முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

TAMIL Eelam news 673

 அடுத்த மகாராணியாராக கேட் மிடில்டன் தான் வர வேண்டும்.. அரச குடும்பத்தின் உறவினர் கருத்து பிரிட்டன் அரச குடும்பத்தில் காலடி எடுத்து வைத்து முழுமையாக அனைத்தையும் எந்த அளவிற்கு எளிதில் நாசமாக்க முடியும் என்பதை மேகனை பார்த்தால் தெரியும். இதற்கு அப்படியே எதிராக இருப்பவர் கேட். இவர் இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கு நடைபெறும் போது வாகனத்தின் ஜன்னல் வழியே கருப்பு நிற உடை அணிந்து இருந்தார். அப்போது அவரது கண்கள் அரச குடும்பத்தில் பிறந்த இளவரசிகளை விட மிகுந்த கம்பீரத்துடன் தோற்றமளித்தது.   அதற்கு அந்த புகைப்படம் தான் சாட்சி. இதுமட்டுமல்லாமல் இறுதி சடங்குகள் முடிவடைந்த பிறகு தேவாலயத்திலிருந்து திரும்பும் சமயத்தில், தன் அன்பு சகோதரனாக நினைக்கும் ஹரியிடம் அவராகவே சென்று பேசியதோடு மட்டுமல்லாமல், சகோதரர்கள் இருவரையும் பேச வைத்தார். அதன் பிறகு சற்று பின் தள்ளி நின்றுவிட்டார்.

TAMIL Eelam news 672

 நியூஸிலாந்து பயண ஏற்பாட்டை பயன்படுத்தி வேறு நாடுகளுக்குச் செல்லும் ஆஸ்திரேலியர்கள்! ஆஸ்திரேலியாவுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான - தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளற்ற - பயணம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதைப் பயன்படுத்தி சில ஆஸ்திரேலியர்கள், நியூஸிலாந்திற்கு சென்று அங்கிருந்து வெளிநாடுகளுக்குப் பயணிக்கும் சம்பவங்கள் ஆரம்பித்திருக்கின்றன. இதனையடுத்து, இவ்வாறான பயணம் குறித்து ஆஸ்திரேலிய சுகாதார அமைச்சர் Greg Hunt கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஆஸ்திரேலிய - நியூஸிலாந்து பயணம் தொடர்பாக இருநாடுகளும் கையாண்டிருக்கும் போக்குவரத்து ஏற்பாட்டிலுள்ள துவாரத்தைப் பயன்படுத்தி அதன்வழியாக தப்பிக்கும் முயற்சிகளை மேற்கொள்ளும் ஆஸ்திரேலிர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும்  தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து நாடுகளில் கோவிட் தொற்று கிட்டத்தட்ட முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், இரண்டு நாடுகளுக்கும் இடையில் தனிமைப்படுத்தலற்ற பயணம் கடந்த 19 ஆம் திகதி முதல் ஆரம்பமாகியுள்ளது. ஆஸ்திரேலியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்ட பலர், இந்தப்பபய

TAMIL Eelam news 671

 நிர்**ண வீடியோவை வைத்து மிரட்டும் கும்பல்.. சித்ராவை போல் கதறும் செம்பருத்தி சீரியல் ஜெனிபர் செம்பருத்தி சீரியல் நடிகை ஜெனிஃபர் விவாகரத்தான பின் இரண்டாவதாக காதலித்த நபர் கொடுமைப்படுத்துவதாக பத்திரிகையாளர்களை சந்தித்து நியாயம் கேட்டுள்ளார். அதாவது அரை நிர்**ண வீடியோவை வைத்து மிரட்டுவதாகவும் கும்பலாக வந்து குடும்பத்தை தாக்கியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.   இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஏற்கனவே சீரியல் நடிகை சித்ரா இதுபோன்ற பிரச்சினைகள் இருந்ததால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAMIL Eelam news 670

 வல்வெட்டித்துறையில் கடற்புலிகளினுடையது என நம்பப்படும் ஆயுத தொகுதி மீட்பு!  தமிழீழ விடுதலைப் புலிகளின் தயாரிப்பிலான வெடிபொருள்கள் பொலிகண்டியில் மீட்கப்பட்டுள்ளன என்று வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர். சனிக்கிழமை பொலிகண்டி புதுவளவு என்ற இடத்திலேயே இந்த வெடிபொருள்கள் மீட்கப்பட்டுள்ளன. வெடிபொருள்களை செயலிழக்க வைப்பதற்கான தொழில்நுட்பத் திறன் தொடர்பில் கண்டறியப்படதா நிலையில் சிறப்பு அதிரடிப்படையின் உயர்மட்டப் பிரிவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் வருகைக்காக காத்திருப்பதாகவும் வல்வெட்டித்துறை பொலிஸார் குறிப்பிட்டனர்.   யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறை – பொலிகண்டி பிரதேசத்தில் மண்ணில் புதைத்து மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கடற்புலிகளினுடையது என நம்பப்படும் ஒரு தொகுதி ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அருவி இணையத்தின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். இராணுவப் புலனாய்வத் துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வல்வெட்டித்துறை – பொலிகண்டி பிரதேசத்தில் உள்ள நிலப்பகுதியில் அகழ்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

TAMIL Eelam news 669

 இலங்கையில் அதிகமான இளைஞர்கள் கொவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் இலங்கையில் கொவிட் -19 வைரஸால் அதிகமான இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளமை இப்போது கண்டறியப்பட்டுள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார் . தொடர்பு மூலம் கொரோனா தொற்று பரவுவதற்கு அப்பால் தற்போது காற்றின் மூலமும் இத்தொற்று பரவுவதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கொரோனா வைரஸின் புதிய திரிபானது சிரேஷ்ட பிரஜைகள் மட்டுமல்ல இளைஞர்களையும் பாதிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார் . இளைஞர்களிடையே வைரஸ் பரவுவதால், இளைஞர்களுக்கு ‘ஸ்பூட்னிக் வி’ தடுப்பூசியைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் கூறுகிறது. கொரோனா வைரஸின் புதிய திரிபு இலங்கைக்குள் நுழைந்துள்ளது. முந்தைய திரிபு ஒன்று அல்லது இரண்டு நபர்களுக்கு பரவக்கூடியது என்பதுடன் புதிய திரிபானது ஒருவரிலிருந்து 5-6 பேர் வரை பரவக்கூடியது என பேராசிரியர் நீலிகா மாளவிகே தெரிவித்துள்ளார்.

TAMIL Eelam news 668

 யாழில் கர்ப்பிணிப்பெண்உயிரிழப்பு - கணவனை கைது செய்ய உத்தரவு  எரிகாயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 8 மாதம் நிரம்பிய கர்ப்பிணிப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பெண் மண்ணெண்ணை ஊற்றி தன்னைத் தானே எரியூட்டினார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்ட போதும் அவரது உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதால் கணவனைக் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார், பொலிஸாருக்கு பணித்தார். உடுப்பிட்டியைச் சேர்ந்த சிந்துயன் ரிசிக்கா (வயது-19) என்ற பெண்ணே உயிரிழந்தார். திருமணமாகிய ஒருவருடம். அவர் 8 மாதம் நிரம்பிய கர்ப்பிணிப்பெண். கடந்த 17ஆம் திகதி அவரது உடலில் மண்ணெண்ணை ஊற்றி எரியூட்டப்பட்ட எரிகாயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். கடந்த 6 நாள்களாக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். சம்பவம் தொடர்பில் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார். அவரது உடலில் தீ காயங்கள் ஏற்பட்டமையில் சந்தேகம் இருப்பதாகவும் கணவனை கைது செய்து நீதிமன்றில் முற்படுத

TAMIL Eelam news 667

   யாழில் குளம் ஒன்றில் குளிக்கச் சென்ற நபருக்கு நேர்ந்த பரிதாபம்! யாழ்ப்பாணம் - அரியாலை - நாவலடி, குளம் ஒன்றில் குளிக்கச் சென்றவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பிரதேசத்தை சேர்ந்த பிரதீபன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றர்.