முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

d 198 மாவீரர் நினைவுகூரல்கள் முன்னெடுப்பு

தடைகளைத் தாண்டி மாவீரர் நினைவுகூரல்கள் முன்னெடுப்பு தமிழர் தாயகத்தில் மாவீரர்களை மான்பேற்றும் வகையில் நினைவுகூரல்கள் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மாவீரர்களின் படங்கள் வைக்கப்பட்டு மக்களினால் உணர்வு பூர்வமாக அஞ்சலிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. தாயக மக்கள் மாவீரர் நாளை உணர்வெழுச்சியுடன் கொண்டாட தயாராகி வரும் நிலையில் பல்வேறு நெருக்கடிகளை சிறிலங்கா காவல்துறை மற்றும் இராணுவத்தினார் ஏற்படுத்தி வருகின்றனர். இருப்பினும் தடைகளை தாண்டி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நல்லூர் தடைகளைத் தாண்டி மாவீரர் நினைவுகூரல்கள் முன்னெடுப்பு | Fourth Day Of Maaveerar Naal Week Update நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்களுக்கு மக்கள் நான்காம் நாளாக இன்றும் அஞ்சலி செலுத்தியுள்ளனர். பருத்தித்துறை தடைகளைத் தாண்டி மாவீரர் நினைவுகூரல்கள் முன்னெடுப்பு | Fourth Day Of Maaveerar Naal Week Update பருத்தித்துறையில் மாவீரர்களை நினைவு கூரும் வகையில் நினைவாலயம் அமைக்கப்பட்ட நிலையில் மக்கள் தொடர்ந்தும்

d 197 கனடாவில் மனைவியை கொன்ற இலங்கை தமிழர்

கனடாவில் மனைவியை கொன்ற இலங்கை தமிழர் - விசாரணையில் வெளியான பகீர் தகவல் கனடாவிற்கு புலம்பெயரும் நோக்குடனேயே தன்னை தர்ஷிகா திருமணம் செய்ததாக தனது மனைவியான தர்ஷிகாவை கொலை செய்த இலங்கைத் தமிழரான தனபாலசிங்கம் தெரிவித்துள்ளார். கனடாவில் 2019ல், பிரிந்த தனது மனைவியை வெட்டி கொன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். வழக்கு விசாரணை ஆரம்பம் கனடாவில் மனைவியை கொன்ற இலங்கை தமிழர் - விசாரணையில் வெளியான பகீர் தகவல் | Sri Lankan Tamil Who Killed His Wife In Canada இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அவர் மீதான வழக்கு விசாரணை ஆரம்பமானது. நேற்றைய விசாரணையின் போது காவல்துறையினர் தனபாலசிங்கத்திடம் நடத்திய விசாரணை தொடர்பான காணொளி நீதிமன்றத்தில் காட்டப்பட்டது. 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் திகதி சசிகரன் தனபாலசிங்கம் என்பவர் பிரிந்து வாழ்ந்து வந்த தன் மனைவி தர்ஷிகா ஜெகன்நாதன் என்பவரை வாளால் வெட்டி கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். அதில் விசாரணை அதிகாரி கெரி பெர்ணாண்டஸிடம் தமிழ் மொழிபெயர்ப்பாளர் ஒர

d 196 மனைவியை மீட்டுத்தாருங்கள்;

மனைவியை மீட்டுத்தாருங்கள்; யாழில் முறைப்பாடு அளித்த கிளிநொச்சி கணவர் ! சவுதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாக சென்ற தனது மனைவியினை மீட்டுத்தருமாறு கோரி இளம் கணவர், யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கன்சீயூலர் அலுவலகத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். அம்பாள் நகர் சாந்தபுரம் கிளிநொச்சி சேர்ந்த வடிவேல் லிங்கேஷ்வரன் என்ற இளம் குடும்பஸ்தர் தனது மனைவியை மீட்டுத் தருமாறு கோரியுள்ளார். மனைவியை மீட்டுத்தாருங்கள்; யாழில் முறைப்பாடு அளித்த கிளிநொச்சி கணவர்! | Redeem The Wife Kilinochchi Husband Filed பொருளாதார நெருக்கடி திருமணம் செய்து ஒன்றரை வருடங்கள் கடந்த நிலையில் பொருளாதார நெருக்கடி காரணமாக ஏஜென்சி மூலம் தனது மனைவி மத்திய கிழக்கு நாடான சவுதி அரேபியாவிற்கு பணிப்பெண்ணாக சென்றதாகவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் தனது மனைவி , தற்போது அங்கு பல்வேறு துன்புறுத்தல்கள் ஒழுங்கான உணவு வழங்கப்படாமை போன்ற பல்வேறு துயரங்களை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மனைவியை மீட்டுத்தாருங்கள்; யாழில் முறைப்பாடு அளித்த கிளிநொச்சி கணவர்! | Redeem The Wife Kilinochchi Husband Filed அத்துடன், குடும்பத

d 195 இலங்கை தமிழர் அவுஸ்திரேலியாவில் பரிதாப மரணம்

இலங்கை தமிழர் அவுஸ்திரேலியாவில் பரிதாப மரணம் இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் உயிரிழந்துள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகமொன்று தெரிவித்துள்ளது. சாமி என அழைக்கப்படும் கந்தசாமி அழகையா என்ற 44 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் நவம்பர் 20ம் திகதி மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். பத்து வருடத்திற்கு முன்னர் சென்ற சாமி இலங்கை தமிழர் அவுஸ்திரேலியாவில் பரிதாப மரணம் | Sri Lankan Tamils Death In Australia சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையிலிருந்து புகலிடம்கோரி அவுஸ்திரேலியா வந்த சாமி, நிரந்தர பாதுகாப்பு விசாவிற்காக விண்ணப்பித்திருந்ததாகவும், இறுதிவரை அந்த விசா கிடைக்காத நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாகவும் நண்பர்கள் தெரிவித்தனர். இதுவரை கிடைக்காத நிரந்தர விசா இலங்கை தமிழர் அவுஸ்திரேலியாவில் பரிதாப மரணம் | Sri Lankan Tamils Death In Australia சாமியின் மனைவியும்,மகளும் இலங்கையில் வாழ்ந்து வருவதாகவும் அவர்களைப் பார்த்துக்கொள்ளவென அவர் கடினமாக உழைத்ததாகவும், தனக்கான பாதுகாப்பு விசா கிடைத்த பின்னர், அவர்க

d 194 இளைஞன்! தேடும் பணி தீவிரம்

யாழில் திடீரென பாலத்தில் வீழ்ந்து மாயமான இளைஞன்! தேடும் பணி தீவிரம் யாழ்ப்பாணம் - அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வல்லை பாலத்தின் மீது அமர்ந்திருந்து தூண்டில் மூலம் மீன்பிடித்துக் கொண்டிருந்து இளைஞன் ஒருவர் தவறி பாலத்தில் வீழ்ந்துள்ளார். இச்சம்பவம் இன்றையதினம் (22-12-11-2022) இடம்பெற்றுள்ளது. யாழில் திடீரென பாலத்தில் வீழ்ந்து மாயமான இளைஞன்! தேடும் பணி தீவிரம் | Youth Missing Suddenly Falls On A Bridge In Jaffna மேலும் இச்சம்பவத்தில் புத்தூர் - சுலைமதி பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரே இவ்வாறு பாலத்தில் தவறி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. யாழில் திடீரென பாலத்தில் வீழ்ந்து மாயமான இளைஞன்! தேடும் பணி தீவிரம் | Youth Missing Suddenly Falls On A Bridge In Jaffna இதன்போது அவருடன் சேர்ந்து மீன்பிடித்துக் கொண்டிருந்து இளைஞர்களை, மக்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

ஆரம்பமானது நினைவேந்தல்

தீவகம் சாட்டி துயிலுமில்லத்தில் உணர்வுபூர்வமாக ஆரம்பமானது நினைவேந்தல் யாழ்ப்பாணம் தீவகம் சாட்டி மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் வார ஆரம்ப நாள் நினைவேந்தல் நேற்று (21) உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. பொதுச் சுடரினை மூன்று மாவீரர்களின் தாய் ஏற்றி வைத்தார். தீவக சாட்டி நினைவேந்தல் ஏற்பாட்டு குழுவினரால் நினைவேந்தல் முன்னெடுக்கப்படுவதுடன், பொதுமக்கள் உணர்வுபூர்வமாக தமது அஞ்சலிகளை செலுத்தினர்.

d 192 மாவீரர் வாரம் இன்று ஆரம்பம்

மாவீரர் வாரம் இன்று ஆரம்பம் - யாழ் பல்கலையில் நினைவேந்தல் மாவீரர் வாரம் மாவீரர் வாரம் திங்கட்கிழமை(21) ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் தின முதல் நாள் நினைவேந்தல் ஆரம்பமானது. இதன்போது பல்கலைக்கழக மாணவர்களால் மாவீரர் தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அந்தவகையில், பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மாவீரர் நினைவுத்தூபிப் பகுதி பல்கலைக்கழக மாணவர்களால் வர்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளதுடன் தூபியைச்சுற்றி சிவப்பு மஞ்சள் நிறத்திலான வர்ணக்கொடிகள் கட்டப்பட்டுள்ளது. கார்த்திகை 27 ஆம் திகதி மாவீரர் வாரம் இன்று ஆரம்பம் - யாழ் பல்கலையில் நினைவேந்தல் | Heroes Week Begins Photos Jaffna தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் திங்கட்கிழமை(21) ஆரம்பமானது. விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரை போராட்டக்களத்தில் தியாகம் செய்தவர்கள் நினைவாக, கார்த்திகை 27 ஆம் திகதி, மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.