முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

TAMIL Eelam news 133

 27/11/ 2020 அன்று குயின்ஸ்லாந்து மாநிலத்தில் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நடைபெற்றது அதில் மாவீரர்களின் இலக்சியம் தொடர்பாகவும் அவர்களின் உணர்வு சிங்களவர்களின் அடக்குமுறை தலைவரின் போராட்டம் என்பன தொடர்வாக அவ் மாணவி ஆற்றி உரை மிகவும் முக்கியமானது. தொடர்ந்து எமது இளைய தலைமுறையினர் எமது இனரீதியான போராட்டம் தொடர்பாக வெளிநாடுகளில் வாழும் அனைத்து மக்களிற்கும் தெளிவுபடுத்த வேண்டிய கடமை உள்ளது என்பதை எவரும் மறந்துவிடக்கூடாது. அவரை ஊட்டி வளர்த்த பெற்றோர்களிற்கு எமது நன்றிகள்.                                                                       k.nimal

TAMIL Eelam news 132

 விடுதலைப்புலிகள் பத்திரிகையும் தேசத்தின் குரலும்…! பிரேமதாசா அரசுடனான பேச்சுவார்த்தை முறிவடைந்து 1990 யூனில் மீண்டும் போர் வெடித்த போது “தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்கள் யாழ்ப்பாணத்தில் வசிக்கத் தொடங்கினார். அன்றிலிருந்து சிறிநீரக மாற்றுச் சிகிச்சைக்காகக் கடல்வழி மூலம் பாலா அண்ணை வெளிநாடு செல்லும் வரை அவர் தமிழீழத்திலேயே வசித்தார். பாலா அண்ணை தாயகத்தில் வசித்த சுமார் 10 ஆண்டு காலம் முழுவதும் தனது பல்வேறு வேலைகளுக்கு மத்தியிலும் எமது இயக்கத்தின் உத்தியோகபூர்வ ஏடான “விடுதலைப்புலிகள்” பத்திரிகையின் வழிகாட்டியாக இருந்து பல்வேறு வழிகளில் உதவினார். விடுதலைப்புலிகள் பத்திரிகை சிறப்பான வகையிலும், அரசியல் மற்றும் இராணுவ விடயங்களைத் தாக்கமிகு வகையிலும் எடுத்துச் சொல்வதற்கு எமது ஏட்டின் வாயிலாக கருத்துப்பரப்புரை செய்த காலப்பகுதியில் பாலா அண்ணையின் ஆலோசனைகளும், உதவிகளும் பத்திரிகையின் வளர்ச்சிக்கும் – வெற்றிக்கும் உறுதுணை புரிந்தன. போரோ! சமாதானமோ! எதுவாக இருந்தாலும் அந்த அந்தக் காலப் பகுதியில் – அந்தந்த விடயங்களுக்கு ஏற்ப தலைவரின் கருத்தை – விளக்கங்களை எமக்குத் தெளிவுபடுத்தி இயக்கத்தின்

TAMIL Eelam news 131

 மாவீரர் நாளில் தமிழர்தேசம் வகுத்துக் கொள்ள வேண்டியது என்ன? பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது செய்தி! இறைமை தமிழ்மக்களின் கைகளில் இருக்கின்றது என்ற நோக்குநிலையுடன்,  இலங்கைத்தீவில் சிறிலங்கா அரசை மட்டும் மையம் கொண்டிருக்கும் வல்லரசுகளின் ஆட்டத்தை தடுத்து நிறுத்தும் வகையில்,   அனைத்துலக உறவுக் கொள்கை ஒன்றை தமிழர் தேசம் வகுத்துக் கொள்ளவேண்டும் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் தனது மாவீரர் நாள் செய்தியில் தெரிவித்துள்ளார். இதேவளை மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் உரிமையினையும் மறுக்கும் சிங்கள அரசுடன் உரையாடி, பேச்சுவார்த்தைகளை நடாத்தி உரிமைகளை வென்றெடுக்க முடியும் எனத் தமிழர் தலைவர்கள் எவரும் காத்திருப்பார்களேயானால் இவர்களின் நிலை இலவு காத்த கிளிகளின் கதை போல்தான் இருக்கும் எனவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடைக்கு நீக்கத்தின் அவசியம், இறுகிவரும் சிங்கள பௌத்த பேரினவாதத்தை எதிர்கொள்ளல், சர்வதேசத்தின் நலன்சார் அரசியலை கையாளுதல், தமிழர் தேசத்துக்கான வெளியுறவுக் கொள்கை என இம்மாவீரர் நாளில் தமிழர் தேசம் வகுத்துக் கொள்ள வேண்டிய அரசியல் இராஜ

TAMIL Eelam news130

 அவுஸ்திரேலியாவில் உள்ள QLD மானிலத்தில் புலம்பெயர் தமிழர்களால் தமிமீழத் தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27/2020 பிற்பகல் ஐந்து மணிக்கு ஆரம்பித்து 8.30 மணிக்கு அனைத்து நிகள்வுகளும் நிறைவு செய்யப்பட்டது குறிப்பாக இளைய தலைமுறையினர் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள். அதைவிட இங்கே உள்ள அவுஸ்திரேலியா மக்களும் தமிழர்களுக்கு சார்பாக தங்களின் ஆதரவை விளிப்படுத்தினர்கள். எனவே அவர்களுக்கும் எமது இணையம் சார்வாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம் கீழே நிகழ்வுகளை உலகத் தமிழர்கள் பார்க்கலாம்                                                                     நன்றி.K.NIMAL

TAMIL Eelam news 129

 பேரன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய புலம்பெயர் வாழ் தமிழீழ மக்களே இன்றைய நாள் எமது சுதந்திர தமிழீழ விடுதலைக்காக தங்களை அற்பணித்த புனிதர்களை வணங்கும் நினைவு நாள். தமிழீழத்தின் விடுதலைக்காக எமது வளிகாட்டிபான மேதகு தலைவர் அவர்களின் சுய ஒழுக்கம் கட்டுப்பாடுகளை ஏற்று கடினமான பயிற்சிகளைப் பெற்று பலமுறை எதிரிகளோடு சமர் ஆடி  விழுப்புண் அடைந்து இருந்தபோதிலும் தொடர்ந்து தனது சாவின்போது ஒரு சாதனை இருக்க வேண்டும் என்ற ஆழமான உணர்வோடு கரும்புலியாக வேவுப்புலியாக பல வடிவங்களாகச் சென்று தங்களின் உயிரை அறிப்பணித்தவர்கள்தான் இந்த மாவீரர்கள்' எமது விடுதலைப் போராட்டத்தில் ஆண் பெண் இருபாலரும் சமத்துவமாகப் போராடி தாய் நாட்டின் விடுதலைக்காக தக்களின் உயிரை அற்பணித்த பெருமையை எமது தமிழீழ  மண் பெற்றுள்ளது. எனவே மாவீரர்களை பெற்று எதிரிககளின் இன அடக்குமுறைக்கு எதிராகப் போராட தங்களின் பிள்ளைகளை உபந்தளித்த எமது பெற்றோர் ஆகிய நீங்கள் சந்ததி சந்ததியாக சிரம் தாழ்த்தி கெளவ்ரிவிக்கப்பட வேண்டியவர்கள். தலைமுறை தலைமுறையாக இந்த மாவீரர்களின் தியாகங்களிற்குப் பின்னால் உங்களுடைடைய பெயரும் இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தே இ

TAMIL Eelam news128

 புரொண்ட்லைன் சஞ்சிகைக்கு தமிழீழ தேசிய தலைவர் 1987 ம் ஆண்டு வழங்கிய பேட்டி. எனது இறுதி சொட்டு இரத்தம் இருக்கும் வரை என் தாய் நாட்டின் விடுதலைக்காக போராடுவேன் என்று என் மேசையில் எழுதியிருப்பேன் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் ஒரு முக்கிய பங்கை வகித்தவர். இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதற்கு முன்னர் பிரபாகரன் டெல்லிக்கு அழைக்கப்பட்டிருந்தார். அப்போது அவர் தனது எண்ணக்குமுறல்களையும் எதிர்ப்புகளையும் வெளிப்படுத்தினார். பிரபாகரன் டெல்லியில் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை சந்தித்து நிலைமைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளதுடன் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் யாழ்ப்பாணம் திரும்பினார். ஆகஸ்ட் மாதம் 4 ம் திகதி தலைவர் பிரபாகரன் ஆற்றிய உரை பரவலான கவனத்தை ஈர்த்திருந்தது. விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு குறித்தும் ஒப்பந்தத்தினை பற்றி திருப்தியின்மையையும் வெளியிட்டுள்ளார். அத்துடன் விடுதலைப் புலிகளுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நெருக்கமான உறவையும் அன்பையும் தெளிவாக எடுத்துரைத்தார். இந்தியா மீது கொண்டுள்ள அன்பின் நிமித்தமே இந்திய அமைதி காக்

TAMIL Eelam news 127

 வயதுடன் வளர்ந்த இலட்சிய உறுதி தமிழரின் மண்ணை மீட்கப் புலிக்கொடி ஏற்றிப் புதுவீரம் நிலைநாட்டி, தமிழ் வீரத்தை எமது சந்ததியினருக்கு மீளவும் காட்டி, தொடர் வெற்றிகள் பலவற்றிற்கு உரமூட்டி, தமிழரின் உரிமைப் போரிற்குத் தலைமை தாங்கி, ஒரு தேசிய இனத்தின் தன்னிகரற்ற தலைவனாக மதிக்கப்பட்டு, இன்று பொன்விழா கொண்டாடிடும், எனது மதிப்பிற்கும், அன்பிற்கும் உரிய தமிழ் தேசியத் தலைவன் தம்பி பிரபாகரன் பற்றி நான் வெளிநாடுகளில் இருந்து வியந்து அவதானித்தவற்றில் சிலவற்றை, அவரின் பொன்விழா சம்பந்தமாக வெளியிடப்படும் இந்த மலரில் பதிவு செய்வதற்கு நான் பாக்கியம் பெற்றிருப்பதோடு, பெருமிதம் அடைய வேண்டியவனாகவும் இருக்கின்றேன். தம்பி பிரபாகரன் 1954ல், பிறந்த வல்வெட்டித்துறைக்கு அருகாமையில் உள்ள ஊரில், அவர் பிறப்பதற்கு சில வருடங்கள் முன்னர் பிறந்த ஒருவன் என்ற முறையிலும், 1970ம் ஆண்டு நான் பேராதனைப் பல்கலைக்கழகம் புகுவதற்கு ஆயத்தமாகின்ற வேளையிலே, தமிழ் மாணவர் பேரவையின் அங்குரார்ப்பண பகிரங்க நிகழ்ச்சியான மௌன ஊர்வலத்தில் (திருநெல்வேலிச் சந்தையடியில் ஆரம்பமாகி, யாழ் GREEN FIELD மைதானத்தில் முடிவடைந்த பொதுக்கூட்டத்தில்) கறுப்பு