முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 124 சாய்ந்தமருது மாணவர்கள் இருவர் கடலில் மூழ்கி மாயம்

 

சாய்ந்தமருது மாணவர்கள் இருவர் கடலில் மூழ்கி மாயம்

சாய்ந்தமருது மாணவர்கள் இருவர் கடலில் மூழ்கி மாயம் | Two Students Of Sainthamaru Drowned In Nindaur Sea
AmparaSri LankaSri Lanka Police Investigation
 5 hours ago
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

அம்பாறை, மாளிகைக்காடு - சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் நிந்தவூர் பிரதேச கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று(16.02.2024) இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் 12 வயது சிறுமியை தகாத முறைக்க உட்படுத்திய மூவர் கைது

கொழும்பில் 12 வயது சிறுமியை தகாத முறைக்க உட்படுத்திய மூவர் கைது

தேடுதல் நடவடிக்கை

மாளிகைக்காடு - சாய்ந்தமருது எல்லை வீதியில் அமைந்துள்ள பாடசாலையில் கல்வி கற்கும் 13 - 15 வயதுக்குட்பட்ட 8 மாணவர்கள் நேற்று(16) ஜும்மா தொழுகையை முடித்துக்கொண்டு சைக்கிள்களில் நிந்தவூர் - ஒலுவில் எல்லை கடற்கரைக்குச் சென்றுள்ளனர்.


இதன்போது கடலில் இறங்கி படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது மாலை 4.20 மணியளவில் அதில் இருவரைக் கடலலை உள்ளிழுத்துச் சென்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணை

இதன்படி கடலில் இழுத்துச் செல்லப்பட்டுக் காணாமல்போன மாணவர்கள் இருவரையும் சம்பவத்தைக் கேள்வியுற்ற நிமிடம் முதல் கடற்றொழிலாளர்களும், பொதுமக்களும் இணைந்து தேடுதலை முன்னடுத்துவருவதாக கூறப்படுகிறது.

சாய்ந்தமருது மாணவர்கள் இருவர் கடலில் மூழ்கி மாயம் | Two Students Of Sainthamaru Drowned In Nindaur Sea

இந்நிலையில், ஏனைய 6 மாணவர்களையும் நிந்தவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளுக்காகப் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?