ஐரோப்பிய நாடொன்றுக்குள் செல்ல முயன்ற 10 இலங்கையர் அஸர்பைஸானில் கைது
ஐரோப்பிய நாடொன்றுக்குள் செல்ல முயன்ற 10 இலங்கையர்களை கைது செய்துள்ளதாக அஸர்பைஸான் அரசாங்கம் அறிவித்துள்ளது.
கடந்த ஜூலை 25 மற்றும் 29 ஆகிய திகதிகளில் சுற்றுலாப் பயணிகளாக இவர்கள் நாட்டின் எல்லைக்கு அதிகாரபூர்வமாக சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடொன்றுக்குள் செல்ல முயன்ற 10 இலங்கையர் அஸர்பைஸானில் கைது | 10 Sri Lankans Arrested In Azerbaijan
இவ்வாறு சென்றவர்கள் அலிர்சா என்ற ஈரானிய குடிமகனுடன் ஐரோப்பிய நாடு ஒன்றுக்குள் செல்வதற்காக அஸர்பைஸான் எல்லையை கடந்து துருக்கிக்குள் பிரவேசிக்க முயன்றுள்ளனர்.
இதன்போதே கடந்த ஓகஸ்ட் 12 ஆம் திகதி அன்று மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
போர் விமானத்தை சுட்டுவீழ்த்த முயன்ற சீன கப்பல்! (Photo) சீன போர்க்கப்பல் அவுஸ்ரேலியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தும் நோக்கில் அந்த விமானத்தின் மீது லேசர் ஒளியை பாய்ச்சியதாக அவுஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியது. வடக்கு அவுஸ்ரேலியாவின் அரபுரா கடலில் சீன கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இது போர் விமானத்தில் இருந்த வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும் அவுஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக சீனா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் அவுஸ்ரேலிய போர் விமானம் மீது லேசர் ஒளியை பாய்ச்சியது சீனாவின் மிரட்டல் நடவடிக்கை என கூறி அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாத்தியம் உள்ளது. இது ஒரு மிரட்டல் செயலே தவிர வேறு ஒன்றுமில்லை. இதுபோன்ற மிரட்டல் செயல்களை அவுஸ்ரேலியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது’’ என்று கூறினார்.
கருத்துகள்