முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 780 கூட்டமைப்புக்குள் துரோகிகள்.ரணில்

கூட்டமைப்புக்குள் துரோகிகள்... நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன் பகிரங்கப்படுத்திய ரணில்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பானது ஜனாதிபதி செயலகத்தில் இன்று புதன்கிழமை (03-08-2022) இடம்பெற்றுள்ளது. கூட்டமைப்புக்குள் துரோகிகள்... நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன் பகிரங்கப்படுத்திய ரணில் சர்வ கட்சி அரசாங்கத்தினை அமைக்கும் முயற்சியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (R.Sampanthan) ஈடுபட்டுள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் பேசப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ் மக்களின் நலன்சார்ந்த 10 முக்கிய விடயங்களை நிறைவேற்றுமாறு கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளனர். கூட்டமைப்புக்குள் துரோகிகள்... நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன் பகிரங்கப்படுத்திய ரணில் இதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் வெளியிட்டுள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். இதன்போது கருத்து வெளியிட்ட சிறிதரன், ஜனாதிபதி தெரிவின் போது கூட்டமைப்பினர் டலஸ் அழகப்பெருவிற்கு வாக்களித்திருந்தமையினை சுட்டிக்காட்டியிருந்தார். எனினும் இதனை பொருட்படுத்தாமல் தங்களது கோரிக்கையினை நிறைவேற்றவுள்ளமையினை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார். இதனை எம்.ஏ சுமந்திரன் (M.A.Sumanthiran) மொழி பெயர்த்திருந்தார். கூட்டமைப்புக்குள் துரோகிகள்... நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன் பகிரங்கப்படுத்திய ரணில் இதன்போது பதில் வழங்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனக்கு ஆதரவாக வாக்களித்திருந்ததாக குறிப்பிட்டார். இதன்போது, குறித்த கூட்டத்தில் பங்கேற்றிருந்த கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மௌனம் காத்திருந்தனர். அத்துடன், ஜனாதிபதியின் தேசிய வேலைத்திட்டத்தின் அடிப்படையிலேயே, சர்வ கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பதனை தீர்மானிக்க முடியும் என கூட்டமைப்பினர் ஜனாதிபதியிடம் குறிப்பிட்டிருந்தனர். கூட்டமைப்புக்குள் துரோகிகள்... நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன் பகிரங்கப்படுத்திய ரணில் குறித்த சந்திப்பில் பிரதமர் தினேஸ் குணவர்த்தனவும் பங்கேற்றிருந்தார் என்பதுக் குறிப்பிடத்தக்கது. கூட்டமைப்பினர் ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள் வருமாறு, நீண்டகாலமாக சிறையிலுள்ள தமிழ் அரசியல்கைதிகளில் ஒருதொகுதியினரை மூன்று மாத காலத்திற்குள் முதற்கட்டமாக விடுதலை செய்வது அம்பாறை மாவட்டம், கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை 1991ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமான அறிவித்தலின் பிரகாரம் பிரதேச செயலகமாக தரமுயர்த்துவதுடன் கணக்காளர் ஒருவரையும் நியமித்தல். வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் தனிப்பட்ட காணிகளிலும், பொதுப்பயன்பாட்டுக்குரிய அரச காணிகளிலும் அடாத்தாக முகாமிட்டிருக்கும் இராணுவத்தினருக்கு அக்காணிகளை நிரந்தரமாக வழங்கும் முகமாக, நில அளவைத் திணக்களத்தினால் மேற்கொள்ளப்படும் அளவீட்டுப் பணிகளை உடனடியாக நிறுத்துதல். கூட்டமைப்புக்குள் துரோகிகள்... நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன் பகிரங்கப்படுத்திய ரணில் தொல்பொருள் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை, வனவளத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், கனியவளத் திணைக்களம் உள்ளிட்டவற்றால், வடக்கு, கிழக்கு தமிழர் நிலங்களில் மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்புக்களை உடன் நிறுத்துதல். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக நீக்குதல் மற்றும் அதற்கான நல்லெண்ண சமிக்ஞைகளை முதலில் வெளிப்படுத்தல், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் செயலகத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த உதவுதல். கூட்டமைப்புக்குள் துரோகிகள்... நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன் பகிரங்கப்படுத்திய ரணில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியை நிலைநிறுத்தவும், உண்மையைக் கண்டறிவதற்கும் உடனடி நடவடிக்கை எடுத்தல். வடக்கு, கிழக்கிலுள்ள தனியார் காணிகளிலிருந்து படையினரை வெளியேற்றி, தமது சொந்த நாட்டில் இன்னும் அகதிகளாக உள்ள எமது மக்கள் தமது பூர்வீக நிலங்களில் குடியேற வழிவகை செய்தல். கடந்த எண்பது வருடங்களுக்கு மேலாக இந்த நாட்டில் புரையோடிப்போயுள்ள தமிழர்களின் உரிமைக்கான அரசியல் தீர்வுக்காக, காலதாமதமற்ற உடனடிப்
பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தல்.“உள்ளிட்டவற்றினையே முன்வைத்திருந்தனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?