் அவர்களின் விடுதலை தொடர்பாக கடந்த இரண்டு வருடத்துக்கும் மேலாக அவரது தம்பி மதிசுதா போராடிக்கொண்டிருந்தார்.
பல முறை நான் அவருடன் கதைத்திருக்கிறேன், பல முயற்சிகள் போராட்டங்கள் பற்றியெல்லாம் பேசியும் ஏதோ ஒரு நம்பிக்கையில் அவர் காத்திருந்தார். என்னாலும் பெரிதாக எதுவும் செய்ய முடியவில்லை.
ஆனால் தொடர்ந்து இந்தப் பிரச்சினையை பேசிக்கொண்டிருந்தோம்.
The Hindu மற்றும் அல்ஜசீரா ஊடங்களில், அம்மாவின் வேதனை தொடர்பான செய்திகளை வர வைக்க முடிந்தது.
ஆனால் என்றோ இங்கு வந்திருக்க வேண்டியவர் எம் மக்களாலும் மக்கள் பிரதிநிதிகளாலும் முழுமையாக கைவிடப்பட்டார்.
அயல் நாடு இங்கு வந்து இசை நிகழ்ச்சியை நடத்துகிறது, ஜல்லிக்கட்டு நடத்துகிறது, வட கிழக்கில் ஏராளமாக முதலிடுகிறது, எம் பிரதிநிதிகள் மாமா மச்சான் உறவில் இருக்கின்றார்கள்.
இன்று வருந்தும் இத்தனை உள்ளங்களும் இதே ஆதரவை வெளிப்படையாக முன்னமே செய்திருக்க வேண்டும்.
வடக்கில் துணைத்தூதரகம் வைக்கும் அளவிற்கு அவர்களுக்கு தேவை இருக்கும் போது எமக்கு இருக்கும் அரசியல் கோரிக்கையை இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்க வேண்டும்.
இன்று அழுது என்ன பயன்?

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?