தடைகளைத் தாண்டி மாவீரர் நினைவுகூரல்கள் முன்னெடுப்பு
தமிழர் தாயகத்தில் மாவீரர்களை மான்பேற்றும் வகையில் நினைவுகூரல்கள் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மாவீரர்களின் படங்கள் வைக்கப்பட்டு மக்களினால் உணர்வு பூர்வமாக அஞ்சலிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
தாயக மக்கள் மாவீரர் நாளை உணர்வெழுச்சியுடன் கொண்டாட தயாராகி வரும் நிலையில் பல்வேறு நெருக்கடிகளை சிறிலங்கா காவல்துறை மற்றும் இராணுவத்தினார் ஏற்படுத்தி வருகின்றனர்.
இருப்பினும் தடைகளை தாண்டி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நல்லூர்
தடைகளைத் தாண்டி மாவீரர் நினைவுகூரல்கள் முன்னெடுப்பு | Fourth Day Of Maaveerar Naal Week Update
நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்களுக்கு மக்கள் நான்காம் நாளாக இன்றும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
பருத்தித்துறை
தடைகளைத் தாண்டி மாவீரர் நினைவுகூரல்கள் முன்னெடுப்பு | Fourth Day Of Maaveerar Naal Week Update
பருத்தித்துறையில் மாவீரர்களை நினைவு கூரும் வகையில் நினைவாலயம் அமைக்கப்பட்ட நிலையில் மக்கள் தொடர்ந்தும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
யாழ் பல்கலைக்கழகம்
தடைகளைத் தாண்டி மாவீரர் நினைவுகூரல்கள் முன்னெடுப்பு | Fourth Day Of Maaveerar Naal Week Update
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியில் இன்றும் மாணவர்கள் மலர் தூவி அஞ்சலி நிகழ்வுகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, மாவீரர் நினைவு வாரத்தை கடைப்பிடிக்கும் முகமாக வடக்கு கிழக்கு பகுதிகளில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் துயிலுமில்ல துப்பரவுப் பணிகள், மாவீரர் தின நினைவேந்தல் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
e 129 இப்படியான அறிக்கை வந்தால் சீனா காப்பல் இலங்கையில் நிக்கின்றது என்பது அதின் பொருள் அறிக்கை வரவில்லை என்றால் இலங்கைக்குப் கப்பல்போகவில்லை ஆனால் இத்திய அமைதியாக இருக்கிறது என்பது அதின் பொருள்?
துவாரகா தொடர்பாக விடுதலைப் புலிகளின் பெயரில் வெளிவரும் பொய் அறிக்கைகள்!! விலை போபவர்களின் தொகை அதிகரிப்பு, By Gokulan 2 மணி நேரம் முன் 0 SHARES விளம்பரம் அண்மைக்காலமாக விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறையின் பெயரிலும், அந்த அமைப்பின் வேறு சில கட்டமைப்புகளின் பெயர்களிலும் வெளியிடப்பட்டுவருகின்ற 'போலி' அறிக்கைகள் புலம்பெயர் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி வருவகின்றன. குறிப்பாக தலைவர் பிரபாகரன், அவரது மனைவி மற்றும் மகள் துவாரகா போன்றோர் உயிருடன் இருப்பதாகக் கூறி அந்தப் போலி அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு சமூக ஊடகங்கள் மத்தியில் உலாவ விடப்பட்டு வருகின்றன. ஊடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற அந்த அறிக்கைகளில் இடப்பட்டுள்ள கையொப்பங்களுக்கு உரியவர்களை உறுதிப்படுத்தத் தொடர்புகொண்டபோதுதான் அந்த அறிக்கைகள் அனைத்தும் போலியானவை என்று தெரியவந்தது. புலம்பெயர் தமிழ் மக்களை ஒரு குழப்பநிலைக்குள் வைத்திருக்கும் நோக்கத்துடனும், ஒரு முக்கியஸ்தர்களினது இருப்புத் தொடர்பான ஒரு போலி பிம்பத்தைக் கட்டமைக்கும் நோக்கத்துடனும், புலம்பெயர் மக்களைக் குறிவைத்து ஒரு சதி நகர்வொன்றை மேற்கொள்ளும் ந
கருத்துகள்