கடல் வழியாக வெளிநாடு செல்ல முற்பட்டவர்கள் யாழில் மடக்கி பிடிப்பு (படங்கள்)
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பகுதியில் இருந்து வெளிநாடு செல்ல முற்பட்ட 17 பேர் இன்றைய தினம் திங்கட்கிழமை பருத்தித்துறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 15 பேர் சிலாபம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், இருவர் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் குழுவொன்று நடமாடுவதாக பருத்தித்துறை காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.
ஆரம்பகட்ட விசாரணை
கடல் வழியாக வெளிநாடு செல்ல முற்பட்டவர்கள் யாழில் மடக்கி பிடிப்பு (படங்கள்) | Illegal Immigration Sri Lanka Jaffna To Abroad
கைது செய்யப்பட்டவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் அவர்கள் சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாடொன்றுக்கு செல்ல முற்பட்டதாக தெரியவந்துள்ளது.
அதனை அடுத்து அவர்களை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
e 129 இப்படியான அறிக்கை வந்தால் சீனா காப்பல் இலங்கையில் நிக்கின்றது என்பது அதின் பொருள் அறிக்கை வரவில்லை என்றால் இலங்கைக்குப் கப்பல்போகவில்லை ஆனால் இத்திய அமைதியாக இருக்கிறது என்பது அதின் பொருள்?
துவாரகா தொடர்பாக விடுதலைப் புலிகளின் பெயரில் வெளிவரும் பொய் அறிக்கைகள்!! விலை போபவர்களின் தொகை அதிகரிப்பு, By Gokulan 2 மணி நேரம் முன் 0 SHARES விளம்பரம் அண்மைக்காலமாக விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறையின் பெயரிலும், அந்த அமைப்பின் வேறு சில கட்டமைப்புகளின் பெயர்களிலும் வெளியிடப்பட்டுவருகின்ற 'போலி' அறிக்கைகள் புலம்பெயர் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி வருவகின்றன. குறிப்பாக தலைவர் பிரபாகரன், அவரது மனைவி மற்றும் மகள் துவாரகா போன்றோர் உயிருடன் இருப்பதாகக் கூறி அந்தப் போலி அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு சமூக ஊடகங்கள் மத்தியில் உலாவ விடப்பட்டு வருகின்றன. ஊடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற அந்த அறிக்கைகளில் இடப்பட்டுள்ள கையொப்பங்களுக்கு உரியவர்களை உறுதிப்படுத்தத் தொடர்புகொண்டபோதுதான் அந்த அறிக்கைகள் அனைத்தும் போலியானவை என்று தெரியவந்தது. புலம்பெயர் தமிழ் மக்களை ஒரு குழப்பநிலைக்குள் வைத்திருக்கும் நோக்கத்துடனும், ஒரு முக்கியஸ்தர்களினது இருப்புத் தொடர்பான ஒரு போலி பிம்பத்தைக் கட்டமைக்கும் நோக்கத்துடனும், புலம்பெயர் மக்களைக் குறிவைத்து ஒரு சதி நகர்வொன்றை மேற்கொள்ளும் ந
கருத்துகள்