முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

TAMIL Eelam news 680

 யாழில் அதிகாலையில் இடம்பெற்ற கோர சம்பவம்- இராணுவத்தினர் பலர் வைத்தியசாலையில்!   யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திப் பகுதியில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இன்று அதிகாலையிலேயே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், இராணுவத்தினர் 15 பேர் வரையில் காயம் அடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமும் இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற கன்ரர் வாகனமும் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது காயமடைந்த இராணுவத்தினர் 15 பேரும் யாழ்.போதனா வைத்தியசாலையின் 24ஆம் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் சேதமடைந்த இராணுவ வாகனம் பலாலி இராணுவ முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை இராணுவ அதிகாரிகளும் பொலிஸாரும் மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

TAMIL Eelam news 679

 மாணவி மரணத்தில் திடீர் திருப்பம்; உருக்கமான கடிதம் சிக்கியதால் பரபரப்பு! காதலனுடன் வீடியோ காலில் பேசிக்கொண்டே நர்சிங் மாணவி தற்கொலை செய்து கொண்டார். சாவதற்கு முன்பு அவர் எழுதி வைத்த உருக்கமான கடிதம் சிக்கியதால், இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.   நாகர்கோவில்குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியை சேர்ந்தவர் பிராட்வின் மிபியா (வயது 21). நெல்லை மாவட்டம் ஏர்வாடி பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் நர்சிங் பயிற்சி மாணவியாக மிபியா பணியாற்றினார். இந்தநிலையில் மிபியா, ஒருவரை காதலித்து வந்துள்ளார். சம்பவத்தன்று தன்னுடைய காதலனை, வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, தான் தூக்குப்போட்டு தற்கொலை செய்ய போவதாக காதலனிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த காதலன், செய்வதறியாமல் திகைத்தார். அதே சமயத்தில் வீடியோ காலில் பேசிக்கொண்டே மிபியா தூக்கு கயிறை மாட்டியதாகவும் தெரிகிறது. பதறிபோன காதலன், அவருடைய நண்பரை தொடர்பு கொண்டு மிபியாவை எப்படியாவது காப்பாற்றும்படி கதறி அழுதுள்ளார். ஆனால் மிபியாவை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்

TAMIL Eelam news 678

 கார்பன் உமிழ்வைக் குறைக்க நியூசிலாந்தின் வழியைப் பின்பற்றுங்கள்! உலக பருவநிலை உச்சி மாநாடு’ காணொலிக் காட்சி மூலமாக 2 நாட்கள் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்ததன் பேரில் 40க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பருவநிலை மாறுபாடு காரணமாக உலக நாடுகள் சந்தித்து வரும் சவால்கள் குறித்து அனைவரும் உரையாற்றினர். இந்த உச்சி மாநாட்டில் பேசிய நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா, உலக வெப்பமயமாதலை தடுப்பதற்கு கார்பன் உமிழ்வை குறைக்க நியூசிலாந்தின் வழியை உலக நாடுகள் பின்பற்ற வேண்டும் என அழைப்பு விடுத்தார். மேலும் கார்பனை விலை நிர்ணயம் செய்யவும், காலநிலை தொடர்பான நிதி வெளிப்பாடுகளை கட்டாயமாக்கவும், புதைபடிவ எரிபொருள் மானியங்களை முடிவுக்குக் கொண்டுவரவும் உலக நாடுகளின் தலைவர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஜெசிந்தா ஆர்டெர்ன் வலியுறுத்தியுள்ளார்.

TAMIL Eelam news 677

 ஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ள ஈரானிய அகதி ஆஸ்திரேலிய குடிவரவுத் தடுப்பு முகாமில் சுமார் 5 ஆண்டுக்காலம் வைக்கப்பட்டிருந்த நிலையினால் இன்றும் மன நலச் சிக்கல்களுக்கு ஆளாகி வருவதாக ஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ள ஈரானிய அகதி Payam Saadat தெரிவித்திருக்கிறார். இதனால் சுரங்கப்பாதைத் தோண்டி தடுப்பிலிருந்து தப்பிக்க அவரும் பிற அகதிகளும் முயன்றிருந்தாக நீதிமன்றத்திடம் அவர் தெரிவித்திருக்கிறார். இவர்கள் சுரங்கப்பாதைத் தோண்டியது பின்னர் கண்டறியப்பட்ட போதிலும், அதற்கு முன்னதாக 4 வாரங்கள் வரை சுரங்கப் பாதைத் தோண்டியதை நீதிமன்றத்திடம் ஈரானிய அகதி குறிப்பிட்டிருக்கிறார். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவை வந்தடைந்த ஈரானிய அகதியான Payam Saadat, ஆஸ்திரேலிய தடுப்பில் வைக்கப்பட்டிருந்த 5 ஆண்டுக்காலத்தில் பல்வேறு இன்னல்களை சந்தித்ததாகவும் அதன் தொடர்ச்சியாக மனநலச் சிக்கல்களை இன்றும் எதிர்கொண்டு வருவதாக தெரிவித்திருக்கிறார். 29 நாட்கள் படகு வழிப் பயணம் மூலம் ஆஸ்திரேலியாவை அடைந்த அவர், 2000 முதல் 2002 வரை மேற்கு ஆஸ்திரேலியாவின் Curtin குடிவரவுத் தடுப்பில் வைக்கப்பட

TAMIL Eelam news 676

 இதயம் நொறுங்குகிறது; கோபம் வருகிறது..!’ கண்ணீர் விடும் ராதிகா சரத்குமார் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ள நடிகை ராதிகா சரத்குமார் அந்த வீடியோ குறித்து உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தனது மகனை நடு ரோட்டில் படுக்கவைத்த தாயின் பரிதாப நிலை குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.   இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை நாளுக்கு நாள் உச்சம் பெற்று வரும் நிலையில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3.5 லட்சத்தை நெருங்கியுள்ளது. இனால் நாடு முழுவதும் உள்ள கொரோனா மருத்துவமனைகள் நோயாளிகளின் வருகையால் நிரம்பி வழிகிறது. இதனால் பல மாநிலங்களில் பல்வேறு கட்டப்பாடுகள் இரவு மற்றும் முழு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றின் வீரியல்அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் பல பகுதிகளில் மருத்துவமனை வசதி இல்லாமலும், அப்படியே மருத்துவமனை வசதிகள் இருந்தாலும், அங்கு மருந்து மற்றும் பெட் வசதிகள் இல்லாமல் மக்கள் பெரும் துன்பத்திற்கு அளாகி வரும் சமூகவலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. பரிதாபமான இந்த கட்சிகளில் மருத்துவ உதவி கேட்டு ப

TAMIL Eelam news 675

 முல்லைத்தீவில் நடந்த பாரிய வெடிப்புச் சம்பவம்; ஒருவர் பலி! விசாரணை தீவிரம்   முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்க்குட்பட்ட வட்டுவாகல் பாலத்திற்கருகில் உள்ள காணி ஒன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வட்டுவாகல் பாலத்திற்கு அண்மையாகவுள்ள காணி ஒன்றில் இந்த வெடிப்புச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றிருக்கின்றது. மேலும் இந்த வெடிப்புச் சம்பவம் எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றது. அத்தோடு இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், குறித்த வெடிப்பு சம்பவம் காரணமாக சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்ததோடு மற்றவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளார். மேலும் இச் சம்பவத்தில் உயிரிழந்தவர் செல்வபுரம் முல்லைத்தீவைச் சேர்ந்த 19 வயதுடைய குமாரசாமி சந்திரமோகன் டிசான் எனவும் காயமடைந்த நபர் வட்டுவாகல் முல்

TAMIL Eelam news 674

 விடுதலை தேசம் ஒன்று மலர்ந்தால் மறுபடியும் உன் மகனாய் நான் பிறப்பேன் அழாதே அம்மா விதை குழியில் இருந்து என்னால் உன் விழி நீர் துடைக்க முடியவில்லை அழாதே அம்மா கருவறையில் சுமந்தாய் பத்து மாதம் தவமிருந்தாய் பத்திரமாய் என்னை நீ வளர்த்தாய் சுமையென்று நீயும் என்ன எண்ணியதில்லை அழாதே அம்மா நான் வளர்கின்ற போது பகையின் வஞ்சனை நான் அறிந்தேன் உன்னை போல் பல அம்மாக்களின் விழிகளில் கண்ணீரும் செந்நீரும் வடிவதை கண்டேன் அழாதே அம்மா தலைவரின் வழியிலே பலரின் விழி நீர் துடைத்திட களத்திலே ஆயுதம் ஏந்தி தலை நிமிர்ந்து நானும் புலியென நடந்தேன் அழாதே அம்மா ஈழ விடுதலைக்கு தானே நானும் களத்திலே உயிர் நீத்தேன் அம்மா விதை குழியில் உறங்குகின்றேன் என்ன போல் பல பிள்ளைகள் இங்கே உறக்கம் கொள்கின்றார்கள் அழாதே அம்மா துயில்கின்ற வீரரின் உறக்கத்தை கலைத்து விடாதே நீயும் அழுது அம்மா விடுதலைக்காய் மடிந்த உன் மகன் வீரன் என்று நீயும் பெருமை கொள்ளு தாயே அழாதே அம்மா விதை குழியில் இருந்து என்னால் எழமுடிய வில்லை விடிகின்ற தேசத்தில் விடுதலை வீரனாய் நானிருப்பேன் என்றும் உன் நினைவுகளிலே நானும் கலந்திருப்பேன் அழாதே அம்மா விடுதலை தேசம் ஒன்று