இலங்கையில் திடீரென அதிகரித்துள்ள துப்பாக்கி கலாசாரம் - இரண்டு மாதங்களில் 23 பேர் பலி
இலங்கையில் கடந்த மே மாதம் 30ஆம் திகதி முதல் இன்று வரை 23 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பதிவாகியுள்ள துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் மொத்தம் 23 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி நிஹால் தல்துவா தெரிவித்தார்.
போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளே பெரும்பாலான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களின் பின்னணியில் இருப்பதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.
நேற்றைய தினம் மாத்திரம் மூன்று துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் அதில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் கல்கிஸ்ஸை நீதிமன்றத்திற்குள் வைத்தும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
அத்துடன், லுனுகம்வெஹேர மற்றும் அஹங்கம ஆகிய பகுதிகளில் நேற்று இடம்பெற்றிருந்த இருவேறு துப்பாக்கி பிரயோகங்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
போர் விமானத்தை சுட்டுவீழ்த்த முயன்ற சீன கப்பல்! (Photo) சீன போர்க்கப்பல் அவுஸ்ரேலியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தும் நோக்கில் அந்த விமானத்தின் மீது லேசர் ஒளியை பாய்ச்சியதாக அவுஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியது. வடக்கு அவுஸ்ரேலியாவின் அரபுரா கடலில் சீன கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இது போர் விமானத்தில் இருந்த வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும் அவுஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக சீனா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் அவுஸ்ரேலிய போர் விமானம் மீது லேசர் ஒளியை பாய்ச்சியது சீனாவின் மிரட்டல் நடவடிக்கை என கூறி அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாத்தியம் உள்ளது. இது ஒரு மிரட்டல் செயலே தவிர வேறு ஒன்றுமில்லை. இதுபோன்ற மிரட்டல் செயல்களை அவுஸ்ரேலியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது’’ என்று கூறினார்.
கருத்துகள்